பாடம்: 27
பொய் சொல்வது தடை செய்யப்பட்டது என்பது குறித்தும், அனுமதிக்கப்பட்ட பொய் எது என்பது குறித்தும் விளக்கம்.
ஹுமைத் பின் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்த முதலாம் முஹாஜிர்களில் ஒருவரான என் தாயார் உம்மு குல்ஸூம் பின்த் உக்பா பின் அபீமுஐத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(பரஸ்பரம் பிணக்கு கொண்ட இருதரப்பாரிடம் நல்லதைப் புனைந்து கூறி) மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவர் பொய்யர் அல்லர். அவர் நல்லதையே சொல்கிறார்; நன்மையையே எடுத்துரைக்கிறார்” என்று கூறுவதை நான் கேட்டேன்.
இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
மக்கள் பேசும் பொய்களில் எதற்கும் (மார்க்கத்தில்) அனுமதியுள்ளதாக நான் கேள்விப்படவில்லை; மூன்று விசங்களுக்கு கூறும் பொய்களைத் தவிர!
1. போர் (தந்திரத்திற்காகச் சொல்லப்படும் பொய்).
2. மக்களிடையே சமாதானத்தை உருவாக்குவதற்காகச் சொல்லப்படும் பொய்.
3. (குடும்ப ஒற்றுமைக்காக) கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் சொல்லும் பொய்.
மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், ஸாலிஹ் பின் கைஸான் அவர்களது அறிவிப்பில், “உம்மு குல்ஸூம் (ரலி) அவர்கள், “மக்கள் பேசும் பொய்களில் மூன்றைத் தவிர வேறெதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளித்ததை நான் கேட்டதில்லை; (மேற்கண்ட) மூன்று விஷயங்களில் தவிர” என்று கூறினார்கள்” என இடம்பெற்றுள்ளது.
மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் “அவர் நன்மையையே எடுத்துரைக்கிறார்” என்பது வரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ளவை இடம்பெறவில்லை.
அத்தியாயம்: 45
(முஸ்லிம்: 5079)27 – بَابُ تَحْرِيمِ الْكَذِبِ وَبَيَانِ مَا يُبَاحُ مِنْهُ
حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّ أُمَّهُ أُمَّ كُلْثُومٍ بِنْتَ عُقْبَةَ بْنِ أَبِي مُعَيْطٍ، وَكَانَتْ مِنَ الْمُهَاجِرَاتِ الْأُوَلِ، اللَّاتِي بَايَعْنَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَخْبَرَتْهُ، أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ يَقُولُ
«لَيْسَ الْكَذَّابُ الَّذِي يُصْلِحُ بَيْنَ النَّاسِ، وَيَقُولُ خَيْرًا وَيَنْمِي خَيْرًا»
قَالَ ابْنُ شِهَابٍ: وَلَمْ أَسْمَعْ يُرَخَّصُ فِي شَيْءٍ مِمَّا يَقُولُ النَّاسُ كَذِبٌ إِلَّا فِي ثَلَاثٍ: الْحَرْبُ، وَالْإِصْلَاحُ بَيْنَ النَّاسِ، وَحَدِيثُ الرَّجُلِ امْرَأَتَهُ وَحَدِيثُ الْمَرْأَةِ زَوْجَهَا
– حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُسْلِمِ بْنِ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ بْنِ شِهَابٍ، بِهَذَا الْإِسْنَادِ، مِثْلَهُ، غَيْرَ أَنَّ فِي حَدِيثِ صَالِحٍ: وَقَالَتْ: وَلَمْ أَسْمَعْهُ يُرَخِّصُ فِي شَيْءٍ مِمَّا يَقُولُ النَّاسُ إِلَّا فِي ثَلَاثٍ، بِمِثْلِ مَا جَعَلَهُ يُونُسُ، مِنْ قَوْلِ ابْنِ شِهَابٍ.
– وَحَدَّثَنَاهُ عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الْإِسْنَادِ، إِلَى قَوْلِهِ: «وَنَمَى خَيْرًا» وَلَمْ يَذْكُرْ مَا بَعْدَهُ
Muslim-Tamil-5079.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-2605.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-4723.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இந்தச் செய்தியின் இரண்டாவது பகுதி மேற்கண்டவாறு யூனுஸ் அவர்கள் வழியாக ஸுஹ்ரீ அவர்களின் சொல்லாக வந்துள்ளது.
2 . சில செய்திகளில் உம்மு குல்ஸூம் பின்த் உக்பா (ரலி) கூறியதாக வந்துள்ளது.
3 . இன்னும் சில செய்திகளில் ஸுஹ்ரீ அவர்களின் சொல் நபியின் சொல் போன்று (முத்ரஜ் ஆக) வந்துள்ளது.
இங்கு முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் இந்த தகவலையே குறிப்பிட விரும்புகிறார்.
ஸுஹ்ரீ அவர்கள் ஃபிக்ஹ் துறையிலும் சிறந்து விளங்கியவர் என்பதால் சில நேரம் ஹதீஸ்களுக்கு விளக்கமளிப்பார். இதை சிலர் நபியின் சொல்லாக விளங்கிவிடுவார்கள்.
இந்தச் செய்தியை ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் மஃமர், மாலிம் இமாம், இப்னு உயைனா, ஷுஐப் பின் தீனார் போன்ற இன்னும் பலரும் இந்தச் செய்தியின் முதல் பகுதியை மட்டும் அறிவித்துள்ளனர். இவர்களில் யூனுஸ் பின் யஸீத் அவர்கள் மேற்கண்டவாறு இரண்டாவது பகுதியை ஸுஹ்ரீ அவர்களின் சொல்லாக அறிவித்துள்ளார்.
علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (15/ 358)
4062- وسئل عن حديث أم كلثوم بنت عقبة، والدة حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، عَنْ النبي صلى الله عليه وسلم: ليس بكاذب من أصلح بين الناس فقال خيرا أو نمى خَيْرًا.
فَقَالَ: يَرْوِيهِ الزُّهْرِيُّ، وَاخْتُلِفَ عَنْهُ؛
1 . فَرَوَاهُ أَيُّوبُ، وَمَعْمَرٌ، وَمَالِكٌ، وَعُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي زِيَادٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ، وَسُفْيَانُ بْنُ حُسَيْنٍ، وابن عيينة، وعبد الرحمن بن يزيد بن أبي حبيب، عن الزهري، وزاد كلمة لم يأت بها غيره، قال: ثم تلا هذه الآية: {ولا تجعلوا الله عرضة لأيمانكم} البقرة: 224 الآية.
2 . ورواه الزبيدي، وصالح بن كيسان، وشعيب بن أبي حمزة، والجراح بن المنهال، عن الزهري، بهذا الإسناد، وزاد فيه: قال: ولم يرخص في شيء مما يقول الناس إنه كذب إلا في ثلاث ويقال: إن هذا ليس مِنْ حَدِيثِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَإِنَّمَا هُوَ من كلام الزهري، ومن قال فيه: قالت: ولم يرخص … فقد وهم، وإنما هو قال … يعني الزهري.
وكذلك روي عن يعقوب بن عطاء، عن الزهري وكذلك رواه إسماعيل بن عياش، وعمرو بن قيس، عن الزهري
وروى هذا الحديث عبد الوهاب بن أبي بكر، عن الزهري، عن حميد، عن أمه، أنها سمعت النبي صلى الله عليه وسلم: لا يرخص في شيء من الكذب إلا في ثلاث كان النبي صلى الله عليه وسلم لا يعده كذبا، وذكر الثلاثة، وهذا منكر، ولم يأت بالحديث المحفوظ الذي عند الناس.
ورواه ابن جريج، عن الزهري، في نحو رواية عبد الوهاب، فإنه روى عنه حديث غير هذا.
وقيل: عن ابن جريج في هذا حدثت عن الزهري، فدل على صحة ما قلناه.
وَرَوَاهُ مُعَاوِيَةُ بْنُ يَحْيَى الصَّدَفِيُّ، عَنِ الزُّهْرِيِّ، فوهم في إسناده جعله عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، عن أمه.
والصحيح أنه عن حميد بن عبد الرحمن.
ورواه جعفر بن برقان، واختلف عنه؛
فرواه كثير بن هشام، عن جعفر، عن الزهري، عن أم كلثوم، مرسلا؛
وخالفه زهير بن معاوية.
رواه عن جعفر بن برقان، عن ميمون بن مهران، عن أم كلثوم، واختلف عن صالح بن كيسان؛
فرواه إبراهيم، عنه عن الزهري، عن حميد، عن أمه؛
وخالفه أسامة بن زيد، فقال: عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عن أم كلثوم.
والصحيح: حديث أيوب السختياني، ومن تابعه.
…(ஸுஹ்ரீ அவர்களின் மாணவர்களில் யூனுஸ் மிக பலமானவர் என்பதால்) மேற்கண்ட செய்தியின் இரண்டாவது பகுதி ஸுஹ்ரீ அவர்களின் சொல் என்பதே உண்மை என தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் கூறியுள்ளார். இதை ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து அப்துல்வஹ்ஹாப் பின் அபூபக்ர் அவர்கள் நபியின் சொல்லாக அறிவித்திருப்பது தவறு-முன்கர் என்றும் கூறியுள்ளார்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-4062, அவ்ஹாமுல் முஹத்திஸீன்-3/643-648)
இதை தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்களுக்கு முன் மூஸா பின் ஹாரூன், நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
போன்றோரும் கூறியுள்ளனர். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்களும் இதைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள், அப்துல்வஹ்ஹாப் முத்ரஜ் ஆக அறிவிக்கும் செய்தியை சரியானது என்கிறார். இதற்கு காரணம் இப்னு ஜுரைஜ், ஸாலிஹ் பின் கைஸான் ஆகியோரும் இவர் போன்று அறிவித்துள்ளனர். மூன்று பலமானவர்கள் இதை நபியின் சொல்லாக அறிவித்துள்ளதால் இதை நபியின் சொல் என்று முடிவு செய்கிறார்..
سلسلة الأحاديث الصحيحة وشيء من فقهها وفوائدها (2/ 85):
وأقول: لا وهم منه البتة، فإنه ثقة صحيح الحديث كما تقدم وقد تابعه ثقتان
ابن جريج وصالح بن كيسان واقتصر الأول منهما على الزيادة أيضا كما سبق بيانه
فهؤلاء ثلاثة من الثقات الأثبات اتفقوا على رفع هذه الزيادة، فصلها اثنان
منهما عن أول الحديث ووصلها به الآخر وهو صالح، فاتفاقهم حجة وذلك يدل على
أنها مرفوعة ثابتة وأنها ليست مدرجة كما زعم الحافظ …
நான் கூறுகிறேன்: (இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் கூறியிருப்பது போன்று) இதில் அப்துல்வஹ்ஹாப் அவர்களிடமிருந்து எந்தத் தவறும் நிகழவில்லை. ஏனெனில், அவர் ஏற்கனவே கூறப்பட்டது போல பலமானவர்; மற்றும் சரியான செய்திகளை அறிவிப்பவர் ஆவார். இப்னு ஜுரைஜ், ஸாலிஹ் பின் கைஸான் ஆகிய இரு பலமான அறிவிப்பாளர்களும் அவரைப் போன்றே அறிவித்துள்ளனர். இதில் முதலாமவர் (அதாவது இப்னு ஜுரைஜ் அவர்கள்) ஏற்கனவே விளக்கப்பட்டதைப் போல அந்த கூடுதல் தகவலை மட்டும் தனியாக (சுருக்கி) அறிவித்துள்ளார்.
ஆகவே, மிக உறுதியான இந்த மூன்று அறிவிப்பாளர்களும் இந்தக் கூடுதல் தகவலை நபிகளாருடன் இணைத்து அறிவிப்பதில் ஒன்றுபட்டுள்ளனர். அவர்களில் இருவர் இதனை ஹதீஸின் ஆரம்பப் பகுதியிலிருந்து பிரித்து (இரண்டாவது பகுதியை மட்டும்) அறிவித்துள்ளனர்; மற்றொருவரான ஸாலிஹ், இதனை முதல் பகுதியுடன் இணைத்து அறிவித்துள்ளார். இவர்களின் ஒருமித்த கருத்து ஒரு வலுவான ஆதாரமாகும். இந்த கூடுதல் தகவல் நபிகளார் வழியாக உறுதிசெய்யப்பட்ட ஒன்று என்பதையும், அறிஞர் (இப்னு ஹஜர்) கருதுவது போல இது இடையில் சேர்க்கப்பட்ட தகவல் அல்ல என்பதையும் இது தெளிவுபடுத்துகிறது.”
(நூல்: ஸஹீஹா-545)
இதற்கு கூறப்படும் பதில்:
1 . இப்னு ஜுரைஜ் அவர்கள் இந்தச் செய்தியை ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து நேரடியாக கேட்கவில்லை. ஏனெனில் சில அறிவிப்புகளில், “ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து எனக்கு அறிவிக்கப்பட்டது” என்று இப்னு ஜுரைஜ் கூறியுள்ளார்.
2 . ஸாலிஹ் பின் கைஸான் அவர்களை விட யூனுஸ் பின் யஸீத் மிகப் பலமானவர். நல்ல நினைவாற்றல் உள்ளவர். மேலும் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் ஸாலிஹ் பின் கைஸான் வழியாக முதல் பகுதியை மட்டுமே பதிவு செய்துள்ளார்.
(நூல்: அவ்ஹாமுல் முஹத்திஸீன்-3/643-648)
1 . இந்தக் கருத்தில் உம்மு குல்ஸூம் பின்த் உக்பா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
…
பார்க்க: … அஹ்மத்-27271, 27272, 27273, 27275, 27277, 27278, 27279, புகாரி-2692, அல்அதபுல் முஃப்ரத்-385, முஸ்லிம்-5079, அபூதாவூத்-4920, 4921, திர்மிதீ-1938, குப்ரா நஸாயீ-8588, 9074, 9075, 9076, …
2 . அஸ்மா பின்த் யஸீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-1939.
…
நூல்: அல்இலலுல் வாரிதா-4062 என்று குறிப்பிட்டுள்ளீர்கள் இதன் அரபி மூலத்தையும் பதியவும்,
இதே போல் ஹதீஸ் கலை இமாம்கள் கூறும் காரணங்களை அதன் அரபி மூலம் மற்றும் நூல் ஆகியவற்றை குறிப்பிட்டால் பயனுள்ளதாக இருக்கும். ஆதாரபூர்வமாகவும் இருக்கும்.
ஜஸாகல்லாஹு கைரா, சில இடங்களில் விரிவாக குறிப்பிடும் போது ஆய்வுத் தகவலையும், மற்ற அறிஞர்களின் விளக்கத்தையும் அரபு மூலத்துடன் குறிப்பிடுகிறோம். சில இடங்களில் இது போன்று சுருக்கமாக இருக்கும். இன்ஷா அல்லாஹ் அவைகளை முழு ஆய்வுக்கு எடுக்கும்போது அல்லது அது குறித்து யாரும் விளக்கம் கேட்கும்போது இன்ஷா அல்லாஹ் முழு தகவலையும் அரபு மூலத்துடன் பதிவு செய்வோம்.
இந்த பதில் தாமதமானதற்கு மன்னிக்கவும்.