1031. “வாகனத்தில் செல்பவர் ஜனாஸாவின் பின்னால் செல்ல வேண்டும்; நடந்து செல்பவர் விரும்பியவாறு செல்லலாம். சிறுவர்களுக்கும் ஜனாஸா தொழுகை நடத்தப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஃகீரா பின் ஷுஅபா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும். இந்தச் செய்தியை ஸயீத் பின் உபைதுல்லாஹ் அவர்களிடமிருந்து இஸ்ராயீலும் மற்றவர்களும் அறிவித்துள்ளனர்.
நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் மற்றும் பிற அறிஞர்களில் சிலர் இதன் அடிப்படையில் அமல்படுத்தியுள்ளனர். அவர்கள் கூறுகிறார்கள்: ‘குழந்தை பிறந்து அழவில்லை என்றாலும், அது உருவாக்கப்பட்டது (உயிர் பெற்றது) என அறிந்தால், அதற்கு ஜனாஸாத் தொழுகை நடத்த வேண்டும். மேலும் இதுவே அஹ்மத் (ரஹ்), இஸ்ஹாக் (ரஹ்) ஆகியோரின் கருத்தும் ஆகும்.
حَدَّثَنَا بِشْرُ بْنُ آدَمَ ابْنُ بِنْتِ أَزْهَرَ السَّمَّانِ البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ سَعِيدِ بْنِ عُبَيْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ زِيَادِ بْنِ جُبَيْرِ بْنِ حَيَّةَ، عَنْ أَبِيهِ، عَنْ المُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«الرَّاكِبُ خَلْفَ الجَنَازَةِ، وَالمَاشِي حَيْثُ شَاءَ مِنْهَا، وَالطِّفْلُ يُصَلَّى عَلَيْهِ»
هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ رَوَاهُ إِسْرَائِيلُ، وَغَيْرُ وَاحِدٍ، عَنْ سَعِيدِ بْنِ عُبَيْدِ اللَّهِ،
” وَالعَمَلُ عَلَيْهِ عِنْدَ بَعْضِ أَهْلِ العِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَغَيْرِهِمْ قَالُوا: يُصَلَّى عَلَى الطِّفْلِ، وَإِنْ لَمْ يَسْتَهِلَّ بَعْدَ أَنْ يُعْلَمَ أَنَّهُ خُلِقَ، وَهُوَ قَوْلُ أَحْمَدَ، وَإِسْحَاقَ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-952.
Tirmidhi-Shamila-1031.
Tirmidhi-Alamiah-952.
Tirmidhi-JawamiulKalim-952.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் பிஷ்ர் பின் ஆதம் பற்றி அபூஹாத்திம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
போன்றோர் பலமானவர் அல்ல என்று கூறியுள்ளனர்…
மேலும் பார்க்க: அபூதாவூத்-3180.
சமீப விமர்சனங்கள்