தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3581

 

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

‘லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்’ என்பதின் சிறப்பு.

3581. கைஸ் பின் ஸஃத் பின் உபாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனது தந்தை நான் நபி (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்வதற்காக ஒப்படைத்திருந்தார். ஒரு தடவை நான் தொழுது முடித்திருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள் தமது காலால் என்னை மெதுவாகத் தட்டிவிட்டு, “சொர்க்கத்தின் வாசல்களில் ஒரு வாசலை நான் உனக்கு அறிவிக்கட்டுமா?’ என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘நிச்சயமாக (அறிவியுங்கள், அல்லாஹ்வின் தூதரே!)’ என்றேன். அதற்கு அவர்கள், “அது தான் ‘லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்’ (அல்லாஹ்வின் உதவியின்றிப் பாவம் செய்யவோ நற்செயல் புரியவோ எந்தச் சக்தியும் இல்லை) ஆகும்” என்று கூறினார்கள்.

(திர்மிதி: 3581)

بَاب فِي فَضْلِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

حَدَّثَنَا أَبُو مُوسَى مُحَمَّدُ بْنُ المُثَنَّى قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: سَمِعْتُ مَنْصُورَ بْنَ زَاذَانَ يُحَدِّثُ، عَنْ مَيْمُونِ بْنِ أَبِي شَبِيبٍ، عَنْ قَيْسِ بْنِ سَعْدِ بْنِ عُبَادَةَ، أَنَّ أَبَاهُ دَفَعَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْدُمُهُ، قَالَ:

فَمَرَّ بِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ صَلَّيْتُ فَضَرَبَنِي بِرِجْلِهِ وَقَالَ: «أَلَا أَدُلُّكَ عَلَى بَابٍ مِنْ أَبْوَابِ الجَنَّةِ؟» قُلْتُ: بَلَى؟ قَالَ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ»

هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3581.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.