3660. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கின்தார் என்பது 12 ஆயிரம் ஊக்கியாவாகும். அதில் ஒவ்வொரு ஊக்கியாவும் வானம், பூமிக்கு இடைப்பட்டவைகளை விடவும் சிறந்ததாகும்.
மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதனுக்கு மறுமையில் அந்தஸ்து உயர்த்தப்படும். உடனே அவன் இது எதனால் என்று கேட்பான். அப்போது உனக்காக உன் குழந்தை பாவமன்னிப்புக் கேட்டதால் (உனக்கு இந்த அந்தஸ்து கிடைத்தது)” என்று கூறப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«الْقِنْطَارُ اثْنَا عَشَرَ أَلْفَ أُوقِيَّةٍ، كُلُّ أُوقِيَّةٍ خَيْرٌ مِمَّا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ»
وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ الرَّجُلَ لَتُرْفَعُ دَرَجَتُهُ فِي الْجَنَّةِ فَيَقُولُ: أَنَّى هَذَا؟ فَيُقَالُ: بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-3560.
Ibn-Majah-Shamila-3660.
Ibn-Majah-Alamiah-3560.
Ibn-Majah-JawamiulKalim-3658.
அஸ்ஸலாமு_அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி_வபரகாத்தஹு
ளயீஃப் எதனால் என்ற விவரம் போடல
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி, வபரகாத்தஹு.
மேலும் பார்க்க: அஹ்மத்-10610. இது போன்று ஒரு ஹதீஸின் அடிக்குறிப்பில் இருந்தால் அது தான் மெயின் ஹதீஸ். அதில் விவரம் இருக்கும்.