தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-10610

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் நல்ல அடியானுக்கு சொர்க்கத்தில் அந்தஸ்தை உயர்த்துவான். அப்போது அந்த அடியான், “என் இறைவா இது எனக்கு எப்படிக் கிடைத்தது?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “உனக்காக உன் குழந்தை பாவமன்னிப்புக் கேட்டதால் (உனக்கு இந்த அந்தஸ்து கிடைத்தது)” என்று கூறுவான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 10610)

حَدَّثَنَا يَزِيدُ، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَيَرْفَعُ الدَّرَجَةَ لِلْعَبْدِ الصَّالِحِ فِي الْجَنَّةِ، فَيَقُولُ: يَا رَبِّ، أَنَّى لِي هَذِهِ؟ فَيَقُولُ: بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-10202.
Musnad-Ahmad-Shamila-10610.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-10390.




إسناده حسن رجاله ثقات عدا عاصم بن أبي النجود الأسدي وهو صدوق حسن الحديث ، رجاله رجال البخاري عدا عاصم بن أبي النجود الأسدي روى له البخاري مقرونًا بغيره وحماد بن سلمة البصري روى له البخاري تعليقًا

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-20386-ஆஸிம் பின் பஹ்தலா- ஆஸிம் பின் அபுன் நஜூத் நம்பகமானவர் என்றாலும் நினைவாற்றலில் குறையுள்ளவர் என உகைலீ,பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    போன்ற சில அறிஞர்கள் கூறியுள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.2/250 )
  • மேலும் இவரின் ஆசிரியர்களைக் கவனித்தும், மற்ற பலமானவர்களின் அறிவிப்புடன் ஒப்பிட்டு பார்த்தே இவரின் செய்தி சரியானது என முடிவு செய்யவேண்டும், தனித்து அறிவிக்கும் செய்திகளை ஏற்கக் கூடாது என சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.
  • மேலும் இவர் அபூஸாலிஹ் வழியாக அறிவிக்கும் செய்திகள் விமர்சனத்திற்குரியவையாக உள்ளன. இந்தக் கருத்தை ஆரம்பகால ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறவில்லையென்றாலும் உண்மை அது தான் என தற்கால ஹதீஸ்கலை அறிஞர் அப்துல்லாஹ் ஸஃத் அவர்கள் கூறியுள்ளார்.
  • மேற்கண்ட செய்தியை அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள், ஹஸன் தரம் எனக் கூறியுள்ளார். (நூல்: அஸ்ஸஹீஹா-1598)

1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-12081 , 29740 , அஹ்மத்-10610 , இப்னு மாஜா-3660 , முஸ்னத் பஸ்ஸார்-9024 , அல்முஃஜமுல் அவ்ஸத்-5108 , குப்ரா பைஹகீ-13459 ,

2 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : அல்முஃஜமுல் அவ்ஸத்-1894 ,

3 . ஸயீத் பின் முஸய்யப் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : மாலிக்-578 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-12082 , 29739 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.