أَنَّ كَعْبَ بْنَ عُجْرَةَ، أَدْرَكَهُ وَهُوَ يُرِيدُ الْمَسْجِدَ أَدْرَكَ أَحَدُهُمَا صَاحِبَهُ، قَالَ: فَوَجَدَنِي وَأَنَا مُشَبِّكٌ بِيَدَيَّ، فَنَهَانِي عَنْ ذَلِكَ وَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فَأَحْسَنَ وُضُوءَهُ، ثُمَّ خَرَجَ عَامِدًا إِلَى الْمَسْجِدِ فَلَا يُشَبِّكَنَّ يَدَيْهِ فَإِنَّهُ فِي صَلَاةٍ»
பாடம்: 194
தொழுகைக்கு நடந்து செல்லும் வழிமுறை.
562. அபூஸுமாமா அல்ஹன்னாத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள், நான் பள்ளிவாசலுக்குச் செல்லும் வழியில் என்னை சந்தித்தார்கள்.
நான் பள்ளிவாசலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, கைகளை கோத்தவாறு இருந்தேன். கஅப் (ரலி) அவர்கள் என்னைக் கண்டதும், அவ்வாறு செய்ய வேண்டாமெனத் தடுத்தார்கள்.
பின்னர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில் ஒருவர் உளூ செய்து, அதை அழகுறச் செய்து, பின்னர் பள்ளிவாசலை நாடிச் சென்றால், அவர் தம் இரு கைகளையும் கோத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில், அவர் தொழுகையில்தான் இருக்கிறார்’” என்று சொன்னார்கள்…