பாடம்: 194
தொழுகைக்கு நடந்து செல்லும் வழிமுறை.
அபூஸுமாமா அல்ஹன்னாத் என்பவர் கூறியதாவது:
கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள், நான் பள்ளிவாசலுக்குச் செல்லும் வழியில் என்னை சந்தித்தார்கள். நான் பள்ளிவாசலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, கைகளை கோர்த்தவாறு இருந்தேன். கஅப் (ரலி) அவர்கள் என்னைக் கண்டதும், அவ்வாறு செய்ய வேண்டாமெனத் தடுத்தார்கள்.
பின்னர், “‘உங்களில் ஒருவர் உளூச் செய்து, அதை அழகுறச் செய்து, பின்னர் பள்ளிவாசலை நாடிச் சென்றால், அவர் தம் இரு கைகளையும் கோர்த்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில், அவர் தொழுகையில்தான் இருக்கிறார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொன்னார்கள்.
(அபூதாவூத்: 562)194 – بَابُ مَا جَاءَ فِي الْهَدْيِ فِي الْمَشْيِ إِلَى الصَّلَاةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الْأَنْبَارِيُّ، أَنَّ عَبْدَ الْمَلِكِ بْنَ عَمْرٍو، حَدَّثَهُمْ عَنْ دَاوُدَ بْنِ قَيْسٍ، قَالَ: حَدَّثَنِي سَعْدُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنِي أَبُو ثُمَامَةَ الْحَنَّاطُ
أَنَّ كَعْبَ بْنَ عُجْرَةَ، أَدْرَكَهُ وَهُوَ يُرِيدُ الْمَسْجِدَ أَدْرَكَ أَحَدُهُمَا صَاحِبَهُ، قَالَ: فَوَجَدَنِي وَأَنَا مُشَبِّكٌ بِيَدَيَّ، فَنَهَانِي عَنْ ذَلِكَ وَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فَأَحْسَنَ وُضُوءَهُ، ثُمَّ خَرَجَ عَامِدًا إِلَى الْمَسْجِدِ فَلَا يُشَبِّكَنَّ يَدَيْهِ فَإِنَّهُ فِي صَلَاةٍ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-475.
Abu-Dawood-Shamila-562.
Abu-Dawood-Alamiah-475.
Abu-Dawood-JawamiulKalim-474.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
…
1 . இந்தக் கருத்தில் கஅப் பின் உஜ்ரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
சலாம்.
இந்த ஹதீஸின் தமிழ் எண் 475 என்பதே சரியானது.
வ அலைக்கும் ஸலாம்.
நாம் ஷாமிலா எண்ணில் தான் ஹதீஸை பதிவு செய்கிறோம். முக்கிய 9 ஹதீஸ்நூல்களுக்கு உள்ள எண்கள் ஆன்ட்ராய்ட் குதுபுத்திஸ்ஆ, மற்றும் ஷாமிலா சாப்ட்வேரில் ஒன்றாக உள்ளது என்பதால்…
தமிழ்நூல் எண்களை, அதைப்பற்றி தெரிந்த ஹதீஸ்களில் மட்டுமே பதிவு செய்வோம்.