ضَافَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَرْسَلَ إِلَى أَزْوَاجِهِ يَبْتَغِي عِنْدَهُنَّ طَعَامًا، فَلَمْ يَجِدْ عِنْدَ وَاحِدَةٍ مِنْهُنَّ، فَقَالَ: «اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ وَرَحْمَتِكَ؛ فَإِنَّهُ لَا يَمْلِكُهَا إِلَّا أَنْتَ» ، فَأُهْدِيَتْ إِلَيْهِ شَاةٌ مَصْلِيَّةٌ، فَقَالَ: «هَذِهِ مِنْ فَضْلِ اللهِ، وَنَحْنُ نَنْتَظِرُ الرَّحْمَةَ»
10379. நபி (ஸல்) அவர்கள், (தம்மிடம் வந்த ஒரு விருந்தினருக்கு) உணவளிக்க விரும்பினார்கள். எனவே தனது மனைவியரிடம் ஏதும் உணவு இருக்கின்றதா? என்று பார்த்து வருமாறு ஆளனுப்பினார்கள். ஆனால் எந்த உணவும் அவர்களிடம் இருக்கவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபள்லிக, வ ரஹ்மதிக; ஃப இன்னஹூ லா யம்லிகுஹா இல்லா அன்த. (பொருள்: யா அல்லாஹ்! உனது நற்பாக்கியத்திலிருந்தும், அருளிலிருந்தும் உன்னிடம் கேட்கிறேன். உன்னைத் தவிர அதற்கு அதிகாரம் படைத்தவர்கள் வேறு எவரும் இல்லை) என்று கூறினார்கள்.
(அப்போது) அவர்களுக்கு ஒரு பொறித்த ஆடு அன்பளிப்பாக வந்தது. இது அல்லாஹ்வின் நற்பாக்கியத்தில் உள்ளதாகும்; அவனது ரஹ்மத்தை நாம் எதிர்பார்த்தவர்களாக இருக்கின்றோம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)