தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-10379

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள், (தம்மிடம் வந்த ஒரு விருந்தினருக்கு) உணவளிக்க விரும்பினார்கள். எனவே தனது மனைவியரிடம் ஏதும் உணவு இருக்கின்றதா? என்று பார்த்து வருமாறு ஆளனுப்பினார்கள். ஆனால் எந்த உணவும் அவர்களிடம் இருக்கவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபள்லிக, வ ரஹ்மதிக; ஃப இன்னஹூ லா யம்லிகுஹா இல்லா அன்த. (பொருள்: யா அல்லாஹ்! உனது நற்பாக்கியத்திலிருந்தும், அருளிலிருந்தும் உன்னிடம் கேட்கிறேன். உன்னைத் தவிர அதற்கு அதிகாரம் படைத்தவர்கள் வேறு எவரும் இல்லை) என்று கூறினார்கள்.

(அப்போது) அவர்களுக்கு ஒரு பொறித்த ஆடு அன்பளிப்பாக வந்தது. இது அல்லாஹ்வின் நற்பாக்கியத்தில் உள்ளதாகும்; அவனது ரஹ்மத்தை நாம் எதிர்பார்த்தவர்களாக இருக்கின்றோம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 10379)

حَدَّثَنَا عَبْدَانُ بْنُ أَحْمَدَ، ثنا مُحَمَّدُ بْنُ زِيَادٍ الْبُرْجُمِيُّ، ثنا عُبَيْدُ اللهِ بْنُ مُوسَى، ثنا مِسْعَرٌ، عَنْ زُبَيْدٍ، عَنْ مُرَّةَ، عَنْ عَبْدِ اللهِ قَالَ:

ضَافَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَرْسَلَ إِلَى أَزْوَاجِهِ يَبْتَغِي عِنْدَهُنَّ طَعَامًا، فَلَمْ يَجِدْ عِنْدَ وَاحِدَةٍ مِنْهُنَّ، فَقَالَ: «اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ وَرَحْمَتِكَ؛ فَإِنَّهُ لَا يَمْلِكُهَا إِلَّا أَنْتَ» ، فَأُهْدِيَتْ إِلَيْهِ شَاةٌ مَصْلِيَّةٌ، فَقَالَ: «هَذِهِ مِنْ فَضْلِ اللهِ، وَنَحْنُ نَنْتَظِرُ الرَّحْمَةَ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-10379.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-10230.
 • இந்த செய்தியை சிலர் சரியானது என்றும், சிலர் நபித்தோழர் விடுப்பட்டு முர்ஸலாக வரும் செய்தியே அறிவிப்பாளர்தொடரில் பலமானது என்பதால் இதை முர்ஸல் என்ற வகையில் பலவீனமான செய்தி என்றும் கூறுகின்றனர்.

1 . ஹைஸமீ அவர்களும், அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்களும் இந்த செய்தியை சரியானது என்று கூறியுள்ளனர்.

(நூல்கள்: மஜ்மஉஸ் ஸவாஇத்-17274, 10/159, அஸ்ஸஹீஹா-1543)

2 . என்றாலும் அபூஅலீ-அல்ஹுஸைன் பின் அலீ பின் யஸீத் அவர்கள் இந்த செய்தியை முஹம்மது பின் அப்தான் —> அப்தான் —> ஹஸன் பின் ஹாரிஸ் —> உபைதுல்லாஹ் பின் மூஸா —> மிஸ்அர் —> ஸுபைத் என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். ஸுபைத் பின் ஹாரிஸ் சிறுவயது தாபிஈன்களில் ஒருவர் என்பதாலும், இந்த அறிவிப்பாளர்தொடர் பலமானது என்பதாலும் இந்த செய்தி இவ்வாறு நபித்தோழர் விடுப்பட்டு முர்ஸலாக வந்திருப்பதே உண்மையாகும் என்று பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
அவர்கள் கூறியுள்ளார்.

(பார்க்க: பைஹகீ–தலாஇலுன் நுபுவ்வஹ்-2383)

 • அபூஅலீ-அல்ஹுஸைன் பின் அலீ பின் யஸீத் என்பவர் பற்றி கதீப் பக்தாதீ அவர்கள், இவர் அவர் காலத்தில் உள்ள அறிஞர்களில் மனனத்தில் உறுதியானவராகவும், பேணுதல் உள்ளவராகவும் இருந்தவர் என்று பாராட்டியுள்ளார்.
 • தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
  இறப்பு ஹிஜ்ரி 748
  வயது: 75
  அவர்கள், இவர் ஹாஃபிள், சிறந்த அறிஞர், பலமானவர், ஹதீஸ் அறிவிப்பாளர்களைப் பற்றி குறை நிறைகளைக் கூறக்கூடியவர், ஹதீஸ்கலை அறிஞர், நூலாசிரியர் என்று ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
  இறப்பு ஹிஜ்ரி 405
  வயது: 84
  இமாம் அவர்கள் பாராட்டி கூறியுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்கள்: தாரீகு மதீனதுஸ் ஸலாம்-8/622, தத்கிரதுல் ஹுஃப்பாள்-3/902)

எனவே தான் பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
இமாம் அவர்கள், அபூஅலீ அவர்களின் அறிவிப்புக்கு முன்னுரிமை தந்து இந்த செய்தியை நபியின் சொல்லாக-முத்தஸிலாக அறிவிக்கும் அறிவிப்பாளர்களை விட முர்ஸலாக அறிவிப்பவர்கள் மிக பலமானவர்கள் என்பதால் இது முர்ஸல் என்பதே உண்மை என்று கூறியுள்ளார்.

 • மேலும் அபூநுஐம் அவர்களும், தனது ஹில்யாவில் நபியின் சொல்லாக வரும் மேற்கண்ட செய்தியை மிஸ்அர், ஸுபைத் ஆகியோரின் அரிதான செய்தி என்றும், உபைதுல்லாஹ் பின் மூஸா என்பவரிடமிருந்து முஹம்மது பின் ஸியாத் அல்புர்ஜுமீ என்பவர் மட்டும் இதை இவ்வாறு தனித்து அறிவிக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

حلية الأولياء وطبقات الأصفياء (5/ 36)
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ أَحْمَدَ، ثنا عَبْدَانُ بْنُ أَحْمَدَ، ثنا مُحَمَّدُ بْنُ زِيَادٍ الْبُرْجُمِيُّ، ثنا عُبَيْدُ اللهِ بْنُ مُوسَى، عَنْ مِسْعَرٍ، عَنْ زُبَيْدٍ، عَنْ مُرَّةَ، عَنْ عَبْدِ اللهِ قَالَ: أَصَابَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَيْفٌ، فَأَرْسَلَ إِلَى أَزْوَاجِهِ يَبْتَغِي عِنْدَهُنَّ طَعَامًا فَلَمْ يَجِدْ عِنْدَ وَاحِدَةٍ مِنْهُنَّ فَقَالَ: «اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ وَرَحْمَتِكَ، فَإِنَّهُ لَا يَمْلِكُهَا إِلَّا أَنْتَ» فَأُهْدِيَتْ لَهُ شَاةٌ مَصْلِيَّةٌ، فَقَالَ: «هَذِهِ مِنْ فَضْلِ اللهِ وَنَحْنُ نَنْتَظِرُ الرَّحْمَةَ» غَرِيبٌ مِنْ حَدِيثِ مِسْعَرٍ وَزُبَيْدٍ، تَفَرَّدَ بِهِ الْبُرْجُمِيُّ، عَنْ عُبَيْدِ اللهِ


حلية الأولياء وطبقات الأصفياء (7/ 239)
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ أَحْمَدَ، ثنا عَبْدَانُ بْنُ أَحْمَدَ، ثنا مُحَمَّدُ بْنُ زِيَادٍ الْبُرْجُمِيُّ، ثنا عَبْدُ اللهِ بْنُ مُوسَى، عَنْ مِسْعَرٍ، عَنْ زُبَيْدٍ، عَنْ مُرَّةَ، عَنْ عَبْدِ اللهِ، قَالَ: ” أَضَافَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَيْفًا , فَأَرْسَلَ إِلَى أَزْوَاجِهِ يَبْتَغِي عِنْدَهُنَّ طَعَامًا , فَلَمْ يَجِدْ عِنْدَ وَاحِدَةٍ مِنْهُنَّ , فَقَالَ: «اللهُمَّ إِنِّي أَسْأَلُكُ مِنْ فَضْلِكَ وَرَحْمَتِكَ , فَإِنَّهُ لَا يَمْلِكُهَا إِلَّا أَنْتَ» قَالَ: فَأُهْدِيَ إِلَيْهِ شَاةٌ مَصْلِيَّةٌ فَقَالَ: «هَذِهِ مِنْ فَضْلِ اللهِ , وَنَحْنُ نَنْتَظِرُ الرَّحْمَةَ» غَرِيبٌ مِنْ حَدِيثِ مِسْعَرٍ وَزُبَيْدٍ , تَفَرَّدَ بِهِ الْبُرْجُمِيُّ

(நூல்: ஹில்யதுல் அவ்லியா-5/36, 7/239)


1 . இந்த செய்தியை சரி என்று கூறக்கூடிவர்கள், முர்ஸலாக வரும் செய்தியில் இடம்பெறும் முஹம்மது பின் அப்தான், ஹஸன் பின் ஹாரிஸ் ஆகியோரை அறியப்படாதவர் என்று கூறி நபியின் சொல்லாக வரும் செய்தியே பலமானது என்றும் கூறுகின்றனர்.

2 . ஆனால் இது சரியான கருத்தல்ல. முஹம்மது பின் அப்தான் என்பவரிடமிருந்து பலமான பலர் அறிவித்துள்ளர். அவர்களில் அபூஅலீ அவர்களும் ஒருவர். இவ்வாறே ஹஸன் பின் ஹாரிஸிடமிருந்தும் பலமானவர்கள் அறிவித்துள்ளனர். குறிப்பாக இந்த அறிவிப்பாளர்தொடரை அபூஅலீ அவர்கள் குறிப்பிடுவதால் இதை விமர்சிக்க முடியாது என்று இந்த செய்தியை பலவீனமானது என்போர் கூறுகின்றனர்.

 • எனவே இந்த செய்தியின் அறிவிப்பாளர்தொடர் சரியாக இருந்தாலும் முர்ஸல் என்ற இல்லத் (குறை) இருப்பதால் இது பலவீனமானதாகும்.

1 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-10379 , ஹில்யதுல் அவ்லியா-5/36, 7/239, பைஹகீ–தலாஇலுன் நுபுவ்வஹ்-2383 ,


2 . முஜாஹித் (ரஹ்), இப்ராஹீம் நகஈ (ரஹ்) ஆகியோர் வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-29579 .

3 . வாஸிலா பின் அஸ்கஃ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: பைஹகீ–தலாஇலுன் நுபுவ்வஹ்-2384 .


ஆய்வுக்காக: حديث اللهم اني اسالك من فضلك ورحمتك .


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.