தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Dalail-Annubuwwah-Bayhaqi-2383

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

தம்மிடம் வந்த விருந்தாளிக்கு உணவளிக்க ஒன்றுமில்லாதபோது நபி (ஸல்) அவர்கள் (அல்லாஹ்விடம்) பிரார்த்தனை செய்ய அதை அல்லாஹ் ஏற்றுக்கொண்ட நிகழ்வு.

நபி (ஸல்) அவர்கள், தம்மிடம் வந்த ஒரு விருந்தினருக்கு உணவளிக்க விரும்பினார்கள். எனவே தனது மனைவியரிடம் ஏதும் உணவு இருக்கின்றதா? என்று பார்த்து வருமாறு ஆளனுப்பினார்கள். ஆனால் எந்த உணவும் அவர்களிடம் இருக்கவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபள்லிக, வ ரஹ்மதிக; ஃப இன்னஹூ லா யம்லிகுஹா இல்லா அன்த. (பொருள்: யா அல்லாஹ்! உனது நற்பாக்கியத்திலிருந்தும், அருளிலிருந்தும் உன்னிடம் கேட்கிறேன். உன்னைத் தவிர அதற்கு அதிகாரம் படைத்தவர்கள் வேறு எவரும் இல்லை) என்று கூறினார்கள்.

(அப்போது) அவர்களுக்கு ஒரு பொறித்த ஆடு அன்பளிப்பாக வந்தது. இது அல்லாஹ்வின் நற்பாக்கியத்தில் உள்ளதாகும்; அவனது ரஹ்மத்தை நாம் எதிர்பார்த்தவர்களாக இருக்கின்றோம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

பைஹகீ இமாம் கூறுகிறார்:

இந்த செய்தியை அபூஅலீ-அல்ஹுஸைன் பின் அலீ பின் யஸீத் அவர்கள், முஹம்மது பின் அப்தான் —> அப்தான் —> ஹஸன் பின் ஹாரிஸ் —> உபைதுல்லாஹ் பின் மூஸா —> மிஸ்அர் —> ஸுபைத் என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். (ஸுபைத் பின் ஹாரிஸ் சிறுவயது தாபிஈன்களில் ஒருவர் என்பதால்) இந்த செய்தி இவ்வாறு நபித்தோழர் விடுப்பட்டு முர்ஸலாக வந்திருப்பதே உண்மையாகும்.

(dalail-annubuwwah-bayhaqi-2383: 2383)

بَابُ مَا جَاءَ فِي إِجَابَةِ اللهِ تَعَالَى دُعَاءَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ ضَافَهُ ضَيْفٌ وَلَمْ يَكُنْ عِنْدَهُ شَيْءٌ

أَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ عَلِيُّ بْنُ أَحْمَدَ الْمُقْرِئُ بِبَغْدَادَ، حَدَّثَنَا عَبْدُ الْبَاقِي بْنُ قَانِعٍ الْقَاضِي، حَدَّثَنَا عَبْدَانُ الْأَهْوَازِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَامِرٍ، كَذَا فِي كِتَابِي، حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُوسَى، ح وَأَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، أَنْبَأَنَا أَبُو عَلِيِّ الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ الْحَافِظُ، قَالَ: وَفِيمَا ذَكَرَ عَبْدَانُ الْأَهْوَازِيُّ، حَدَّثَنَا مُحَمَّدَ بْنَ زِيَادٍ الْبُرْجُمِيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُوسَى، عَنْ مِسْعَرٍ، عَنْ زُبَيْدٍ، عَنْ مُرَّةَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ، قَالَ:

أَضَافَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَيْفًا فَأَرْسَلَ إِلَى أَزْوَاجِهِ يَبْتَغِي عِنْدَهُنَّ طَعَامًا فَلَمْ يَجِدْ عِنْدَ وَاحِدَةٍ مِنْهُنَّ شَيْئًا، فَقَالَ: «اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ وَرَحْمَتِكَ، فَإِنَّهُ لَا يَمْلِكُهَا إِلَّا أَنْتَ» ، قَالَ؛ فَأُهْدِيَتْ إِلَيْهِ شَاةٌ مَصْلِيَّةٌ،

وَفِي رِوَايَةِ الْمُقْرِئِ: فَأَهْوَتْ إِلَيْهِ شَاةٌ مَصْلِيَّةٌ، فَقَالَ: هَذِهِ مِنْ فَضْلِ اللهِ عَزَّ وَجَلَّ، وَنَحْنُ نَنْتَظِرُ الرَّحْمَةَ،

قَالَ أَبُو عَلِيٍّ: حَدَّثَنِيهِ مُحَمَّدَ بْنَ عَبْدَانَ الْأَهْوَازِيُّ عَنْهُ، وَالصَّحِيحُ عَنْ زُبَيْدٍ، قَالَ: أَضَافَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. مُرْسَلًا مِنْ قَوْلِ زُبَيْدٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدَانَ الْأَهْوَازِيُّ،

حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الْحَارِثِ الْأَهْوَازِيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُوسَى، عَنْ مِسْعَرٍ، عَنْ زُبَيْدٍ، قَالَ: أَضَافَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذَكَرَهُ


Dalail-Annubuwwah-Bayhaqi-Tamil-.
Dalail-Annubuwwah-Bayhaqi-TamilMisc-.
Dalail-Annubuwwah-Bayhaqi-Shamila-.
Dalail-Annubuwwah-Bayhaqi-Alamiah-.
Dalail-Annubuwwah-Bayhaqi-JawamiulKalim-2383.
மேலும் பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-10379 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.