🔗

புகாரி: 100

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِنَّ اللَّهَ لاَ يَقْبِضُ العِلْمَ انْتِزَاعًا يَنْتَزِعُهُ مِنَ العِبَادِ، وَلَكِنْ يَقْبِضُ العِلْمَ بِقَبْضِ العُلَمَاءِ، حَتَّى إِذَا لَمْ يُبْقِ عَالِمًا اتَّخَذَ النَّاسُ رُءُوسًا جُهَّالًا، فَسُئِلُوا فَأَفْتَوْا بِغَيْرِ عِلْمٍ، فَضَلُّوا وَأَضَلُّوا»

قَالَ الفِرَبْرِيُّ: حَدَّثَنَا عَبَّاسٌ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ هِشَامٍ نَحْوَهُ


பாடம்: 34

கல்வி எவ்வாறு கைப்பற்றப்படும்?

உமர் பின் அப்துல்அஸீஸ் (ரஹ்) அவர்கள் (மதீனாவின் ஆளுநராயிருந்த) அபூபக்ர் பின் ஹஸ்ம் (ரஹ்) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். அதில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றிய செய்தி (ஹதீஸ்)களை ஆராய்ந்து அவற்றை எழுதி(த் தொகுத்து) வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், (மார்க்கக்) கல்வி அழிந்துபோய்விடு மென்றும்; (மார்க்க) அறிஞர்கள் (இவ்வுலகைவிட்டுச்) சென்றுவிடுவார்கள் என்றும் நான் அஞ்சுகின்றேன்.

(அவ்வாறு எழுதும் போது) நபி (ஸல்) அவர்களின் செய்தி (ஹதீஸ்)களைத் தவிர வேறு எதையும் (பதிவுக்கு) ஏற்கக் கூடாது.

(கற்றவர்கள்) அறிவைப் பரப்பட்டும்; கல்லாதவர்களுக்கு அது கற்பிக்கப்படும் வரை கற்றோர் (ஓரிடத்தில் நிலையாக) அமர்ந்து கொள்ளட்டும். ஏனெனில், கல்வி மறைக்கப்படும் போதுதான் அழிகிறது.


அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அறிஞர்கள் (உலகைவிட்டுச்) சென்றுவிடுவார்கள்” என்பது வரைதான் உமர் பின் அப்துல்அஸீஸ் (ரஹ்) அவர்களின் கடிதத்தில் இடம்பெற்றிருந்ததாகக் காணப்படுகிறது.


100. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கல்வியை(த் தன்) அடியார்களிடமிருந்து ஒரேடியாகப் பறித்துக் கொள்ளமாட்டான். ஆயினும், அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைப் பறிப்பான். இறுதியில் எந்த அறிஞரையும் அல்லாஹ் விட்டுவைக்காத போது, மக்கள் அறிவீனர்களைத் (தம்) தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட, அவர்கள் எந்த அறிவுமில்லாமல் தீர்ப்பு வழங்குவார்கள். எனவே, தாமும் வழிதவறி, பிறரையும் வழிதவறச்செய்வார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

(புகாரியில் உள்ள கூடுதலான அறிவிப்பாளர்தொடர்:

(புகாரீ அவர்களின் ஆசிரியர்களில் ஒருவரான முஹம்மத் பின் யூஸுஃப்) அல்ஃபிரப்ரீ அவர்கள், இந்தச் செய்தியை, அப்பாஸ் பின் அப்துல்அளீம் —> குதைபா பின் ஸயீத் —> ஜரீர் பின் அப்துல்ஹமீத் —> ஹிஷாம் பின் உர்வா என்று தொடர்ந்து அறிவித்தார்.)

அத்தியாயம்: 3