தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-100

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

பாடம்: 34

கல்வி எவ்வாறு கைப்பற்றப்படும்?

உமர் பின் அப்துல்அஸீஸ் (ரஹ்) அவர்கள் (மதீனாவின் ஆளுநராயிருந்த) அபூபக்ர் பின் ஹஸ்ம் (ரஹ்) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். அதில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றிய செய்தி (ஹதீஸ்)களை ஆராய்ந்து அவற்றை எழுதி(த் தொகுத்து) வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், (மார்க்கக்) கல்வி அழிந்துபோய்விடு மென்றும்; (மார்க்க) அறிஞர்கள் (இவ்வுலகைவிட்டுச்) சென்றுவிடுவார்கள் என்றும் நான் அஞ்சுகின்றேன்.

(அவ்வாறு எழுதும் போது) நபி (ஸல்) அவர்களின் செய்தி (ஹதீஸ்)களைத் தவிர வேறு எதையும் (பதிவுக்கு) ஏற்கக் கூடாது.

(கற்றவர்கள்) அறிவைப் பரப்பட்டும்; கல்லாதவர்களுக்கு அது கற்பிக்கப்படும் வரை கற்றோர் (ஓரிடத்தில் நிலையாக) அமர்ந்து கொள்ளட்டும். ஏனெனில், கல்வி மறைக்கப்படும் போதுதான் அழிகிறது.


அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அறிஞர்கள் (உலகைவிட்டுச்) சென்றுவிடுவார்கள்” என்பது வரைதான் உமர் பின் அப்துல்அஸீஸ் (ரஹ்) அவர்களின் கடிதத்தில் இடம்பெற்றிருந்ததாகக் காணப்படுகிறது.


100. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கல்வியை(த் தன்) அடியார்களிடமிருந்து ஒரேடியாகப் பறித்துக் கொள்ளமாட்டான். ஆயினும், அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைப் பறிப்பான். இறுதியில் எந்த அறிஞரையும் அல்லாஹ் விட்டுவைக்காத போது, மக்கள் அறிவீனர்களைத் (தம்) தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட, அவர்கள் எந்த அறிவுமில்லாமல் தீர்ப்பு வழங்குவார்கள். எனவே, தாமும் வழிதவறி, பிறரையும் வழிதவறச்செய்வார்கள்.

அறிவிப்பவர்: (ரலி)

(புகாரியில் உள்ள கூடுதலான அறிவிப்பாளர்தொடர்:

(புகாரீ அவர்களின் ஆசிரியர்களில் ஒருவரான முஹம்மத் பின் யூஸுஃப்) அல்ஃபிரப்ரீ அவர்கள், இந்தச் செய்தியை, அப்பாஸ் பின் அப்துல்அளீம் —> குதைபா பின் ஸயீத் —> ஜரீர் பின் அப்துல்ஹமீத் —> ஹிஷாம் பின் உர்வா என்று தொடர்ந்து அறிவித்தார்.)

அத்தியாயம்: 3

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நபித்தோழர்.


بَابٌ : كَيْفَ يُقْبَضُ الْعِلْمُ

وَكَتَبَ عُمَرُ بْنُ عَبْدِ العَزِيزِ إِلَى أَبِي بَكْرِ بْنِ حَزْمٍ: انْظُرْ مَا كَانَ مِنْ حَدِيثِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاكْتُبْهُ، فَإِنِّي خِفْتُ دُرُوسَ العِلْمِ وَذَهَابَ العُلَمَاءِ، وَلاَ تَقْبَلْ إِلَّا حَدِيثَ النَّبِيِّ صلّى الله عليه وسلم: «وَلْتُفْشُوا العِلْمَ، وَلْتَجْلِسُوا حَتَّى يُعَلَّمَ مَنْ لاَ يَعْلَمُ، فَإِنَّ العِلْمَ لاَ يَهْلِكُ حَتَّى يَكُونَ سِرًّا»

حَدَّثَنَا العَلاَءُ بْنُ عَبْدِ الجَبَّارِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ مُسْلِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ: بِذَلِكَ، يَعْنِي حَدِيثَ عُمَرَ بْنِ عَبْدِ العَزِيزِ، إِلَى قَوْلِهِ: ذَهَابَ العُلَمَاءِ

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ  حَدَّثَنِي مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ العَاصِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ

«إِنَّ اللَّهَ لاَ يَقْبِضُ العِلْمَ انْتِزَاعًا يَنْتَزِعُهُ مِنَ العِبَادِ، وَلَكِنْ يَقْبِضُ العِلْمَ بِقَبْضِ العُلَمَاءِ، حَتَّى إِذَا لَمْ يُبْقِ عَالِمًا اتَّخَذَ النَّاسُ رُءُوسًا جُهَّالًا، فَسُئِلُوا فَأَفْتَوْا بِغَيْرِ عِلْمٍ، فَضَلُّوا وَأَضَلُّوا»

قَالَ الفِرَبْرِيُّ: حَدَّثَنَا عَبَّاسٌ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ هِشَامٍ نَحْوَهُ


Bukhari-Tamil-100.
Bukhari-TamilMisc-100.
Bukhari-Shamila-100.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்

2 . இஸ்மாயீல் பின் அபூஉவைஸ்-அல்அஸ்பஹீ

3 . மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம்-மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
பின் அனஸ்

4 . ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
இறப்பு ஹிஜ்ரி 146
வயது: 85
பின் ஸுபைர்-அல்அஸ்தீ

5 . உர்வா பின் ஸுபைர்-அஸ்தீ

6 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)-அஸ்ஸஹ்மீ


 

புகாரி இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்

محمد بن إسماعيل البخاري

இறப்பு: ஹி-256.

தரம்: மிகப் பலமானவர்.


இயற்பெயர்: முஹம்மத்

தந்தை பெயர்: இஸ்மாயீல் பின் இப்ராஹீம்

வமிசம்: அல்ஜுஅஃபீ

புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூஅப்துல்லாஹ்

பிறப்பு: ஹிஜ்ரி-194.

இறப்பு: ஹிஜ்ரி-256

கால கட்டம்: 10.


இமாம் புகாரி

முழுப்பெயர்: முஹம்மது இப்னு இஸ்மாயீல் இப்னு இப்ராஹீம் இப்னுல் முகீரா  (ஸஹீஹுல் புகாரி என்ற ஹதீஸ் நூலை தொகுத்த இமாம் ஆவார்)

புனைப்பெயர்: அபூ அப்தில்லாஹ் இப்னு அபீ ஹஸனில் புகாரி அல்ஹாஃபிழ்

இயற்பெயர்: முஹம்மது

தந்தை பெயர்: இஸ்மாயில்

பிறந்த ஊர்: ரஷ்யாவில் உள்ள புகாரா என்ற ஊரில் பிறந்தார்கள். எனவே தான் புகாரி – புகாராவைச் சார்ந்தவர் என்ற கருத்தில் அழைக்கப்படுகிறார்.

பிறப்பு: ஹிஜ்ரி 194ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம் 13ம் தேதி வெள்ளிக்கிழமை பிறந்தார்.

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: கல்விக்காகத் தனது 10 வயதில் இருந்தே ஈரானில் உள்ள குராஸான், கூஃபா, பாக்தாத் போன்ற  ஊர்களுக்கும் இன்னும் பஸரா,  எகிப்து, ஸிரியா, மக்கா, மதீனா, போன்ற உலகத்தின் பல பாகங்களுக்கு பயணம் செய்து இருக்கிறார்.

ஸஹீஹ் அல்புகாரிக்கு இமாம் புகாரி வைத்த பெயர்: அல்ஜாமிவுஸ் ஸஹீஹுல் முஸ்னத் மின் அஹாதீஸி ரசூலில்லாஹ் வஸுனனிஹி வஅய்யாமிஹி (நபியவர்களிடமிருந்து ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர்களுடன் வந்துள்ள செய்திகள் இன்னும் அவர்களின் வழிமுறைகள், வாழ்நாட்கள்)

ஜாமிவுஸ் ஸஹீஹுல் முஸ்னத் மின் அஹாதீஸி ரசூலில்லாஹ் வஸுனனிஹி வஅய்யாமிஹி (ஸஹீஹுல் புகாரி)

அல் அதபுல் முஃப்ரத்,

அத்தாரிகுல் கபீர், (அறிவிப்பாளர் தொடர்பான நூல்),

அல்லுஃபாவுஸ் ஸகீர் (பலவீனமான அறிவிப்பாளர்கள் தொடர்பான நூல்),

ரஃபவுல் யதய்ன் ஃபிஸ் ஸலாதி, (தொழுகையில் தக்பீரின் போது கைகளை உயர்த்துதல்),

அல் கிராஅது கல்ஃபல் இமாம்  (இமாமுக்கு பின்னால் ஓதுதல்) போன்ற பல புத்தகங்களைத் தொகுத்துள்ளார்.

அஹ்மது இப்னு ஹன்பல், இப்ராஹீம் இப்னு மூஸா அர்ராஸியி, இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ்,           ஹஸன் இப்னு பஸருல் பஜலீ, அபுல் யமான் அல்ஹகம் இப்னு நாபிஃ, கைஸ் இப்னு ஹஃப்ஸுத்தாரமி, நுஐம் இப்னுல் ஹம்மாது அல்மரூஸியி, யஹ்யா இப்னு மயீன், ஹஸன் இப்னு லிஹாக் நைஸாபூரி, அப்துல்லாஹ் இப்னு அப்துர்ரஹ்மானுத்தாரமீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்

அபூக்கர் அப்துல்லாஹ் இப்னு அபீதாவூத், ஃபல் இப்னுல் அப்பாஸுர்ராஸி அல்ஹாஃபிழ், அபுஹாதம் முஹம்மது இப்னு இத்ரீஸு அர்-ராஸியி, முஹம்மது இப்னு யூசுஃபுல் ஃபர்பரீய், அத்திர்மிதி, முஸ்லிம் போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்

இறப்பு:  ஹிஜ்ரி 256ல் ஷவ்வால் மாதம் நோன்பு பெருநாள் அன்று சனிக்கிழமை இஷா தொழுகை நேரத்தில் மரணித்தார். அப்போது அவருக்கு 62 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

இஸ்மாயீல் பின் அபூஉவைஸ்-அல்அஸ்பஹீ

إسماعيل بن أبي أويس

இறப்பு: ஹிஜ்ரி 226, மதீனா

தரம்: நம்பகமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: இஸ்மாயீல் பின் அப்துல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உவைஸ் பின் மாலிக் பின் அபூஆமிர்

தந்தை பெயர்: அபூஉவைஸ் அல்மதனீ

வம்சம்: அல்அஸ்பஹீ

புனைப்பெயர்: அபூ அப்துல்லாஹ்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா

பிறப்பு: ஹிஜ்ரி 139, மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 226, மதீனா

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

இஸ்மாயீல் பின் அபூஉவைஸ் அல்அஸ்பஹீ ரஹ் அவர்கள் ஒரு நம்பகமான ஹதீஸ் அறிவிப்பாளர். இவர் மாலிக் இமாமின் சகோதரியின் மகன் ஆவார். இவர் ஹிஜ்ரி 139 இல் மதீனாவில் பிறந்தார்.

மாலிக் இமாம், அபூஉவைஸ் அல்மதனீ போன்ற பல அறிஞர்களிடம் ஹதீஸ்களைக் கற்றார். புகாரி இமாம், முஸ்லிம் இமாம் போன்றோர் இவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். இவர் ஹிஜ்ரி 226 இல் மதீனாவில் மரணித்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): அபூஉவைஸ் அல்மதனீ, அபூபக்ர் பின் அபூஉவைஸ், மாலிக் இமாம், ஸல்மா பின் வர்தான் அல்லைஸீ, அப்துர்ரஹ்மான் பின் அபூஸ்ஸினாத், அப்துல்அஸீஸ் பின் அப்துல்லாஹ் அல்மாஜிஷூன், ஸுலைமான் பின் பிலால் அத்தைமீ, இஸ்மாயீல் பின் இப்ராஹீம் பின் உக்பா, கஸீர் பின் அப்துல்லாஹ், நஃபிஃ, இப்ராஹீம் பின் இஸ்மாயீல் பின் அபூஹபீபா

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): புகாரி இமாம், முஸ்லிம் இமாம், அஹ்மத் பின் ஸாலிஹ் அல்மிஸ்ரீ, யஃகூப் அல்ஃபஸவீ, முஹம்மத் பின் நஸ்ர் அஸ்ஸாயிஃக், அலீ பின் ஜப்லா அல்அஸ்பஹானீ, ஹஸன் பின் அலீ அஸ்ஸர்ரீ, உஸ்மான் பின் ஸயீத் அத்தாரமீ, முஹம்மத் பின் இஸ்மாயீல் அத்தர்மிதீ, ஃபழ்ல் பின் முஹம்மத் அஷ்ஷஃரானீ, அபூ ஹாதம், குதைபா

வேறு பெயர்கள்: இஸ்மாயீல் பின் அபூஉவைஸ், இஸ்மாயீல் பின் அப்துல்லாஹ்


ஆதாரம்: muslimscholars.info (30103) · Should verify

மாலிக் இமாம்-மாலிக் பின் அனஸ்

مالك بن أنس الأصبحي

இறப்பு: ஹி-179 (வயது 86)

தரம்: ஹதீஸ்துறையின் முக்கியமான இமாம், மிகப் பலமானவர்.


இயற்பெயர்: மாலிக்.

தந்தை பெயர்: அனஸ் பின் மாலிக்

குறிப்புப் பெயர்: அபூஅப்தில்லாஹ்

குலம்: இவர் அல்அஸ்பஹீ என்ற குலத்தைச் சார்ந்தவர். இவர் மதீனாவில் வாழ்ந்ததால் அல்மதனீ என்றும் இவருக்கு சொல்லப்படுகிறது.

பிறப்பு: ஹிஜ்ரீ 92 - 95 க்குள் மதீனாவில் பிறந்தார்.

இறப்பு: ஹிஜ்ரீ 178 அல்லது 179 ஆம் வருடம் ரபீவுல் அவ்வல் மாதம் ஞாயிற்றுக் கிழமையன்று மரணித்தார். மரணிக்கும் போது இவருடைய வயது 86 ஆகும்.

(93 இல் பிறந்து 179 ல் மரணித்தார் என்பதின்படி இவர் வயது 86. வாகிதீ என்பவர் 90 வயதை அடைந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்)

கால கட்டம்: 7.


வளர்ப்பு: ஸவ்ன், ரிஃபாஹியா ஆகிய ஊர்களில் வளர்ந்தார்.

கல்வி: பத்து வயதை அடைந்திருக்கும் போதே கல்வி கற்க ஆரம்பித்தார். ஹிஜாஸ்வாசிகளில் உள்ள அறிஞர்களில் மாபெரும் அறிஞராகத் திகழ்ந்தார். ஹதீஸ் துறையில் முத்திரை பதித்தவர்களில் இவரும் ஒருவர். சட்டத் துறையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.

கல்விக்காகப் பயணித்த ஊர்கள்: இமாம் மாலிக் அவர்கள் அதிகமான விஷயங்களை அறிந்திருந்தமையால் பல ஊர்களுக்குப் பயணம் செய்ய வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படவில்லை. தன்னிடத்தில் உள்ள ஞானமே போதும் என்று கருதினார். பல ஊர்களுக்குச் சென்று இவர் பயிலாவிட்டாலும் மார்க்கச் சட்டங்களைக் கூறுவதில் தலைமைத்துவத்தைப் பெற்றார். இவர் 21 வது வயதை அடைந்த போதே பிறருக்கு தான் படித்ததைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.

தாஃபியீன்களில் ஒரு பெரும் கூட்டம் இவருக்கு ஆசிரியராக இருந்தது.

1 . நாஃபிஃ,

2 . ஹிஷாம் பின் உர்வா,

3 . யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ,

4 . அப்துல்லாஹ் பின் தீனார்,

5 . ஸைத் பின் அஸ்லம்,

6 . முஹம்மத் பின் முஸ்லிம்,

7 . அப்துல்லாஹ் பின் அபூபக்ர்,

8 . ஸயீத் பின் அபூஸயீத்

ஆகியோர் இவருடைய முக்கிய ஆசிரியர்கள்.

1 . முஹம்மத் பின் முஸ்லிம்,

2 . யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ,

3 . நாஃபிஃ பின் மாலிக்

4 . யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான்,

ஆகிய இவருடைய ஆசிரியர்கள் கூட இவரிடமிருந்து கற்றுள்ளார்கள்.

4 . இமாம் அபூஹனீஃபா, ...

5 . ஸுஃப்யான் ஸவ்ரீ,

6 . அல்லைஸ் பின் சஃத்,

7 . ஷுஅபா,

8 . அப்துல் மலிக்,

9 . மஃமர் பின் ராஷித்,

10 . இப்னுல் முபாரக்,

11 . வகீஃ பின் ஜர்ராஹ்

12 . இமாம் ஷாஃபிஈ

ஆகியோர் இவருடைய முக்கிய மாணவர்கள்.

புகாரி மற்றும் முஸ்லிம் தொகுக்கப்படுவதற்கு முன்பு இவர் எழுதிய அல்முஅத்தா என்ற ஹதீஸ்களின் தொகுப்பு நூல் மக்களுக்குப் பெரும் உதவியாக இருந்தது. பல அறிஞர்கள் இந்த நூலையே சார்ந்திருந்தார்கள்.

1 . ரிஸாலத்துன் ஃபில் கத்ர்,

2 . ரிசாலத்துன் ஃபின்னஜ்ம்,

3 . ரிசாலத்துன் ஃபில் அக்ளியா,

4 . ரிசாலத்துன் இலா அபீ ஹஸ்ஸான்,

5 . ரிசாலத்துன் இலல் லைஸ்,

6 . ஜுஸ்உன் ஃபித் தஃப்சீர்,

7 . கிதாபுஸ் ஸிர்,

8 . ரிஸாலத்துன் இலர் ரஷீத் ஆகியவற்றைத் தொகுத்துள்ளார்.

ஹிஷாம் பின் உர்வா பின் ஸுபைர்-அல்அஸ்தீ

هشام بن عروة بن الزبير بن العوام

இறப்பு: ஹிஜ்ரி 146, பக்தாத்

தரம்: மிகப் பலமானவர், ஹதீஸ் இமாம், ஹுஜ்ஜத்


விபரங்கள்

இயற்பெயர்: ஹிஷாம்

தந்தை பெயர்: உர்வா பின் ஸுபைர்

வம்சம்: அஸத் பின் அப்துல் உஸ்ஸா பின் குஸய்யி பின் கிலாப்

புனைப்பெயர்: அபூல் முன்திர், அபூ அப்துல்லாஹ், அபூ பக்ர்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, கூஃபா, பக்தாத், இராக்

பிறப்பு: ஹிஜ்ரி 61, மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 146, பக்தாத்

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

ஹிஷாம் பின் உர்வா பின் ஸுபைர் ரஹ் அவர்கள் ஒரு தாபிஈ ஆவார். அவர் ஹிஜ்ரி 61 இல் மதீனாவில் பிறந்தார். அவர் மிகப் பலமானவர், ஹதீஸ் இமாம் மற்றும் ஹுஜ்ஜத் என அறிஞர்களால் போற்றப்பட்டார்.

அவர் தனது தந்தை உர்வா பின் ஸுபைர் ரஹ் மற்றும் அப்துல்லாஹ் பின் ஸுபைர் ரஹ் போன்ற பல நபித்தோழர்களிடமிருந்தும் தாபிஈன்களிடமிருந்தும் ஹதீஸ்களை அறிவித்துள்ளார். மாலிக் இமாம், ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ, ஷுஃபா பின் அல்ஹஜ்ஜாஜ் போன்ற பல இமாம்கள் அவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். அவர் ஹிஜ்ரி 146 இல் பக்தாத்தில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): உர்வா பின் ஸுபைர், அப்துல்லாஹ் பின் ஸுபைர், அப்துல்லாஹ் பின் உர்வா, உஸ்மான் பின் உர்வா, ஃபாத்திமா பின்த் அல்முன்திர், அஃபாத் பின் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், முஹம்மத் பின் இப்ராஹீம் அத்தைமீ, முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ, வஹ்ப் பின் கைஸான், அபூ ஸலமா பின் அப்துர்ரஹ்மான், அபூஸ் ஸினாத் அப்துல்லாஹ் பின் தக்வான், குரைப் மவ்லா இப்னு அப்பாஸ்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அய்யூப் அஸ்ஸக்தியானீ, உபைதுல்லாஹ் பின் உமர், மஃமர் பின் ராஷித், இப்னு ஜுரைஜ், இப்னு இஸ்ஹாக், முஹம்மத் பின் அஜ்லான், ஷுஃபா பின் அல்ஹஜ்ஜாஜ், அல்லைஸ் பின் ஸஃத், மாலிக் இமாம், ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ, ஸுஃப்யான் பின் உயைனா, ஹம்மாத் பின் ஸைத்

வேறு பெயர்கள்: ஹிஷாம் பின் உர்வா


ஆதாரம்: muslimscholars.info (11065) · Should verify

உர்வா பின் ஸுபைர்-அஸ்தீ

உர்வா பின் ஸுபைர்-அல்குரஷீ (ரஹ்) – 'Urwa ibn al-Zubayr

இறப்பு: ஹிஜ்ரி 93, மதீனா

தரம்: பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: உர்வா பின் ஸுபைர்

தந்தை பெயர்: ஸுபைர் பின் அல்கவ்வாம்

வம்சம்: அல்-அவ்வாம் பின் குவைலித் பின் அஸத் பின் அப்துல் உஸ்ஸா பின் குஸை பின் கிலாப்

புனைப்பெயர்: அபூ அப்துல்லாஹ், அல்ஃபகீஹ்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, அல்அகீக், பஸரா, எகிப்து

பிறப்பு: ஹிஜ்ரி 23, மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 93, மதீனா

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

உர்வா பின் ஸுபைர் ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 23 ஆம் ஆண்டு மதீனாவில் பிறந்தார். இவர் தாபிஈ தலைமுறையைச் சேர்ந்தவர். மதீனாவின் ஏழு ஃபுக்கஹாக்களில் (மார்க்க அறிஞர்களில்) ஒருவராகவும், இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்பகால அதிகாரியாகவும் கருதப்படுகிறார்.

இவர் பலமானவர் ஆவார். ஹிஜ்ரி 93 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): ஸுபைர் பின் அல்கவ்வாம், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், அஸ்மா பின்த் அபீபக்ர், ஆயிஷா பின்த் அபீபக்ர், அலீ பின் அபீதாலிப், ஸயீத் பின் ஸைத், ஹகீம் பின் ஹிஸாம், ஸைத் பின் ஸாபித், அப்துல்லாஹ் பின் ஜஃபர், இப்னு அப்பாஸ், இப்னு உமர், அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஹிஷாம் பின் உர்வா, அப்துல்லாஹ் பின் உர்வா, உஸ்மான் பின் உர்வா பின் அஸ்ஸுபைர், முஹம்மத் பின் உர்வா பின் அஸ்ஸுபைர், யஹ்யா பின் உர்வா பின் அஸ்ஸுபைர், உமர் பின் அப்துல்லாஹ், முஹம்மத் பின் ஜஃபர் பின் அஸ்ஸுபைர், ஸுலைமான் பின் யஸார், அபூ ஸலமா பின் அப்துர்ரஹ்மான், இப்னு ஷிஹாப், ஸஃப்வான் பின் ஸுலைம், அபுஸ் ஸினாத்

வேறு பெயர்கள்: உர்வா இப்னு ஸுபைர், உர்வா


ஆதாரம்: muslimscholars.info (10511) · Should verify

அப்துல்லாஹ் பின் அம்ர்-அஸ்ஸஹ்மீ (ரலி)

நபித்தோழர்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.