أَنَّهُ كَانَ يَأْخُذُهُ وَالحَسَنَ فَيَقُولُ: «اللَّهُمَّ أَحِبَّهُمَا، فَإِنِّي أُحِبُّهُمَا»
3735. உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (சிறுவர்களாக இருந்த) என்னையும், ஹஸன் (ரலி) அவர்களையும் கையிலெடுத்து ‘அல்லாஹ்வே! இவர்கள் இருவரையும் நான் நேசிக்கிறேன்; நீயும் நேசிப்பாயாக!’ என்று பிரார்த்திப்பார்கள்.
அத்தியாயம்: 62