🔗

புகாரி: 5688

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«فِي الحَبَّةِ السَّوْدَاءِ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ، إِلَّا السَّامَ»
قَالَ ابْنُ شِهَابٍ: وَالسَّامُ المَوْتُ، وَالحَبَّةُ السَّوْدَاءُ: الشُّونِيزُ


5688. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கருஞ்சீரக விதையில் (சாம் எனும்) மரணத்தைத் தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) கூறினார்கள்:

‘சாம்’ என்றால் ‘மரணம்’ என்று பொருள். ‘அல்ஹப்பத்துஸ் ஸவ்தா’ என்றால், (பாரசீகத்தில்) ‘ஷூனீஸ்’ (கருஞ்சீரகம்) என்று பொருள்.

அத்தியாயம்: 76