🔗

புகாரி: 7560

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَثَلُ المُؤْمِنِ الَّذِي يَقْرَأُ القُرْآنَ كَالأُتْرُجَّةِ، طَعْمُهَا طَيِّبٌ وَرِيحُهَا طَيِّبٌ، وَمَثَلُ الَّذِي لاَ يَقْرَأُ كَالتَّمْرَةِ، طَعْمُهَا طَيِّبٌ وَلاَ رِيحَ لَهَا، وَمَثَلُ الفَاجِرِ الَّذِي يَقْرَأُ القُرْآنَ كَمَثَلِ الرَّيْحَانَةِ، رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا مُرٌّ، وَمَثَلُ الفَاجِرِ الَّذِي لاَ يَقْرَأُ القُرْآنَ كَمَثَلِ الحَنْظَلَةِ، طَعْمُهَا مُرٌّ وَلاَ رِيحَ لَهَا»


பாடம் : 57

பாவிகள் மற்றும் நயவஞ்சகர்கள் குர்ஆன் ஓதுவதும், அவர்களது ஓதுதலும், சப்தமும் குரல்வளையைத் தாண்டிச் செல்லாது என்பதும்.

7560. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

குர்ஆனை ஓதுகிற இறைநம்பிக்கையாளரின் நிலையானது நாரத்தைப் பழம் போன்றதாகும். அதன் சுவையும் நன்று. அதன் மணமும் நன்று. குர்ஆனை ஓதாத (இறைநம்பிக்கையாளரான ஒரு)வரின் நிலையானது பேரீச்சம் பழத்தைப் போன்றதாகும். அதன் சுவை நன்று; (ஆனால்,) அதற்கு மணம் கிடையாது. குர்ஆனை ஓதுகிற பாவியின் நிலை துளசிச் செடியின் நிலையைப் போன்றதாகும். அதன் மணம் நன்று; அதன் சுவையோ கசப்பானது. குர்ஆன் ஓதாத பாவியின் நிலை குமட்டிக்காயின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அதன் சுவையும் கசப்பானது. அதற்கு மணமும் கிடையாது.

என அபூ மூஸா (ரலி) அறிவித்தார்.199

Book : 97