பாடம் : 57
பாவிகள் மற்றும் நயவஞ்சகர்கள் குர்ஆன் ஓதுவதும், அவர்களது ஓதுதலும், சப்தமும் குரல்வளையைத் தாண்டிச் செல்லாது என்பதும்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’
குர்ஆனை ஓதுகிற இறைநம்பிக்கையாளரின் நிலையானது நாரத்தைப் பழம் போன்றதாகும். அதன் சுவையும் நன்று. அதன் மணமும் நன்று. குர்ஆனை ஓதாத (இறைநம்பிக்கையாளரான ஒரு)வரின் நிலையானது பேரீச்சம் பழத்தைப் போன்றதாகும். அதன் சுவை நன்று; (ஆனால்,) அதற்கு மணம் கிடையாது. குர்ஆனை ஓதுகிற பாவியின் நிலை துளசிச் செடியின் நிலையைப் போன்றதாகும். அதன் மணம் நன்று; அதன் சுவையோ கசப்பானது. குர்ஆன் ஓதாத பாவியின் நிலை குமட்டிக்காயின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அதன் சுவையும் கசப்பானது. அதற்கு மணமும் கிடையாது.
என அபூ மூஸா (ரலி) அறிவித்தார்.
Book : 97
(புகாரி: 7560)بَابُ قِرَاءَةِ الفَاجِرِ وَالمُنَافِقِ، وَأَصْوَاتُهُمْ وَتِلاَوَتُهُمْ لاَ تُجَاوِزُ حَنَاجِرَهُمْ
حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنَا أَنَسٌ، عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«مَثَلُ المُؤْمِنِ الَّذِي يَقْرَأُ القُرْآنَ كَالأُتْرُجَّةِ، طَعْمُهَا طَيِّبٌ وَرِيحُهَا طَيِّبٌ، وَمَثَلُ الَّذِي لاَ يَقْرَأُ كَالتَّمْرَةِ، طَعْمُهَا طَيِّبٌ وَلاَ رِيحَ لَهَا، وَمَثَلُ الفَاجِرِ الَّذِي يَقْرَأُ القُرْآنَ كَمَثَلِ الرَّيْحَانَةِ، رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا مُرٌّ، وَمَثَلُ الفَاجِرِ الَّذِي لاَ يَقْرَأُ القُرْآنَ كَمَثَلِ الحَنْظَلَةِ، طَعْمُهَا مُرٌّ وَلاَ رِيحَ لَهَا»
Bukhari-Tamil-7560.
Bukhari-TamilMisc-7560.
Bukhari-Shamila-7560.
Bukhari-Alamiah-
Bukhari-JawamiulKalim-
இந்த செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1. புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்
2. ஹுத்பா பின் காலித்-அல்கைஸீ
3. ஹம்மாம் பின் யஹ்யா-அல்அவ்தீ
4. கதாதா பின் திஆமா-அஸ்ஸதூஸீ
5. அனஸ் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 93
வயது: 103
நபித்தோழர், சுமார் 2286 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி)-அபூஹம்ஸா
6. அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)-அப்துல்லாஹ் பின் கைஸ்
மேலும் பார்க்க: புகாரி-5059.
சமீப விமர்சனங்கள்