தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5059

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

1 . குர்ஆனை ஓதி அதன்படி செயலும் ஆற்றக்கூடிய இறைநம்பிக்கையாளர் எலுமிச்சை போன்றவர்; அதன் சுவையும் நன்று; வாசனையும் நன்று.
2 . குர்ஆனை ஓதாமல் அதன்படி செயலாற்றி மட்டும் வருபவர், பேரிச்சம் (பழம்) போன்றவர். அதன் சுவை நன்று; (ஆனால்,) அதற்கு மணமில்லை.
3 . குர்ஆனை ஓதுகிற நயவஞ்சகனின் நிலை, துளிசிச் செடியின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அதன் வாசனை நன்று; அதன் சுவையோ கசப்பானது.
4 . குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலை, குமட்டிக்காய் போன்றதாகும். அதன் சுவையும் ‘கசப்பானது’ அல்லது ‘அருவருப்பானது’ அதன் வாடையும் வெறுப்பானது.

அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)

அத்தியாயம்: 66

(புகாரி: 5059)

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

المُؤْمِنُ الَّذِي يَقْرَأُ القُرْآنَ وَيَعْمَلُ بِهِ: كَالأُتْرُجَّةِ، طَعْمُهَا طَيِّبٌ وَرِيحُهَا طَيِّبٌ، وَالمُؤْمِنُ الَّذِي لاَ يَقْرَأُ القُرْآنَ، وَيَعْمَلُ بِهِ: كَالتَّمْرَةِ طَعْمُهَا طَيِّبٌ وَلاَ رِيحَ لَهَا، وَمَثَلُ المُنَافِقِ الَّذِي يَقْرَأُ القُرْآنَ: كَالرَّيْحَانَةِ رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا مُرٌّ، وَمَثَلُ المُنَافِقِ الَّذِي لاَ يَقْرَأُ القُرْآنَ: كَالحَنْظَلَةِ، طَعْمُهَا مُرٌّ – أَوْ خَبِيثٌ – وَرِيحُهَا مُرٌّ


Bukhari-Tamil-5059.
Bukhari-TamilMisc-5059.
Bukhari-Shamila-5059.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்

2 . முஸத்தத்

3 . யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அல்கத்தான்

4 . ஷுஅபா

5 . கதாதா

6 . அனஸ் (ரலி)

7 . அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)


இந்தச் செய்தியை கதாதா அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்கள் மட்டுமே, (குர்ஆனை ஓதி), “وَيَعْمَلُ بِهِ – அதன்படி செயல்படக்கூடியவர்” என்ற வாசகத்தைக் கூடுதலாக அறிவித்துள்ளார். மஃமர், ஹம்மாம் பின் யஹ்யா, ஸயீத் பின் அபூஅரூபா,பிறப்பு ஹிஜ்ரி 69
இறப்பு ஹிஜ்ரி 156
வயது: 87
அபான் பின் யஸீத், அபூஅவானா போன்ற வேறு சிலர் இந்த வாசகத்தை அறிவிக்கவில்லை.

மேலும் யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அல்கத்தான் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் சிலரின் அறிவிப்பில் இந்தக் கூடுதல் வாசகம் உள்ளது. சிலரின் அறிவிப்பில் இந்த வாசகம் இல்லை…

கதாதா அவர்களின் மாணவர்களில் முன்னுரிமை பெற்ற மாணவர்கள் ஸயீத் பின் அபூஅரூபா,பிறப்பு ஹிஜ்ரி 69
இறப்பு ஹிஜ்ரி 156
வயது: 87
ஹிஷாம் அத்தஸ்துவாஈ, ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
ஆகியோர் ஆவார்கள் என இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: அத்தாரீகுல் கபீர்-இப்னு அபூகைஸமா-1835, 2/83)

எனவே கூடுதல் வாசகம் மிகப்பலமான அறிவிப்பாளர்கள் வழியாக வந்துள்ளது என்பதாலும், குர்ஆனை ஓதுவது எப்படி ஒரு நல்அமலோ அது போன்று அதன்படி செயல்படுவதும் மிக முக்கியமானது என்பதால் இதை ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சனமாகக் குறிப்பிடவில்லை.


இந்தச் செய்தியை சிலர் அனஸ் (ரலி) அவர்களின் செய்தியாகவும் அறிவித்துள்ளனர். இது அபூமூஸா (ரலி) அவர்களின் செய்தியாக வந்திருப்பதே மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்தியாகும் என மிஸ்ஸீ இமாம் குறிப்பிட்டுள்ளார்…

 


1 . இந்தக் கருத்தில் அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • கதாதா —> அனஸ் (ரலி) —> அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)

பார்க்க: அல்ஜாமிஃ-மஃமர்-, முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, தாரிமீ-, புகாரி-5020, 5059, 5427, 7560, முஸ்லிம்-1461, இப்னு மாஜா-214, அபூதாவூத்-4830, திர்மிதீ-2865, முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-, நஸாயீ-5038, முஸ்னத் அபீ யஃலா-, இப்னு ஹிப்பான்-, …


  • முஃதமிர் —> அவ்ஃப் —> கஸாமா —> அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-, இப்னு ஹிப்பான்-,


2 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-4829.


கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.