«أُمِرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ، وَلاَ يَكُفَّ ثَوْبَهُ وَلاَ شَعَرَهُ»
பாடம்: 137
(ஸஜ்தாவின் போது தரையில் படாதவாறு) தலைமுடியைத் தடுக்கக் கூடாது.
815. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஏழு உறுப்புகள் படுமாறு ஸஜ்தாச் செய்யும் படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது என்றும் கட்டளையிடப்பட்டார்கள்.
அத்தியாயம்: 10