«إِسْبَاغُ الْوُضُوءِ شَطْرُ الْإِيمَانِ، وَالْحَمْدُ لِلَّهِ مِلْءُ الْمِيزَانِ، وَالتَّسْبِيحُ وَالتَّكْبِيرُ مِلْءُ السَّمَوَاتِ وَالْأَرْضِ، وَالصَّلَاةُ نُورٌ، وَالزَّكَاةُ بُرْهَانٌ، وَالصَّبْرُ ضِيَاءٌ، وَالْقُرْآنُ حُجَّةٌ لَكَ أَوْ عَلَيْكَ، كُلُّ النَّاسِ يَغْدُو، فَبَائِعٌ نَفْسَهُ، فَمُعْتِقُهَا أَوْ مُوبِقُهَا»
பாடம்:
உளூச் செய்வது இறைநம்பிக்கையில் பாதி.
280. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உளூவை முழுமையாகச் செய்வது இறைநம்பிக்கையில் பாதியாகும். ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) எனக் கூறுவது (மறுமையில் நன்மைகளின்) தராசை நிரப்பும். ‘ஸுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்), ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) ஆகிய துதிச் சொற்கள் வானங்கள் மற்றும் பூமிக்கு இடைப்பட்ட பகுதியை நிரப்பும்.
தொழுகை ஒரு பிரகாசம் (ஒளி) ஆகும்; ஸகாத் ஒரு சான்றாகும்; பொறுமை ஒரு வெளிச்சமாகும்; குர்ஆன் உமக்கு ஆதரவான அல்லது உமக்கு எதிரான சாட்சியமாகும்.
மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மை விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (அல்லாஹ்விடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மை அழித்துக்கொள்கின்றனர்.
அறிவிப்பவர்: அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி)