தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-280

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

உளூச் செய்வது இறைநம்பிக்கையில் பாதி.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உளூவை முழுமையாகச் செய்வது இறைநம்பிக்கையில் பாதியாகும். ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) எனக் கூறுவது (மறுமையில் நன்மைகளின்) தராசை நிரப்பும். ‘ஸுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்), ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) ஆகிய துதிச் சொற்கள் வானங்கள் மற்றும் பூமிக்கு இடைப்பட்ட பகுதியை நிரப்பும்.

தொழுகை ஒரு பிரகாசம் (ஒளி) ஆகும்; ஸகாத் ஒரு சான்றாகும்; பொறுமை ஒரு வெளிச்சமாகும்; குர்ஆன் உமக்கு ஆதரவான அல்லது உமக்கு எதிரான சாட்சியமாகும்.

மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மை விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (அல்லாஹ்விடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மை அழித்துக்கொள்கின்றனர்.

அறிவிப்பவர்: அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி)

(இப்னுமாஜா: 280)

بَابُ الْوُضُوءِ شَطْرُ الْإِيمَانِ

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبِ بْنِ شَابُورَ قَالَ: أَخْبَرَنِي مُعَاوِيَةُ بْنُ سَلَّامٍ، عَنْ أَخِيهِ، أَنَّهُ أَخْبَرَهُ عَنْ جَدِّهِ أَبِي سَلَّامٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غَنْمٍ، عَنْ أَبِي مَالِكٍ الْأَشْعَرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«إِسْبَاغُ الْوُضُوءِ شَطْرُ الْإِيمَانِ، وَالْحَمْدُ لِلَّهِ مِلْءُ الْمِيزَانِ، وَالتَّسْبِيحُ وَالتَّكْبِيرُ مِلْءُ السَّمَوَاتِ وَالْأَرْضِ، وَالصَّلَاةُ نُورٌ، وَالزَّكَاةُ بُرْهَانٌ، وَالصَّبْرُ ضِيَاءٌ، وَالْقُرْآنُ حُجَّةٌ لَكَ أَوْ عَلَيْكَ، كُلُّ النَّاسِ يَغْدُو، فَبَائِعٌ نَفْسَهُ، فَمُعْتِقُهَا أَوْ مُوبِقُهَا»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-276.
Ibn-Majah-Shamila-280.
Ibn-Majah-Alamiah-276.
Ibn-Majah-JawamiulKalim-276.




இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர்.


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . இப்னு மாஜா இமாம்-முஹம்மத் பின் யஸீத் பின் மாஜா (3. பலமானவர்).

2 . அப்துர்ரஹ்மான்-துஹைம்-அல்குரஷீ (2. மிகப் பலமானவர்).

3 . முஹம்மத் பின் ஷுஐப்-அல்குரஷீ (3. பலமானவர்).

4 . முஆவியா பின் ஸல்லாம் (3. பலமானவர்).

5 . ஸைத் பின் ஸல்லாம் (3. பலமானவர்).

6 . மம்தூர் அஸ்வத்-அபூஸல்லாம் (3. பலமானவர்).

7 . அப்துர்ரஹ்மான் பின் ஃகன்ம்-அல்அஷ்அரீ (3. பலமானவர்).

8 . அபூமாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
அல்அஷ்அரீ-கஅப் பின் ஆஸிம் (ரலி)
(1. நபித்தோழர்)
.


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-45291-மம்தூர் அஸ்வத்-அபூஸல்லாம் அவர்கள் பலமானவர் தான் என்றாலும் இவர் தான் அறிவிக்கும் சில ஆசிரியர்களிடமிருந்து ஸிமாஃவை குறிப்பிடாமல் முர்ஸலாக அறிவித்துள்ளார். இதனால் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் தனது ஸஹீஹ் நூலில் இவரின் ஹதீஸ்களை பதிவு செய்யவில்லை என்று தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள் கூறியுள்ளார். இவர் ஹுதைஃபா பின் யமான் (ரலி), அபூதர் (ரலி), ஸவ்பான் (ரலி), நுஃமான் பின் பஷீர் (ரலி) ஆகியோரிடம் செவியேற்கவில்லை என்று சில ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.
  • இவர் ஷாம் நாட்டைச் சேர்ந்தவர். ஹிஜ்ரி-101 அல்லது 110 இல் இறந்தார். ராவீ-22157-அப்துர்ரஹ்மான் பின் ஃகன்ம் அவர்களும் ஷாம் நாட்டைச் சேர்ந்தவர். இவர் ஹிஜ்ரி-78 இல் இறந்தார். பொதுவாக ஷாம்வாசிகளிடம் ஹதீஸை அறிவிக்கும் முறை عن – என்று கூறி அன்அனாவாக அறிவிக்கும் வழக்கமாக இருந்தது.
  • மேற்கண்ட செய்தியை மம்தூர் அவர்கள் அபூமாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்ததாக சில செய்திகள் வந்திருந்தாலும் இதை இவர் அப்துர்ரஹ்மான் பின் ஃகன்ம் அவர்களிடம் தான் கேட்டியிருப்பார் என்பதால் அபூஸல்லாம் —> அப்துர்ரஹ்மான் பின் ஃகன்ம் —> அபூமாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    (ரலி)
    என்ற அறிவிப்பாளர்தொடரே சரியானதாகும்.

1 . இந்தக் கருத்தில் அபூமாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபூஸல்லாம் —> அப்துர்ரஹ்மான் பின் ஃகன்ம் —> அபூமாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    (ரலி)

பார்க்க: இப்னு மாஜா-280, குப்ரா நஸாயீ-, நஸாயீ-2437, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-, …


  • அபூஸல்லாம் —> அபூமாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    (ரலி)

பார்க்க: … அஹ்மத்-, தாரிமீ-, முஸ்லிம்-381, திர்மிதீ- 3517, குப்ரா நஸாயீ-, …


2 . பெயர் குறிப்பிடப்படாத நபித்தோழர் வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-3519.


 

 


அல்அர்பஈன்-நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
எண்-23.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.