ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன் என்று கூறுவது) நன்மையின் தராசில் பாதியை நிரப்பக்கூடியதாகும். அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அவனுக்கே உரியது என்று கூறுவது) நன்மையின் தராசு முழுவதையும் நிரப்பக்கூடியதாகும். அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன் என்று கூறுவது) வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக்கூடிய (அளவிற்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்ட)தாகும். நோன்பு வைப்பது பொறுமையில் பாதியாகும். தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்களின் கைவிரல்களால் அல்லது என்னுடைய கைவிரல்களால் எண்ணி மேற்கண்ட ஐந்து செய்திகளைக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: பனூஸுலைம் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர்.
(திர்மிதி: 3519)
حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ جُرَيٍّ النَّهْدِيِّ، عَنْ رَجُلٍ، مِنْ بَنِي سُلَيْمٍ، قَالَ:
عَدَّهُنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي يَدِي أَوْ فِي يَدِهِ: «التَّسْبِيحُ نِصْفُ المِيزَانِ، وَالْحَمْدُ يَمْلَؤُهُ، وَالتَّكْبِيرُ يَمْلَأُ مَا بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ، وَالصَّوْمُ نِصْفُ الصَّبْرِ، وَالطُّهُورُ نِصْفُ الإِيمَانِ»
هَذَا حَدِيثٌ حَسَنٌ. وَقَدْ رَوَاهُ شُعْبَةُ، وَسُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ أَبِي إِسْحَاقَ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3519.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.
இந்த ஹதீஸை நபி ﷺ அவர்களிடம் இருந்து அறிவிப்பவர் பனூஸுலைம் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என்று கூறப்பட்டுள்ளது
இவர் நபிதோழரா அல்லது தாபியியா என்று கூறப்படவில்லை. மேலும் இவர் நல்லவரா கேட்டவரா என்பதும் அறிபட முடியவில்லை அதனால் இவர் மஜ்கூல் ஐன் (யாரென அறியப்படாதவர்) அதனால் இது பலவீனமான செய்தி
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜஸாகல்லாஹு கைரா. இன்ஷா அல்லாஹ் பதிவு செய்கிறோம்.