தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-23099

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

23099.

…ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன் என்று கூறுவது) நன்மையின் தராசில் பாதியை நிரப்பக்கூடியதாகும். அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அவனுக்கே உரியது என்று கூறுவது) நன்மையின் தராசு முழுவதையும் நிரப்பக்கூடியதாகும். அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன் என்று கூறுவது) வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக்கூடிய (அளவிற்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்ட)தாகும். நோன்பு வைப்பது பொறுமையில் பாதியாகும். தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: .

பனூஸுலைம் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர்

921- جري ابن كليب النهدي الكوفي عن رجل من بني سليم له صحبة مقبول من الثالثة أيضا ت

பனூஸுலைம் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு நபித்தோழர்.


பனூஸுலைம் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு நபித்தோழரிடமிருந்து அறிவிக்கும் ஜுரய்யு பின் குலைப் அந்நஹ்தீ அல்கூஃபீ அவர்கள் மக்பூல் (பிறர் சார்புடையவர்) எனும் தரத்தில் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-921)

பனூஸுலைம் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அறிவிக்கும் செய்தியின் கருத்து மூலம் அவர் நபித்தோழர் என்று தெரிவதால் இப்னு ஹஜர் போன்றவர்கள் இவரை நபித்தோழர் என்று குறிப்பிட்டுள்ளனர். நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பதால் அவர்களின் பெயர் கூறப்படாவிட்டாலும் அதனால் பிரச்சனை இல்லை என்பதின்படியே பெரும்பாலான ஹதீஸ்கலை அறிஞர்கள் முடிவு செய்கின்றனர்.

பார்க்க: நபித்தோழர்கள்.


1 . சில அமல்களின் சிறப்புகள்.

பார்க்க: திர்மிதீ-3519.


حَدَّثَنَا يَزِيدُ، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ، عَنْ جُرَيٍّ قَالَ:

الْتَقَى رَجُلَانِ مِنْ بَنِي سُلَيْمٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ أَحَدُهُمَا لِصَاحِبِهِ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «سُبْحَانَ اللَّهِ نِصْفُ الْمِيزَانِ، وَالْحَمْدُ لِلَّهِ يَمْلَؤُهُ، وَاللَّهُ أَكْبَرُ يَمْلَأُ مَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ، وَالصَّوْمُ نِصْفُ الصَّبْرِ، وَالْوُضُوءُ نِصْفُ الْإِيمَانِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-23099.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.



மேலும் பார்க்க: திர்மிதீ-3519 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.