لَقِيتُ وَاثِلَةَ بْنَ الْأَسْقَعِ فِي يَوْمِ عِيدٍ , فَقُلْتُ: تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ , فَقَالَ: ” نَعَمْ، تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ ” , قَالَ وَاثِلَةُ: ” لَقِيتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عِيدٍ فَقُلْتُ: تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ , قَالَ: ” نَعَمْ , تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ
பாடம்:
பெருநாளில் மக்கள், தகப்பலல்லாஹு மின்னா வமின்க என்று கூறிக் கொள்வது.
6294. நான் பெருநாள் அன்று வாஸிலா இப்னு அஸ்கஃ (ரலி) அவர்களைச் சந்தித்து தகப்பலல்லாஹு மின்னா வமின்க” (அல்லாஹ் உங்களிடமிருந்தும் என்னிடமிருந்தும் ஏற்றுக் கொள்வானாக) என்று கூறினேன்.
அதற்கவர்கள் ஆம் ! தகப்பலல்லாஹு மின்னா வமின்க என்று கூறினார்கள். பிறகு அவர்கள், ”நான் பெருநாளன்று நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து தகப்பலல்லாஹு மின்னா வமின்க என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”நஅம் (ஆம்), தகப்பலல்லாஹு மின்னா வமின்க என்று பதிலுரைத்தார்கள் என்று கூறினார்.
அறிவிப்பவர்: காலித் பின் மஃதான் (ரஹ்)