🔗

musannaf-abdur-razzaq-10420: 10420

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: «لَا تُغَالُوا فِي مُهُورِ النِّسَاءِ»، فَقَالَتِ امْرَأَةٌ: لَيْسَ ذَلِكَ لَكَ يَا عُمَرُ، إِنَّ اللَّهَ يَقُولُ: «وَإِنْ آتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنْطَارًا مِنْ ذَهَبٍ» قَالَ: وَكَذَلِكَ هِيَ فِي قِرَاءَةِ عَبْدِ اللَّهِ «فَلَا يَحِلُّ لَكُمْ أَنْ تَأْخُذُوا مِنْهُ شَيْئًا»، فَقَالَ عُمَرُ: «إِنَّ امْرَأَةً خَاصَمَتْ عُمَرَ فَخَصَمَتْهُ»


10420. (ஒரு முறை) உமர் (ரலி) அவர்கள், (உரைமேடையில்) ஆண்களே! நீங்கள் மஹர் கொடுப்பதில் (அதிகமாக மஹர் கொடுத்து) எல்லை மீறாதீர்கள்! என்று கூறினார்கள். அப்போது ஒரு பெண்மணி, “உமர் அவர்களே! உங்களுக்கு இதைக் கூற அதிகாரமில்லை. அல்லாஹ் (குர்ஆனில் “ஒரு மனைவியை விவாகரத்துச் செய்து, இன்னொருத்தியை மணந்து கொள்ள நீங்கள் விரும்பினால்) அவளுக்கு ஒரு தங்க குவியலையே கொடுத்திருந்தாலும் அதில் எதையும் பிடுங்கிக் கொள்ளாதீர்கள்! (அக்கிரமமாகவும், பெரும் குற்றமாகவும் உள்ள நிலையில் அதைப் பிடுங்கிக் கொள்கிறீர்களா?-அல்குர்ஆன்-4 :20) எனக் கூறியிருக்க நீங்கள் எவ்வாறு தடுப்பீர்கள்” என்று ஆட்சேபித்தார்.

உடனே உமர் (ரலி) அவர்கள், இந்தப் பெண் உமரை வாதத்தில் வென்று விட்டார் என்று கூறினார்கள்.

(அப்துர் ரஸ்ஸாக் அவர்கள் கூறுகிறார்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களின் ஓதும் முறையில், “நீங்கள் ஒரு தங்க குவியலையே கொடுத்திருந்தாலும் அதிலிருந்து எதையும் பிடுங்கிக் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல” என்று இருந்தது)

அறிவிப்பவர்: அபூஅப்துர்ரஹ்மான் அஸ்ஸுலமீ (ரஹ்)