🔗

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 34214

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

” لَمَّا رَأَتِ الْمَلَائِكَةُ بَنِي آدَمَ وَمَا يُذْنِبُونَ , قَالُوا: يَا رَبِّ يُذْنِبُونَ , قَالَ: لَوْ كُنْتُمْ مِثْلَهُمْ فَعَلْتُمْ كَمَا يَفْعَلُونَ , فَاخْتَارُوا مِنْكُمْ مَلَكَيْنِ , قَالَ: فَاخْتَارُوا هَارُوتَ وَمَارُوتَ , فَقَالَ لَهُمَا تَبَارَكَ وَتَعَالَى: إِنَّ بَيْنِي وَبَيْنَ النَّاسِ رَسُولًا , فَلَيْسَ بَيْنِي وَبَيْنَكُمْ أَحَدٌ , لَا تُشْرِكَا بِي شَيْئًا وَلَا تَسْرِقَا وَلَا تَزْنِيَا، قَالَ: عَبْدُ اللَّهِ: قَالَ كَعْبٌ: فَمَا اسْتَكْمَلَا ذَلِكَ الْيَوْمَ حَتَّى وَقَعَا فِيمَا حُرِّمَ عَلَيْهِمَا “


34214. கஅபுல் அஹ்பார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

வானவர்கள், ஆதமின் மக்களையும் அவர்கள் செய்யும் பாவங்களையும் கண்டபோது, “அல்லாஹ்வே! மனிதர்கள் பாவம் செய்கிறார்கள்” என்று கூறினர். அதற்கு அல்லாஹ், “நீங்களும் அவர்களைப் போல இருந்தால், அவர்கள் செய்வதைப் போலவே செய்வீர்கள்” என்று கூறினான். பின்னர், “உங்களில் இருந்து இரண்டு வானவர்களைத் தேர்ந்தெடுங்கள்” என்றான். அவர்கள் ஹாரூத், மாரூத் எனும் இரு வானவர்களைத் தேர்ந்தெடுத்தனர்.

பின்னர், உயர்வும் வளமும் மிக்கவனான அல்லாஹ் அவ்விருவரிடம், “எனக்கும் மனிதர்களுக்கும் இடையில் ஒரு தூதர் இருக்கிறார். (ஆனால்) எனக்கும் உங்களுக்கும் இடையில் யாரும் இல்லை. (எனவே என்னுடைய கட்டளை உங்களுக்கென்னவெனில்) என்னுடன் யாரையும் இணை வைக்காதீர்கள்; திருடாதீர்கள்; விபச்சாரம் செய்யாதீர்கள்” என்று கூறினான்.

மேலும் கஅப் (ரஹ்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அவர்கள் அந்த ஒரு நாளை முழுமையாக அடைவதற்குள், தங்களுக்குத் தடைசெய்யப்பட்ட (பாவமான)தில் விழுந்துவிட்டனர்.