தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-34214

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

34214. கஅபுல் அஹ்பார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

வானவர்கள், ஆதமின் மக்களையும் அவர்கள் செய்யும் பாவங்களையும் கண்டபோது, “அல்லாஹ்வே! மனிதர்கள் பாவம் செய்கிறார்கள்” என்று கூறினர். அதற்கு அல்லாஹ், “நீங்களும் அவர்களைப் போல இருந்தால், அவர்கள் செய்வதைப் போலவே செய்வீர்கள்” என்று கூறினான். பின்னர், “உங்களில் இருந்து இரண்டு வானவர்களைத் தேர்ந்தெடுங்கள்” என்றான். அவர்கள் ஹாரூத், மாரூத் எனும் இரு வானவர்களைத் தேர்ந்தெடுத்தனர்.

பின்னர், உயர்வும் வளமும் மிக்கவனான அல்லாஹ் அவ்விருவரிடம், “எனக்கும் மனிதர்களுக்கும் இடையில் ஒரு தூதர் இருக்கிறார். (ஆனால்) எனக்கும் உங்களுக்கும் இடையில் யாரும் இல்லை. (எனவே என்னுடைய கட்டளை உங்களுக்கென்னவெனில்) என்னுடன் யாரையும் இணை வைக்காதீர்கள்; திருடாதீர்கள்; விபச்சாரம் செய்யாதீர்கள்” என்று கூறினான்.

மேலும் கஅப் (ரஹ்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அவர்கள் அந்த ஒரு நாளை முழுமையாக அடைவதற்குள், தங்களுக்குத் தடைசெய்யப்பட்ட (பாவமான)தில் விழுந்துவிட்டனர்.


حَدَّثَنَا، وَكِيعٌ، عَنْ، سُفْيَانَ، عَنْ، مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ، سَالِمٍ، عَنْ، ابْنِ عُمَرَ، عَنْ، كَعْبٍ، قَالَ:

” لَمَّا رَأَتِ الْمَلَائِكَةُ بَنِي آدَمَ وَمَا يُذْنِبُونَ , قَالُوا: يَا رَبِّ يُذْنِبُونَ , قَالَ: لَوْ كُنْتُمْ مِثْلَهُمْ فَعَلْتُمْ كَمَا يَفْعَلُونَ , فَاخْتَارُوا مِنْكُمْ مَلَكَيْنِ , قَالَ: فَاخْتَارُوا هَارُوتَ وَمَارُوتَ , فَقَالَ لَهُمَا تَبَارَكَ وَتَعَالَى: إِنَّ بَيْنِي وَبَيْنَ النَّاسِ رَسُولًا , فَلَيْسَ بَيْنِي وَبَيْنَكُمْ أَحَدٌ , لَا تُشْرِكَا بِي شَيْئًا وَلَا تَسْرِقَا وَلَا تَزْنِيَا، قَالَ: عَبْدُ اللَّهِ: قَالَ كَعْبٌ: فَمَا اسْتَكْمَلَا ذَلِكَ الْيَوْمَ حَتَّى وَقَعَا فِيمَا حُرِّمَ عَلَيْهِمَا “


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-34214.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-33526.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . இப்னு அபூஷைபா

2 . வகீஉ பின் ஜர்ராஹ்

3 . ஸுஃப்யான் ஸவ்ரீ

4 . மூஸா பின் உக்பா

5 . ஸாலிம் பின் அப்துல்லாஹ்

6 . அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

7 . கஅபுல் அஹ்பார்-கஅப் பின் மாதிஃ (ரஹ்)


இந்தச் செய்தியை (நபி-ஸல்-அவர்கள் மரணத்திற்கு பின்பு உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவரான) யூத அறிஞர் கஅப் பின் மாதிஃ (ரஹ்) அவர்களிடமிருந்து நபித்தோழர் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். எனவே இந்தக் கருத்து யூதமத நூல்களில் கூறப்பட்ட தகவல் என்பதுடன், மக்தூஃ வான செய்தியாகும்.

இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் இதுவே முன்னுரிமை பெற்ற செய்தி என்றும் மற்ற நபித்தோழர்கள் வழியாக வரும் செய்திகளில் விமர்சனம் உள்ளது என்றும் இப்னு கஸீர் பிறப்பு ஹிஜ்ரி 700
இறப்பு ஹிஜ்ரி 774
வயது: 74
போன்ற பல அறிஞர்கள் கூறியுள்ளனர்…


1 . இந்தக் கருத்தில் கஅபுல் அஹ்பார் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: தஃப்ஸீரு அப்துர்ரஸ்ஸாக்-97, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-34214, தஃப்ஸீருத் தபரீ-, தஃப்ஸீரு இப்னு அபீஹாதிம்-, ஷுஅபுல் ஈமான்-6269,


2 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-6178.


3 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஹாகிம்-3655.


 

இப்னு அபூஷைபா

عبد الله بن أبي شيبة

இறப்பு: ஹிஜ்ரி 235


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல்லாஹ் பின் அபூஷைபா

தந்தை பெயர்: அபூஷைபா

இறப்பு: ஹிஜ்ரி 235


வாழ்க்கைக் குறிப்பு

அப்துல்லாஹ் பின் அபூஷைபா ரஹ் அவர்கள் ஒரு அல்-ஹாஃபிழ் ஆவார். இவர் தஃப்ஸீர், ஹதீஸ் மற்றும் ஃபிக்ஹ் துறைகளில் ஆர்வம் கொண்டவர். இவர் ஹிஜ்ரி 235 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

வேறு பெயர்கள்: அப்துல்லாஹ் பின் அபூஷைபா


ஆதாரம்: muslimscholars.info (30010) · Should verify

வகீஉ பின் ஜர்ராஹ்

وكيع بن الجراح

இறப்பு: ஹிஜ்ரி 197, ஃபைத்

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: வகீஃ பின் ஜர்ராஹ் பின் மலீஹ் பின் அதீ பின் ஃபரஸ் பின் ஸுஃப்யான் பின் அல்ஹாரிஸ்

தந்தை பெயர்: ஜர்ராஹ் பின் மலீஹ்

வம்சம்: அர்ரூஆஸீ

புனைப்பெயர்: அபூ ஸுஃப்யான்

ஊர் பெயர்: கூஃபா

பயணித்த ஊர்கள்: கூஃபா, மக்கா, ஷாம், பஸரா

பிறப்பு: ஹிஜ்ரி 129, கூஃபா

இறப்பு: ஹிஜ்ரி 197, ஃபைத்

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

வகீஃ பின் ஜர்ராஹ் ரஹ் அவர்கள் ஒரு மிகப் பலமான ஹதீஸ் அறிவிப்பாளர், இமாம் மற்றும் ஹாஃபிழ் ஆவார். அவர் ஹிஜ்ரி 129 இல் கூஃபாவில் பிறந்தார். அவர் தனது நினைவாற்றலுக்காகப் பெரிதும் அறியப்பட்டவர்; இப்னு ஹன்பல் அவர்கள், “வகீஃ அவர்களைப் போன்று அறிவை உள்வாங்கியவரையும், மனனம் செய்தவரையும் நான் கண்டதில்லை” என்று கூறியுள்ளார்கள்.

அவர் நீதிபதி பதவியை ஏற்க மறுத்தார். ஹிஜ்ரி 197 இல் ஹஜ்ஜிலிருந்து திரும்பும் வழியில் ஃபைத் என்ற இடத்தில் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): ஜர்ராஹ் பின் மலீஹ், இஸ்மாயீல் பின் அபூ காலித் அல்அஹ்மஸீ, ஹிஷாம் பின் உர்வா, ஸுலைமான் அல்அஃமஷ், அப்துல்லாஹ் பின் அவ்ன், அப்துர்ரஹ்மான் பின் அம்ர் அல்அவ்ஸாயீ, மாலிக் இமாம், உஸாமா பின் ஸைத் அல்லைஸீ, இஸ்ராயீல் பின் யூனுஸ் பின் அபூஇஸ்ஹாக், இஸ்மாயீல் பின் முஸ்லிம் அல்அப்தீ, ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ, ஷுஃபா பின் அல்ஹஜ்ஜாஜ்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஸுஃப்யான் பின் வகீஃ, மலீஹ் பின் வகீஃ, உபைது பின் வகீஃ, அஹ்மத் பின் ஹன்பல், அபூபக்ர் பின் அபீ ஷைபா, ஸுஹைர் பின் ஹர்ப், அப்துல்லாஹ் பின் முஸ்லிமா அல்கஅனபீ, அப்துல்லாஹ் பின் ஸயீத் அல்அஷஜ், அலீ பின் கஷ்ரம், மஸ்தத் பின் மஸ்ரஹத், முஹம்மத் பின் ஸலாம் அல்பைகந்தீ, முஹம்மத் பின் யஹ்யா பின் அபூஉமர்

வேறு பெயர்கள்: வகீஃ


ஆதாரம்: muslimscholars.info (20032) · Should verify

ஸுஃப்யான் ஸவ்ரீ

ஸுஃப்யான் ஸவ்ரீ-அஸ்ஸவ்ரீ (ரஹ்) – Sufyan bin Sa‘id Ath-Thawri

இறப்பு: ஹிஜ்ரி 161, பஸரா

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: ஸுஃப்யான் பின் ஸயீத் பின் மஸ்ரூக்

தந்தை பெயர்: ஸயீத் பின் மஸ்ரூக் அஸ்ஸவ்ரீ

வம்சம்: பனூ தவ்ர் பின் அப்து மனாத்

புனைப்பெயர்: அபூ அப்துல்லாஹ்

ஊர் பெயர்: கூஃபா

பயணித்த ஊர்கள்: கூஃபா, ஹிஜாஸ், பஸரா

பிறப்பு: ஹிஜ்ரி 97, கூஃபா

இறப்பு: ஹிஜ்ரி 161, பஸரா

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 97 ஆம் ஆண்டு கூஃபாவில் பிறந்தார்கள். ஹிஜ்ரி 161 ஆம் ஆண்டு பஸராவில் மரணமடைந்தார்கள். இவர் மிகப் பலமானவர், ஹாஃபிழ், ஃபகீஹ், இமாம், ஹுஜ்ஜத் ஆவார்.

ஹதீஸ் கலையில் 'அமீருல் முஃமினீன்' என்று போற்றப்பட்டார்கள். அப்துல்லாஹ் பின் முபாரக் ரஹ் அவர்கள், 'நான் 1100 ஷேக்குகளிடமிருந்து எழுதினேன், ஸுஃப்யான் ரஹ் அவர்களை விட சிறந்த ஒருவரிடமிருந்தும் நான் எழுதவில்லை' என்று கூறினார்கள். இமாம் அஹ்மத் ரஹ் அவர்கள், 'இமாம் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?

இமாம் ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ ரஹ் அவர்கள்தான். என் இதயத்தில் அவரை விட யாரும் முந்தியதில்லை' என்று கூறினார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): ஸயீத் பின் மஸ்ரூக் அஸ்ஸவ்ரீ, ஸுலைமான் பின் அபூ ஸுலைமான், அபூ இஸ்ஹாக் அஸ்ஸபியீ, அப்துல் மாலிக் பின் உமைர், இஸ்மாயீல் பின் அபூ காலித், ஸலமா பின் கஹைல், ஸுலைமான் அல்அஃமஷ், மன்ஸூர் பின் அல்மஃதமர், ஹம்மாத் பின் அபூ ஸுலைமான், ஸுபைத் பின் அல்ஹாரிஸ், அதா பின் அஸ்ஸாயிப் அஸ்ஸகஃபீ, ஸைத் பின் அஸ்லம்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): மாலிக் இமாம், அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ, யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான், அப்துல்லாஹ் பின் முபாரக், ஜரீர் பின் அப்துல் ஹமீத், ஹஃப்ஸ் பின் கியாஸ், ஹம்மாத் பின் உஸாமா, வகீஃ பின் அல்ஜர்ராஹ், யஸீத் பின் ஹாறூன், அபூ நுஐம், உபைதுல்லாஹ் பின் மூஸா, அல்ஃபள்ல் பின் மூஸா அஸ்ஸீனானீ

வேறு பெயர்கள்: ஸுஃப்யான் பின் ஸயீத் அஸ்ஸவ்ரீ, அபூ அப்துல்லாஹ்


ஆதாரம்: muslimscholars.info (20012) · Should verify

மூஸா பின் உக்பா

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஸாலிம் பின் அப்துல்லாஹ்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

عبد الله بن عمر بن الخطاب العدوي

இறப்பு: ஹிஜ்ரி 74, மக்கா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல்லாஹ் பின் உமர் பின் அல்கத்தாப்

தந்தை பெயர்: உமர் பின் அல்கத்தாப் (ரலி)

வம்சம்: குறைஷி, பனூ அதீ

புனைப்பெயர்: அபூ அப்துர்ரஹ்மான்

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 10, மக்கா

இறப்பு: ஹிஜ்ரி 74, மக்கா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

இப்னு உமர் (ரலி) இரண்டாவது கலீஃபா உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் மகனும், நபித்தோழரும் ஆவார். சிறு வயதிலேயே தம் தந்தையுடன் இஸ்லாத்தை ஏற்று, அவருடன் ஹிஜ்ரத் செய்தார். சிறுவராக இருந்ததால் உஹுத் போரில் அனுமதிக்கப்படவில்லை; கந்தக் போரிலும் அதற்குப் பின் நடந்த போர்களிலும் நபி (ஸல்) அவர்களுடன் கலந்துகொண்டார்.

ஹதீஸிலும் மார்க்கச் சட்டத்திலும் முன்னணி அறிஞராக இருந்தார்; இறையச்சம், நேர்மை, நபிவழிச் செய்திகளில் ஆழ்ந்த அறிவு ஆகியவற்றுக்குப் பெயர் பெற்றவர். உம்முல் முஃமினீன் ஹஃப்ஸா (ரலி) அவர்களின் சகோதரர் ஆவார். ஹிஜ்ரி 74 ஆம் ஆண்டு மக்காவில் மரணித்தார் என்று பலர் கூறியுள்ளனர்; ஹிஜ்ரி 73 என்றும் கூறப்பட்டுள்ளது.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): நபி (ஸல்), உமர் பின் அல்கத்தாப் (ரலி), ஸைத் பின் அல்கத்தாப் (ரலி), ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி), அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி), உஸ்மான் பின் அஃப்பான் (ரலி), அலீ பின் அபூதாலிப் (ரலி), பிலால் பின் ரபாஹ் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி), ஸுஹைப் பின் ஸினான் (ரலி), அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), ஆஇஷா பின்த் அபூபக்ர் (ரலி)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஸாலிம் பின் அப்துல்லாஹ் (ரஹ்), நாஃபிஉ (ரஹ்), ஸயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்), காஸிம் பின் முஹம்மத் (ரஹ்), வாகித் பின் அப்துல்லாஹ் (ரஹ்), அப்துல்லாஹ் பின் அப்துல்லாஹ் (ரஹ்), உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் (ரஹ்), ஹம்ஸா பின் அப்துல்லாஹ் (ரஹ்), ஸைத் பின் அப்துல்லாஹ் (ரஹ்), பிலால் பின் அப்துல்லாஹ் (ரஹ்)

வேறு பெயர்கள்: அப்துல்லாஹ் பின் உமர், இப்னு உமர் (ரலி), அபூ அப்துர்ரஹ்மான்


ஆதாரம்: muslimscholars.info (18) · Should verify

கஅபுல் அஹ்பார்-கஅப் பின் மாதிஃ (ரஹ்)

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.