கஅபுல் அஹ்பார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
வானவர்கள், ஆதமின் மக்களையும் அவர்கள் செய்யும் பாவங்களையும் கண்டபோது, “அல்லாஹ்வே! மனிதர்கள் பாவம் செய்கிறார்கள்” என்று கூறினர். அதற்கு அல்லாஹ், “நீங்களும் அவர்களைப் போல இருந்தால், அவர்கள் செய்வதைப் போலவே செய்வீர்கள்” என்று கூறினான். பின்னர், “உங்களில் இருந்து இரண்டு வானவர்களைத் தேர்ந்தெடுங்கள்” என்றான். அவர்கள் ஹாரூத், மாரூத் எனும் இரு வானவர்களைத் தேர்ந்தெடுத்தனர்.
பின்னர், உயர்வும் வளமும் மிக்கவனான அல்லாஹ் அவ்விருவரிடம், “எனக்கும் மனிதர்களுக்கும் இடையில் ஒரு தூதர் இருக்கிறார். (ஆனால்) எனக்கும் உங்களுக்கும் இடையில் யாரும் இல்லை. (எனவே என்னுடைய கட்டளை உங்களுக்கென்னவெனில்) என்னுடன் யாரையும் இணை வைக்காதீர்கள்; திருடாதீர்கள்; விபச்சாரம் செய்யாதீர்கள்” என்று கூறினான்.
மேலும் கஅப் (ரஹ்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அவர்கள் அந்த ஒரு நாளை முழுமையாக அடைவதற்குள், தங்களுக்குத் தடைசெய்யப்பட்ட (பாவமான)தில் விழுந்துவிட்டனர்.
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 34214)حَدَّثَنَا، وَكِيعٌ، عَنْ، سُفْيَانَ، عَنْ، مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ، سَالِمٍ، عَنْ، ابْنِ عُمَرَ، عَنْ، كَعْبٍ، قَالَ:
” لَمَّا رَأَتِ الْمَلَائِكَةُ بَنِي آدَمَ وَمَا يُذْنِبُونَ , قَالُوا: يَا رَبِّ يُذْنِبُونَ , قَالَ: لَوْ كُنْتُمْ مِثْلَهُمْ فَعَلْتُمْ كَمَا يَفْعَلُونَ , فَاخْتَارُوا مِنْكُمْ مَلَكَيْنِ , قَالَ: فَاخْتَارُوا هَارُوتَ وَمَارُوتَ , فَقَالَ لَهُمَا تَبَارَكَ وَتَعَالَى: إِنَّ بَيْنِي وَبَيْنَ النَّاسِ رَسُولًا , فَلَيْسَ بَيْنِي وَبَيْنَكُمْ أَحَدٌ , لَا تُشْرِكَا بِي شَيْئًا وَلَا تَسْرِقَا وَلَا تَزْنِيَا، قَالَ: عَبْدُ اللَّهِ: قَالَ كَعْبٌ: فَمَا اسْتَكْمَلَا ذَلِكَ الْيَوْمَ حَتَّى وَقَعَا فِيمَا حُرِّمَ عَلَيْهِمَا “
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-34214.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-33526.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இப்னு அபூஷைபா
2 . வகீஉ பின் ஜர்ராஹ்
3 . ஸுஃப்யான் ஸவ்ரீ
4 . மூஸா பின் உக்பா
5 . ஸாலிம் பின் அப்துல்லாஹ்
6 . அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
7 . கஅபுல் அஹ்பார்-கஅப் பின் மாதிஃ (ரஹ்)
இந்தச் செய்தியை (நபி-ஸல்-அவர்கள் மரணத்திற்கு பின்பு உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவரான) யூத அறிஞர் கஅப் பின் மாதிஃ (ரஹ்) அவர்களிடமிருந்து நபித்தோழர் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். எனவே இந்தக் கருத்து யூதமத நூல்களில் கூறப்பட்ட தகவல் என்பதுடன், மக்தூஃ வான செய்தியாகும்.
இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் இதுவே முன்னுரிமை பெற்ற செய்தி என்றும் மற்ற நபித்தோழர்கள் வழியாக வரும் செய்திகளில் விமர்சனம் உள்ளது என்றும் இப்னு கஸீர் பிறப்பு ஹிஜ்ரி 700
இறப்பு ஹிஜ்ரி 774
வயது: 74
போன்ற பல அறிஞர்கள் கூறியுள்ளனர்…
1 . இந்தக் கருத்தில் கஅபுல் அஹ்பார் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: தஃப்ஸீரு அப்துர்ரஸ்ஸாக்-97, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-34214, தஃப்ஸீருத் தபரீ-, தஃப்ஸீரு இப்னு அபீஹாதிம்-, ஷுஅபுல் ஈமான்-6269,
2 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-6178.
3 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: ஹாகிம்-3655.
சமீப விமர்சனங்கள்