🔗

முஸ்னது அஹ்மத்: 11019

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِأَصْحَابِهِ، ثُمَّ جَاءَ رَجُلٌ، فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَتَّجِرُ عَلَى هَذَا – أَوْ يَتَصَدَّقُ عَلَى هَذَا – فَيُصَلِّيَ مَعَهُ» قَالَ: فَصَلَّى مَعَهُ رَجُلٌ


11019. நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்குத் தொழுகை நடத்தி முடித்த பிறகு ஒரு மனிதர் பள்ளிக்கு வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவருடன் சேர்ந்து தொழுது இவருக்குத் தர்மம் செய்பவர் யார்?” என்று கூறினார்கள். அந்த சபையிலிருந்த ஒருவர் எழுந்து அம்மனிதருடன் தொழுதார்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)