لَمَّا كَانَ يَوْمُ أُحُدٍ وَانْكَفَأَ الْمُشْرِكُونَ، قَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَوُوا حَتَّى أُثْنِيَ عَلَى رَبِّي، فَصَارُوا خَلْفَهُ صُفُوفًا، فَقَالَ: «اللَّهُمَّ لَكَ الْحَمْدُ كُلُّهُ، اللَّهُمَّ لَا قَابِضَ لِمَا بَسَطْتَ، وَلَا بَاسِطَ لِمَا قَبَضْتَ، وَلَا هَادِيَ لِمَا أَضْلَلْتَ، وَلَا مُضِلَّ لِمَنْ هَدَيْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلَا مُقَرِّبَ لِمَا بَاعَدْتَ، وَلَا مُبَاعِدَ لِمَا قَرَّبْتَ، اللَّهُمَّ ابْسُطْ عَلَيْنَا مِنْ بَرَكَاتِكَ وَرَحْمَتِكَ وَفَضْلِكَ وَرِزْقِكَ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ النَّعِيمَ الْمُقِيمَ الَّذِي لَا يَحُولُ وَلَا يَزُولُ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ النَّعِيمَ يَوْمَ الْعَيْلَةِ وَالْأَمْنَ يَوْمَ الْخَوْفِ، اللَّهُمَّ إِنِّي عَائِذٌ بِكَ مِنْ شَرِّ مَا أَعْطَيْتَنَا وَشَرِّ مَا مَنَعْتَ، اللَّهُمَّ حَبِّبْ إِلَيْنَا الْإِيمَانَ وَزَيِّنْهُ فِي قُلُوبِنَا، وَكَرِّهْ إِلَيْنَا الْكُفْرَ، وَالْفُسُوقَ، وَالْعِصْيَانَ، وَاجْعَلْنَا مِنَ الرَّاشِدِينَ، اللَّهُمَّ تَوَفَّنَا مُسْلِمِينَ، وَأَحْيِنَا مُسْلِمِينَ، وَأَلْحِقْنَا بِالصَّالِحِينَ غَيْرَ خَزَايَا وَلَا مَفْتُونِينَ، اللَّهُمَّ قَاتِلِ الْكَفَرَةَ الَّذِينَ يُكَذِّبُونَ رُسُلَكَ، وَيَصُدُّونَ عَنْ سَبِيلِكَ، وَاجْعَلْ عَلَيْهِمْ رِجْزَكَ وَعَذَابَكَ، اللَّهُمَّ قَاتِلِ الْكَفَرَةَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَهَ الْحَقِّ»
பாடம்:
அப்துல்லாஹ் அஸ்ஸுரகீ அவர்கள் வழியாக வரும் ஹதீஸ்கள். இவருக்கு உபைத் பின் ரிஃபாஆ அஸ்ஸுரகீ என்ற பெயரும் கூறப்படுகிறது.
15492. உஹது(போர்)க் களத்தில் (எதிரிகளான) இணைவைப்பாளர்கள் திரும்பிச் சென்ற பின் நபி (ஸல்) அவர்கள், “என் இறைவனை நான் புகழ்வதற்கு அணிவகுத்து நில்லுங்கள்” என்று கூறினார்கள். முஸ்லிம்கள் அவர்களுக்கு பின்னால் அணிவகுத்து வரிசையாக நின்றார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
“அல்லாஹும்ம லகல் ஹம்து குல்லுஹு. அல்லாஹும்ம லா காபிள லிமா பஸத்த, வலா பாஸித லிமா கபள்த, வலா ஹாதிய லிமா அள்லல்த, வலா முதில்ல லிமன் ஹதைத, வலா முஃதிய லிமா மனஃத, வலா மானிஅ லிமா அஃதைத, வலா முகர்ரிப லிமா பாஅத்த, வ லா முபாஇத லிமா கர்ரப்த.
அல்லாஹும் மப்ஸுத் அலைனா மின் பரகாதிக, வ ரஹ்மதிக, வ ஃபள்லிக வ ரிஸ்கிக், அல்லாஹும்ம இன்னி அஸ்அலுகன் நஈமல் முகீம்-அல்லதீ லா யஹூலு வலா யஸூல். அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகன் நஈம யவ்மல் அய்லஹ், வல்அம்ன யவ்மல் கவ்ஃப். அல்லாஹும்ம இன்னீ ஆயிதுன் பிக மின் ஷர்ரி மா அஃதைதனா, வ ஷர்ரி மா மனஃத.
அல்லாஹும்ம ஹப்பிப் இலைனல் ஈமான், வ ஸய்யின்ஹு ஃபீ குலூபினா, வ கர்ரிஹ் இலைனல் குஃப்ர, வல்ஃபுஸூக, வல்இஸ்யான். வஜ்அல்னா மினர் ராஷிதீன். அல்லாஹும்ம தவஃப்பனா முஸ்லிமீன், வ அஹ்யினா முஸ்லிமீன், வ அல்ஹிக்னா பிஸ்ஸாலிஹீன் ஃகைர கஸாயா, வலா மஃப்தூனீன். அல்லாஹும்ம காதிலில் கஃபரா-அல்லதீன யுகத்திபூன ருஸுலக், வ யஸுத்தூன அன் ஸபீலிக், வஜ்அல் அலைஹிம் ரிஜ்ஸக வ அதாபக். அல்லாஹும்ம காதிலில் கஃபரா-அல்லதீன ஊதூல் கிதாப இலாஹல் ஹக்”
(பொருள்: அல்லாஹ்வே! புகழனைத்தும் உனக்கே உரியது. அல்லாஹ்வே! நீ விரிவுபடுத்தியதை எவராலும் சுருக்க முடியாது; நீ சுருக்கியதை எவராலும் விரிவுபடுத்த முடியாது. நீ வழிகேட்டில் விட்டுவிட்டவருக்கு எவராலும் நேர்வழி காட்ட முடியாது; நீ நேர்வழி காட்டியவரை எவராலும் வழிகேட்டில் தள்ள முடியாது. நீ தடுத்ததை எவராலும் வழங்க முடியாது; நீ வழங்கியதை எவராலும் தடுக்க முடியாது. நீ தூரமாக்கியதை எவராலும் நெருக்கமாக்க முடியாது; நீ நெருக்கமாக்கியதை எவராலும் தூரமாக்க முடியாது.
அல்லாஹ்வே! உனது அபிவிருத்தியையும் அருளையும் அன்பையும் உணவையும் வாழ்வாதாரத்தையும் விசாலமாக்குவாயாக! அல்லாஹ்வே! அகலாத, விலகாத, நிலையான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். அல்லாஹ்வே! ஏழ்மை நாளில் உனது அருளை வேண்டுகிறேன். அச்சமுடைய நாளில் பாதுகாப்பைக் கேட்கிறேன். அல்லாஹ்வே! நீ எங்களுக்கு வழங்கியவற்றின் தீங்கிலிருந்தும் நீ எங்களுக்குத் தடுத்தவற்றின் தீங்கிலிருந்தும் பாதுகாவல் தேடுகிறேன்.
அல்லாஹ்வே! இறை நம்பிக்கையை எங்களுக்கு விருப்பமுள்ளதாகவும், எங்கள் உள்ளங்களுக்கு அழகானதாகவும் ஆக்கி வை. இறைமறுப்பு, பாவம், வரம்புமீறுதல் போன்ற காரியங்களை எங்களுக்கு வெறுப்பானதாக ஆக்கி வை. எங்களை நேர்வழிபெற்றோரில் சேர்த்து விடுவாயாக!
அல்லாஹ்வே! எங்களை முஸ்லிம்களாகவே மரணிக்கச் செய்வாயாக! எங்களை (இழிவானவர்களோ, அல்லது குழப்பவாதிகளோ இல்லாத) நல்லடியார்களுடன் இணைத்திடுவாயாக!
அல்லாஹ்வே! உன்னுடைய தூதர்களை மறுத்து, உன் பாதையை விட்டுத் தடுக்கும் நிராகரிப்பாளர்களை அழித்துவிடு! அவர்கள் மீது உனது கோபத்தையும் அழிவையும் இறக்குவாயாக! அல்லாஹ்வே! உண்மையான இறைவனான (உன்னை) மறுக்கும் வேதக்காரர்களை அழிப்பாயாக!)
அறிவிப்பவர்: ரிஃபாஆ பின் ராஃபிஃ (ரலி)
அஹ்மத் இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தியை (அப்துல்வாஹித் பின் அய்மன் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில்) மர்வான் அல்ஃபராஸீ அவர்கள் ஒரு தடவை இந்த அறிவிப்பாளர்தொடரை இப்னு ரிஃபாஆ அஸ்ஸுரகீ —> அவரின் தந்தை என்று அறிவித்தார். மற்றவர்கள் உபைத் பின் ரிஃபாஆ அஸ்ஸுரகீ என்று (தந்தையை குறிப்பிடாமல் முர்ஸலாக) அறிவித்தனர். (எனவே இந்த அறிவிப்பாளர்தொடரில் மர்வான் அவர்கள் உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் அஸ்ஸுரகீ என்று பெயரைக் கூறியிருப்பது தவறாகும்…)