أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْرَابِيَّانِ، فَقَالَ أَحَدُهُمَا: مَنْ خَيْرُ الرِّجَالِ يَا مُحَمَّدُ؟ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ طَالَ عُمْرُهُ، وَحَسُنَ عَمَلُهُ»
وَقَالَ الْآخَرُ: إِنَّ شَرَائِعَ الْإِسْلَامِ قَدْ كَثُرَتْ عَلَيْنَا، فَبَابٌ نَتَمَسَّكُ بِهِ جَامِعٌ؟ قَالَ: «لَا يَزَالُ لِسَانُكَ رَطْبًا مِنْ ذِكْرِ اللَّهِ»
17680. நபி (ஸல்) அவர்களிடம் இரு கிராமவாசிகள் வந்தனர். அவர்களில் ஒருவர், “முஹம்மதே! மனிதர்களில் சிறந்தவர் யார்?” என்று கேட்டார். அதற்கு, “எவரது ஆயுள் நீண்டதாகவும், நற்செயல்கள் அழகானதாகவும் இருக்கின்றதோ அவர்தான் (மனிதர்களில் சிறந்தவர்)” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அவர்களில் மற்றொருவர், “இஸ்லாம் வகுத்துத் தந்துள்ள சட்டதிட்டங்கள் எங்களுக்கு அதிகமாகத் தென்படுகின்றன. (எங்கள் பலவீனத்தால் அவற்றை நிறைவேற்ற முடியாமல் போய்விடுகிறது). அனைத்தையும் நாங்கள் செயல்படுத்துவதற்கேற்ற ஒரு வழி இருக்கிறதா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உமது நாவு இறைத்துதியால் (எப்போதும்) நனைந்தே இருக்கட்டும்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி)