தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-17680

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

17680. நபி (ஸல்) அவர்களிடம் இரு கிராமவாசிகள் வந்தனர். அவர்களில் ஒருவர், “முஹம்மதே! மனிதர்களில் சிறந்தவர் யார்?” என்று கேட்டார். அதற்கு, “எவரது ஆயுள் நீண்டதாகவும், நற்செயல்கள் அழகானதாகவும் இருக்கின்றதோ அவர்தான் (மனிதர்களில் சிறந்தவர்)” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அவர்களில் மற்றொருவர், “இஸ்லாம் வகுத்துத் தந்துள்ள சட்டதிட்டங்கள் எங்களுக்கு அதிகமாகத் தென்படுகின்றன. (எங்கள் பலவீனத்தால் அவற்றை நிறைவேற்ற முடியாமல் போய்விடுகிறது). அனைத்தையும் நாங்கள் செயல்படுத்துவதற்கேற்ற ஒரு வழி இருக்கிறதா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உமது நாவு இறைத்துதியால் (எப்போதும்) நனைந்தே இருக்கட்டும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: (ரலி)

அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி)

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.


حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا حَسَّانُ بْنُ نُوحٍ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ، قَالَ:

أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْرَابِيَّانِ، فَقَالَ أَحَدُهُمَا: مَنْ خَيْرُ الرِّجَالِ يَا مُحَمَّدُ؟ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ طَالَ عُمْرُهُ، وَحَسُنَ عَمَلُهُ»

وَقَالَ الْآخَرُ: إِنَّ شَرَائِعَ الْإِسْلَامِ قَدْ كَثُرَتْ عَلَيْنَا، فَبَابٌ نَتَمَسَّكُ بِهِ جَامِعٌ؟ قَالَ: «لَا يَزَالُ لِسَانُكَ رَطْبًا مِنْ ذِكْرِ اللَّهِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-17680.
Musnad-Ahmad-Alamiah-17020.
Musnad-Ahmad-JawamiulKalim-17338.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்

2 . அலீ பின் அய்யாஷ்

3 . ஹஸ்ஸான் பின் நூஹ்

4 . அம்ர் பின் கைஸ்

5 . அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி)


1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அம்ர் பின் கைஸ் —> அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-17680, 17698, இப்னு மாஜா-3793, திர்மிதீ-2329, 3375, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-, …


  • ஹஸ்ஸான் பின் நூஹ் —> அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி)

பார்க்க:


  • இப்னுல் முன்திர் —> அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி)

பார்க்க:


2 . இந்தச் செய்தியின் முதல் பகுதியின் கருத்தில் அபூபக்ரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-2330.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: இப்னு ஹிப்பான்-818,


அல்அர்பஈன்-நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
எண்-50.


 

அஹ்மத் இமாம்

இமாம் அஹ்மத்

முழுப்பெயர் : அஹ்மத் இப்னு முஹம்மத் இப்னு ஹன்பல் இப்னு ஹிலால் இப்னு அஸது அஷ்ஷைபானீ (முஸ்னத் அஹ்மத் என்ற ஹதீஸ் நூலைத் தொகுத்தவர்)

புனைப்பெயர் : அபூஅப்தில்லாஹ்

இயற்பெயர் : அஹ்மத்

தந்தைப்பெயர் : முஹம்மது

பிறந்த ஊர் : பக்தாதில் பிறந்தார்

பிறந்த நாள் :  ஹிஜ்ரி 164ம் ஆண்டு

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்:  கூஃபா, பஸரா, மக்கா, மதீனா, யமன், ஷாம், ஜஸீரா போன்ற உலகில் உள்ள பல பாகங்களுக்குப் பயணம் சென்றுள்ளார்.

முஸ்னத் அஹ்மத்

அஸ்ஸுஹுத்

ஃபலாயிலுஸ் ஸஹாபா (ஸஹாபாக்களின் சிறப்பு)

அல்அஷ்ரிபத்

அல்இலல்

அன்னாஸிஹ் வல்மன்ஸுஹ்

அல்மனாசிக்

கிதாபுல் ஃபிதன்

கிதாபுல் ஃபலாயிலி அஹ்லில் பைத்

முஸ்னத் அஹ்லில் பைத்

அல்அஸ்மாவு வல்குனா ( அறிவிப்பாளர்களின் பெயர்கள் தொடர்பானது)

கிதாபுத்தாரிக்

அல்முகத்தமு வல்முதஅக்கர் (முந்தியவர்கள் பிந்தியவர்கள்)

இப்ராஹீம் இப்னு காலித் அஸ்ஸன்ஆனி, இஸ்மாயீல் இப்னு உலய்யா, அபூபக்கர் இப்னு அய்யாஷ், இஸ்ஹாக் இப்னு யூசுஃப் அல்அஸ்ரக், ரபிஃ இப்னு உலய்யா, ரவ்ஹ் இப்னு உப்பாதா, சுஃப்யான் இப்னு உஐனா, தல்க் இப்னு நகயீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

முஹம்மது இப்னு இஸ்மாயீல் அல்புகாரி, முஸ்லிம் இப்னு  ஹஜ்ஜாஜ், அபூதாவூத், அபூபக்கர் அஹ்மத் இப்னு முஹ்ம்மத் இப்னு ஹானீல்பக்தாதீ, அபூஹாதம் முஹம்மத் இப்னு இத்ரீஸ், யஹ்யா இப்னு மயீன், அலீ இப்னு மதீனீ போன்ற அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 241ஆம் வருடம் ரபீவுல்அவ்வல் மாதத்தில் நோய்வாய்ப்பட்டார். பக்தாதில் இதே வருடம் வெள்ளிக்கிழமை அன்று மரணித்தார். அப்போது அவருக்கு 77 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

அலீ பின் அய்யாஷ்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஹஸ்ஸான் பின் நூஹ்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அம்ர் பின் கைஸ்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி)

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.