நபி (ஸல்) அவர்களிடம் இரு கிராமவாசிகள் வந்தனர். அவர்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! மக்களில் சிறந்தவர் யார்?” என்று கேட்டார். அதற்கு, “எவரது ஆயுள் நீண்டதாகவும், நற்செயல்கள் அழகானதாகவும் இருக்கின்றதோ அவர்தான் (மக்களில் சிறந்தவர்)” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அவர்களில் மற்றொருவர், “இஸ்லாம் வகுத்துத் தந்துள்ள சட்டதிட்டங்கள் எனக்கு அதிகமாகத் தென்படுகின்றன. (என் பலவீனத்தால் அவற்றை நிறைவேற்ற முடியாமல் போய்விடுகிறது). நான் அவற்றில் உறுதியாகச் செயல்படுத்துவதற்கான வழிமுறை ஒன்றை எனக்குச் சொல்லித் தாருங்கள்” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உமது நாவு இறைத்துதியால் (எப்போதும்) நனைந்தே இருக்கட்டும்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 17698)حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ مُعَاوِيَةَ يَعْنِي ابْنَ صَالِحٍ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ بُسْرٍ يَقُولُ:
جَاءَ أَعْرَابِيَّانِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ أَحَدُهُمَا: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ النَّاسِ خَيْرٌ؟ قَالَ: «مَنْ طَالَ عُمْرُهُ، وَحَسُنَ عَمَلُهُ»
وَقَالَ الْآخَرُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ شَرَائِعَ الْإِسْلَامِ قَدْ كَثُرَتْ عَلَيَّ، فَمُرْنِي بِأَمْرٍ أَتَثَبَّتُ بِهِ، فَقَالَ: «لَا يَزَالُ لِسَانُكَ رَطْبًا مِنَ اللَّهِ عَزَّ وَجَلَّ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-17698.
Musnad-Ahmad-Alamiah-17037.
Musnad-Ahmad-JawamiulKalim-17355.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்
2 . அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ
3 . முஆவியா பின் ஸாலிஹ்
4 . அம்ர் பின் கைஸ்
5 . அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி)
மேலும் பார்க்க: அஹ்மத்-17680.
சமீப விமர்சனங்கள்