🔗

முஸ்னது அஹ்மத்: 23498

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: عِظْنِي وَأَوْجِزْ، فَقَالَ: «إِذَا قُمْتَ فِي صَلَاتِكَ فَصَلِّ صَلَاةَ مُوَدِّعٍ، وَلَا تَكَلَّمْ بِكَلَامٍ تَعْتَذِرُ مِنْهُ غَدًا، وَاجْمَعِ الْإِيَاسَ مِمَّا فِي يَدَيِ النَّاسِ»


பாடம்:

அபூஅய்யூப் (ரலி) அவர்களின் ஹதீஸ்கள்.

23498. அபூஅய்யூப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சுருக்கமாக அறிவுரை கூறுங்கள்!” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,

1 . “நீர் தொழுகையில் நின்றால், (இதுவே உமது) இறுதித் தொழுகை என்பதைப் போல் தொழுவீராக!;
2 . நாளை மன்னிப்புக் கேட்க வேண்டிய எந்தவொரு சொல்லையும் பேசாதீர்!;
3 . மனிதர்களின் கைகளில் உள்ளவற்றிலிருந்து முற்றிலும் ஆசையைத் துறந்து விடுவீராக!” என்று கூறினார்கள்.