«جَمَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الظُّهْرِ، وَالْعَصْرِ، وَالْمَغْرِبِ، وَالْعِشَاءِ فِي غَيْرِ مَطَرٍ وَلَا سَفَرٍ» قَالُوا: يَا أَبَا عَبَّاسٍ، مَا أَرَادَ بِذَلِكَ؟ قَالَ: التَّوَسُّعَ عَلَى أُمَّتِهِ
3235. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மழைஇல்லாத நிலையிலும் பயணத்தில் இல்லாத நிலையிலும் லுஹரையும் அஸரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்; மஃக்ரிபையும் இஷாவையும் ஒரே நேரத்தில் தொழுதார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அப்போது மக்கள் அவர்களிடம் “அபுல் அப்பாஸ் அவர்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோக்கத்தில் இவ்வாறு செய்தார்கள்?” என்று கேட்டனர். அதற்கு, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “தம் சமுதாயத்தாருக்கு எளிதாக இருக்க நபி (ஸல்) அவர்கள் கருதினார்கள்” என விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்)