தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-3235

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

3235. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மழைஇல்லாத நிலையிலும் பயணத்தில் இல்லாத நிலையிலும் லுஹரையும் அஸரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்; மஃக்ரிபையும் இஷாவையும் ஒரே நேரத்தில் தொழுதார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அப்போது மக்கள் அவர்களிடம் “அபுல் அப்பாஸ் அவர்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோக்கத்தில் இவ்வாறு செய்தார்கள்?” என்று கேட்டனர். அதற்கு, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “தம் சமுதாயத்தாருக்கு எளிதாக இருக்க நபி (ஸல்) அவர்கள் கருதினார்கள்” என விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: (ரஹ்)

ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்)

سعيد بن جبير

இறப்பு: ஹிஜ்ரி 95

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: ஸயீத் பின் ஜுபைர் பின் ஹிஷாம் அல்அஸதீ அல்வால்பீ

தந்தை பெயர்: ஜுபைர் பின் ஹிஷாம்

வம்சம்: அல்அஸதீ அல்வால்பீ

புனைப்பெயர்: அபூ அப்துல்லாஹ், அபூ முஹம்மத், அல்இமாம்

ஊர் பெயர்: கூஃபா

பயணித்த ஊர்கள்: கூஃபா, மக்கா, அஸ்பஹான், ஃபாரிஸ்

பிறப்பு: ஹிஜ்ரி 46

இறப்பு: ஹிஜ்ரி 95

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

ஸயீத் பின் ஜுபைர் ரஹ் அவர்கள் ஒரு தாபிஈ ஆவார். இவர் ஹிஜ்ரி 46 இல் பிறந்தார். இவர் ஹதீஸ் கலையில் மிகப் பலமானவர் என்று அறிஞர்களால் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இவர் கூஃபாவில் வசித்து வந்தார். ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃப் அஸ்ஸகஃபீயால் ஹிஜ்ரி 95 இல் கொல்லப்பட்டு ஷஹீதானார். இவர் ஃபிக்ஹ், தஃப்ஸீர் மற்றும் குர்ஆன் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கினார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): இப்னு அப்பாஸ், அப்துல்லாஹ் இப்னு அஸ்ஸுபைர், இப்னு உமர், அப்துல்லாஹ் பின் மஃகில் அல்மஸ்னீ, அதீ பின் ஹாதிம் அத்தய்யீ, அபூ மஸ்ஊத் அல் பத்ரீ, அபூ ஸயீத் அல்குத்ரீ, அபூ ஹுரைரா, அபூ மூஸா அல்அஷ்அரீ, அள்ளஹ்ஹாக் பின் கைஸ், அனஸ் பின் மாலிக், அம்ர் பின் மைமூன் அல்அவ்தீ

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அப்துல்லாஹ் பின் ஸயீத் பின் ஜுபைர், அப்துல் மலிக் பின் ஸயீத், யஃலா பின் ஹகீம், யஃலா பின் முஸ்லிம், அபூ இஸ்ஹாக் அஸ்ஸுபைஈ, முஹம்மத் பின் முஸ்லிம், ஆதம் பின் ஸுலைமான், அஷ்அத் பின் அபூ அஷ்அதா, அய்யூப் அஸ்ஸக்திஃயானீ, பகீர் பின் ஷிஹாப், ஸாபித் பின் அஜ்லான், ஹபீப் பின் அபூ ஸாபித்

வேறு பெயர்கள்: இப்னு அம் தஹ்மா


ஆதாரம்: muslimscholars.info (11050) · Should verify


حَدَّثَنَا يَحْيَى، عَنْ دَاوُدَ بْنِ قَيْسٍ، قَالَ: حَدَّثَنِي صَالِحٌ مَوْلَى التَّوْأَمَةِ عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ:

«جَمَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الظُّهْرِ، وَالْعَصْرِ، وَالْمَغْرِبِ، وَالْعِشَاءِ فِي غَيْرِ مَطَرٍ وَلَا سَفَرٍ» قَالُوا: يَا أَبَا عَبَّاسٍ، مَا أَرَادَ بِذَلِكَ؟ قَالَ: التَّوَسُّعَ عَلَى أُمَّتِهِ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-3235.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-3109.



  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஸாலிஹ் அவர்கள் பற்றி சிலர் பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளனர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.2 / 201 )

மேலும் பார்க்க : புகாரி-543 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.