🔗

முஸ்னது அஹ்மத்: 3242

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَتْلِ النَّحْلَةِ، وَالنَّمْلَةِ، وَالصُّرَدِ، وَالْهُدْهُدِ»

قَالَ يَحْيَى: وَرَأَيْتُ فِي كِتَابِ سُفْيَانَ: عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي لَبِيدٍ، عَنِ الزُّهْرِيِّ


3242. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தேனீ, எறும்பு, கீச்சாங்குருவி, (ஹுத்ஹுத் எனும்) கொண்டலாத்தி பறவை ஆகிய நான்கு உயிரினங்களைக் கொல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்.

அஹ்மத் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடர் ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்களின் நூலில், இப்னு ஜுரைஜ் —> அப்துல்லாஹ் பின் அபூலபீத் —> ஸுஹ்ரீ… என்று இருந்ததை நான் பார்த்தேன் என்று யஹ்யா பின் ஸயீத் அவர்கள் கூறினார்கள்.