தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-3242

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தேனீ, எறும்பு, கீச்சாங்குருவி, (ஹுத்ஹுத் எனும்) கொண்டலாத்தி பறவை ஆகிய நான்கு உயிரினங்களைக் கொல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்.

அஹ்மத் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடர் ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்களின் நூலில், இப்னு ஜுரைஜ் —> அப்துல்லாஹ் பின் அபூலபீத் —> ஸுஹ்ரீ… என்று இருந்ததை நான் பார்த்தேன் என்று யஹ்யா பின் ஸயீத் அவர்கள் கூறினார்கள்.

(முஸ்னது அஹமது: 3242)

حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ: حُدِّثْتُ عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ:

«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَتْلِ النَّحْلَةِ، وَالنَّمْلَةِ، وَالصُّرَدِ، وَالْهُدْهُدِ»

قَالَ يَحْيَى: وَرَأَيْتُ فِي كِتَابِ سُفْيَانَ: عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي لَبِيدٍ، عَنِ الزُّهْرِيِّ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-3242.
Musnad-Ahmad-Alamiah-3072.
Musnad-Ahmad-JawamiulKalim-3116.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்

2 . யஹ்யா பின் ஸயீத்

3 . இப்னு ஜுரைஜ்

4 . அப்துல்லாஹ் பின் அபூலபீத்

5 . ஸுஹ்ரீ இமாம்

6 . உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ்

7 . இப்னு அப்பாஸ் (ரலி)


இந்தக் கருத்தில் வரும் பல வகையான அறிவிப்பாளர்தொடர்களில், இப்னு ஜுரைஜ் —> அப்துல்லாஹ் பின் அபூலபீத் —> ஸுஹ்ரீ —> உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் —> இப்னு அப்பாஸ் (ரலி) —> நபி (ஸல்) என்ற மேற்கண்ட செய்தியின் அறிவிப்பாளர்தொடரையே அபூஸுர்ஆ, அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
ஆகியோர் சரியானதென முடிவு செய்துள்ளனர். மேலும் அவர்கள், இப்னு ஜுரைஜ் அவர்களின் நூலில் இவ்வாறு தான் இருந்தது என்று ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள் கூறியதாக யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அவர்களிடமிருந்து இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள் அறிவித்துள்ளதை குறிப்பிட்டுள்ளனர்.

1 . மேலும் ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக், மஃமர் ஆகியோர் முர்ஸலாக அறிவிக்கும் செய்திகளையும்,

2 . ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து இப்ராஹீம் பின் ஸஃத் அவர்கள் முத்தஸிலாக அறிவிக்கும் செய்திகளையும்,

3 . மஃமர் அவர்களிடமிருந்து அப்துர்ரஸ்ஸாக் அறிவிக்கும் முத்தஸிலான செய்திகளையும்,

4 . இப்னு ஜுரைஜ் வழியாக வரும் மற்றவகை அறிவிப்பாளர்தொடர்களையும் தவறு என்று குறிப்பிட்டுள்ளனர்.

(நூல்: இலலுல் ஹதீஸ்-2416)


 • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-23616-அப்துல்லாஹ் பின் அபூலபீத் அவர்கள் பற்றி இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
  இறப்பு ஹிஜ்ரி 233
  வயது: 75
  அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
  இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
  இறப்பு ஹிஜ்ரி 261
  வயது: 80
  அபூஸுர்ஆ, தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
  இறப்பு ஹிஜ்ரி 748
  வயது: 75
  இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
  இறப்பு ஹிஜ்ரி 852
  வயது: 79
  நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
  ஆகியோர் இவர் பலமானவர் என்ற கருத்தில் கூறியுள்ளனர்.
 • அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
  இறப்பு ஹிஜ்ரி 277
  வயது: 82
  நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
  இறப்பு ஹிஜ்ரி 303
  வயது: 88
  இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
  இறப்பு ஹிஜ்ரி 365
  வயது: 88
  போன்றோர் இவரை சுமாரானவர் என்ற கருத்தில் கூறியுள்ளனர்.
 • உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
  இறப்பு ஹிஜ்ரி 322
  அவர்கள் இவர் மதீனாவைச் சேர்ந்தவர்; கத்ரிய்யா கொள்கையுடையவர்; வணக்கசாலி; சில செய்திகளை மற்றவர்களுக்கு மாற்றமாக அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-5/148, அல்காமில்-5/397, தஹ்தீபுல் கமால்-15/483, அல்இக்மால்-8/141, அல்காஷிஃப்-3/181, தஹ்தீபுத் தஹ்தீப்-2/410, தக்ரீபுத் தஹ்தீப்-1/538)

எனவே இவரின் செய்திகள் மற்றவர்களுக்கு மாற்றமாக இல்லாவிட்டால் சரியானது அல்லது ஹஸன் தர செய்தியாகும்.


1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

இப்னு ஜுரைஜ் அவர்களின் அறிவிப்புகள்:

 • இப்னு ஜுரைஜ் —> அப்துல்லாஹ் பின் அபூலபீத் —> ஸுஹ்ரீ —> உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: அஹ்மத்-3242 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-870 ,

….


அப்துர்ரஸ்ஸாக் அவர்களின் அறிவிப்புகள்:

 • அப்துர்ரஸ்ஸாக் —> மஃமர் பின் ராஷித் பிறப்பு ஹிஜ்ரி 95
  இறப்பு ஹிஜ்ரி 153
  வயது: 58
  —> ஸுஹ்ரீ —> உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, அஹ்மத்-3066 , அப்து பின் ஹுமைத்-, தாரிமீ-2042 , இப்னு மாஜா-3224 , அபூதாவூத்-5267 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-, குப்ரா பைஹகீ-,


இப்ராஹீம் பின் ஸஃத் அவர்களின் அறிவிப்புகள்:

 • இப்ராஹீம் பின் ஸஃத் —> ஸுஹ்ரீ —> உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: ஃகரீபுல் ஹதீஸ்-, குப்ரா பைஹகீ-19374 , ஸுனன் ஸஃகீர் பைஹகீ-,


2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-3223 .


3 . ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-5728 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.