தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-3242

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி ✔

3242. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தேனீ, எறும்பு, கீச்சாங்குருவி, (ஹுத்ஹுத் எனும்) கொண்டலாத்தி பறவை ஆகிய நான்கு உயிரினங்களைக் கொல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்.

அஹ்மத் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடர் ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்களின் நூலில், இப்னு ஜுரைஜ் —> அப்துல்லாஹ் பின் அபூலபீத் —> ஸுஹ்ரீ… என்று இருந்ததை நான் பார்த்தேன் என்று யஹ்யா பின் ஸயீத் அவர்கள் கூறினார்கள்.


حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ: حُدِّثْتُ عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ:

«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَتْلِ النَّحْلَةِ، وَالنَّمْلَةِ، وَالصُّرَدِ، وَالْهُدْهُدِ»

قَالَ يَحْيَى: وَرَأَيْتُ فِي كِتَابِ سُفْيَانَ: عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي لَبِيدٍ، عَنِ الزُّهْرِيِّ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-3242.
Musnad-Ahmad-Alamiah-3072.
Musnad-Ahmad-JawamiulKalim-3116.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்

2 . யஹ்யா பின் ஸயீத்

3 . இப்னு ஜுரைஜ்

4 . அப்துல்லாஹ் பின் அபூலபீத்

5 . ஸுஹ்ரீ இமாம்

6 . உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ்

7 . இப்னு அப்பாஸ் (ரலி)


இந்தக் கருத்தில் வரும் பல வகையான அறிவிப்பாளர்தொடர்களில், இப்னு ஜுரைஜ் —> அப்துல்லாஹ் பின் அபூலபீத் —> ஸுஹ்ரீ —> உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் —> இப்னு அப்பாஸ் (ரலி) —> நபி (ஸல்) என்ற மேற்கண்ட செய்தியின் அறிவிப்பாளர்தொடரையே அபூஸுர்ஆ, அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
ஆகியோர் சரியானதென முடிவு செய்துள்ளனர். மேலும் அவர்கள், இப்னு ஜுரைஜ் அவர்களின் நூலில் இவ்வாறு தான் இருந்தது என்று ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள் கூறியதாக யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அவர்களிடமிருந்து இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள் அறிவித்துள்ளதை குறிப்பிட்டுள்ளனர்.

1 . மேலும் ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக், மஃமர் ஆகியோர் முர்ஸலாக அறிவிக்கும் செய்திகளையும்,

2 . ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து இப்ராஹீம் பின் ஸஃத் அவர்கள் முத்தஸிலாக அறிவிக்கும் செய்திகளையும்,

3 . மஃமர் அவர்களிடமிருந்து அப்துர்ரஸ்ஸாக் அறிவிக்கும் முத்தஸிலான செய்திகளையும்,

4 . இப்னு ஜுரைஜ் வழியாக வரும் மற்றவகை அறிவிப்பாளர்தொடர்களையும் தவறு என்று குறிப்பிட்டுள்ளனர்.

(நூல்: இலலுல் ஹதீஸ்-2416)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-23616-அப்துல்லாஹ் பின் அபூலபீத் அவர்கள் பற்றி இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    அபூஸுர்ஆ, தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஆகியோர் இவர் பலமானவர் என்ற கருத்தில் கூறியுள்ளனர்.
  • அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    போன்றோர் இவரை சுமாரானவர் என்ற கருத்தில் கூறியுள்ளனர்.
  • உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    அவர்கள் இவர் மதீனாவைச் சேர்ந்தவர்; கத்ரிய்யா கொள்கையுடையவர்; வணக்கசாலி; சில செய்திகளை மற்றவர்களுக்கு மாற்றமாக அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-5/148, அல்காமில்-5/397, தஹ்தீபுல் கமால்-15/483, அல்இக்மால்-8/141, அல்காஷிஃப்-3/181, தஹ்தீபுத் தஹ்தீப்-2/410, தக்ரீபுத் தஹ்தீப்-1/538)

எனவே இவரின் செய்திகள் மற்றவர்களுக்கு மாற்றமாக இல்லாவிட்டால் சரியானது அல்லது ஹஸன் தர செய்தியாகும்.


1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

இப்னு ஜுரைஜ் அவர்களின் அறிவிப்புகள்:

  • இப்னு ஜுரைஜ் —> அப்துல்லாஹ் பின் அபூலபீத் —> ஸுஹ்ரீ —> உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: அஹ்மத்-3242 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-870 ,

….


அப்துர்ரஸ்ஸாக் அவர்களின் அறிவிப்புகள்:

  • அப்துர்ரஸ்ஸாக் —> மஃமர் பின் ராஷித் பிறப்பு ஹிஜ்ரி 95
    இறப்பு ஹிஜ்ரி 153
    வயது: 58
    —> ஸுஹ்ரீ —> உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, அஹ்மத்-3066 , அப்து பின் ஹுமைத்-, தாரிமீ-2042 , இப்னு மாஜா-3224 , அபூதாவூத்-5267 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-, குப்ரா பைஹகீ-,

…


இப்ராஹீம் பின் ஸஃத் அவர்களின் அறிவிப்புகள்:

  • இப்ராஹீம் பின் ஸஃத் —> ஸுஹ்ரீ —> உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: ஃகரீபுல் ஹதீஸ்-, குப்ரா பைஹகீ-19374 , ஸுனன் ஸஃகீர் பைஹகீ-,

…


2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-3223 .


3 . ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-5728 .

…

அஹ்மத் இமாம்

இமாம் அஹ்மத்

முழுப்பெயர் : அஹ்மத் இப்னு முஹம்மத் இப்னு ஹன்பல் இப்னு ஹிலால் இப்னு அஸது அஷ்ஷைபானீ (முஸ்னத் அஹ்மத் என்ற ஹதீஸ் நூலைத் தொகுத்தவர்)

புனைப்பெயர் : அபூஅப்தில்லாஹ்

இயற்பெயர் : அஹ்மத்

தந்தைப்பெயர் : முஹம்மது

பிறந்த ஊர் : பக்தாதில் பிறந்தார்

பிறந்த நாள் :  ஹிஜ்ரி 164ம் ஆண்டு

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்:  கூஃபா, பஸரா, மக்கா, மதீனா, யமன், ஷாம், ஜஸீரா போன்ற உலகில் உள்ள பல பாகங்களுக்குப் பயணம் சென்றுள்ளார்.

முஸ்னத் அஹ்மத்

அஸ்ஸுஹுத்

ஃபலாயிலுஸ் ஸஹாபா (ஸஹாபாக்களின் சிறப்பு)

அல்அஷ்ரிபத்

அல்இலல்

அன்னாஸிஹ் வல்மன்ஸுஹ்

அல்மனாசிக்

கிதாபுல் ஃபிதன்

கிதாபுல் ஃபலாயிலி அஹ்லில் பைத்

முஸ்னத் அஹ்லில் பைத்

அல்அஸ்மாவு வல்குனா ( அறிவிப்பாளர்களின் பெயர்கள் தொடர்பானது)

கிதாபுத்தாரிக்

அல்முகத்தமு வல்முதஅக்கர் (முந்தியவர்கள் பிந்தியவர்கள்)

இப்ராஹீம் இப்னு காலித் அஸ்ஸன்ஆனி, இஸ்மாயீல் இப்னு உலய்யா, அபூபக்கர் இப்னு அய்யாஷ், இஸ்ஹாக் இப்னு யூசுஃப் அல்அஸ்ரக், ரபிஃ இப்னு உலய்யா, ரவ்ஹ் இப்னு உப்பாதா, சுஃப்யான் இப்னு உஐனா, தல்க் இப்னு நகயீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

முஹம்மது இப்னு இஸ்மாயீல் அல்புகாரி, முஸ்லிம் இப்னு  ஹஜ்ஜாஜ், அபூதாவூத், அபூபக்கர் அஹ்மத் இப்னு முஹ்ம்மத் இப்னு ஹானீல்பக்தாதீ, அபூஹாதம் முஹம்மத் இப்னு இத்ரீஸ், யஹ்யா இப்னு மயீன், அலீ இப்னு மதீனீ போன்ற அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 241ஆம் வருடம் ரபீவுல்அவ்வல் மாதத்தில் நோய்வாய்ப்பட்டார். பக்தாதில் இதே வருடம் வெள்ளிக்கிழமை அன்று மரணித்தார். அப்போது அவருக்கு 77 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

யஹ்யா பின் ஸயீத்

يحيى بن سعيد الأنصاري

இறப்பு: ஹிஜ்ரி 144 அல்லது அதற்குப் பிறகு, அல்ஹாஷிமியா, அன்பார்

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: யஹ்யா பின் ஸயீத் பின் கைஸ் பின் அம்ர் பின் ஸஹ்ல் பின் தஃலபா பின் அல்ஹாரிஸ் பின் ஸைத் பின் தஃலபா பின் ஃகனம் பின் மாலிக் பின் அன்நஜ்ஜார்

தந்தை பெயர்: ஸயீத் பின் கைஸ் பின் கஹ்த்

வம்சம்: அன்ஸாரீ, கஸ்ரஜ், பனூ மாலிக் பின் அன்நஜ்ஜார்

புனைப்பெயர்: அபூ ஸயீத், நீதிபதி

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, இராக், அல்ஹாஷிமியா, அன்பார், ஆப்பிரிக்கா

பிறப்பு: ஹிஜ்ரி 70க்கு முன்

இறப்பு: ஹிஜ்ரி 144 அல்லது அதற்குப் பிறகு, அல்ஹாஷிமியா, அன்பார்

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ ரஹ் அவர்கள் மதீனாவைச் சேர்ந்த மிகப் பலமான தாபிஈ ஆவார். அவர் மதீனாவின் நீதிபதியாகவும், அறிஞராகவும் திகழ்ந்தார். அஹ்மத் பின் ஹன்பல் ரஹ் அவர்கள், 'யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீயை விட மிக உறுதியானவர் யாரும் இல்லை' என்று கூறியுள்ளார்.

அந்நஸாயீ ரஹ் அவர்கள் இவரை 'மிகப் பலமானவர், உறுதியானவர்' என்றும் 'மிகப் பலமானவர், நம்பகமானவர்' என்றும் குறிப்பிட்டுள்ளார். அய்யூப் ரஹ் அவர்கள், 'யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீயை விட அறிவில் சிறந்த ஒருவரை நான் மதீனாவில் விட்டு வரவில்லை' என்று கூறியுள்ளார். லைஸ் பின் ஸஃத் ரஹ் அவர்கள், 'இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீயை விட யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீயை ஒத்த ஒருவரை நான் கண்டதில்லை.

இவ்விருவரும் இல்லையெனில் பல சுன்னத்துகள் மறைந்திருக்கும்' என்று கூறியுள்ளார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): அனஸ் பின் மாலிக், ஸயீத் பின் அல்முஸய்யப், அல்காஸிம் பின் முஹம்மத், உம்ரா பின்த் அப்துர்ரஹ்மான், அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான், முஹம்மத் பின் இப்ராஹீம் அத்தைமீ, அஸ்ஸுஹ்ரீ, நாஃபிஃ, அப்துல்லாஹ் பின் ஆமிர் பின் ரபீஆ, உபாதா பின் அல்வலீத், அம்ர் பின் யஹ்யா, ஹுமைத் பின் அபூஹுமைத்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அஸ்ஸுஹ்ரீ, மாலிக் இமாம், ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ, ஸுஃப்யான் பின் உயைனா, ஷுஃபா பின் அல்ஹஜ்ஜாஜ், அல்லைஸ் பின் ஸஃத், இப்னு இஸ்ஹாக், முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் பின் அபூதிஃப், அப்துர்ரஹ்மான் பின் அம்ர் அல்அவ்ஸாயீ, இப்ராஹீம் பின் தஹ்மான், யஸீத் பின் ஹாரூன், ஜஃபர் பின் அவ்ன்

வேறு பெயர்கள்: யஹ்யா பின் ஸயீத்


ஆதாரம்: muslimscholars.info (11062) · Should verify

இப்னு ஜுரைஜ்

ابن جريج

இறப்பு: ஹிஜ்ரி 150 அல்லது அதற்குப் பிறகு

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல் மலிக் பின் அப்துல் அஸீஸ் பின் ஜுரைஜ்

தந்தை பெயர்: அப்துல் அஸீஸ் பின் ஜுரைஜ்

வம்சம்: உமைய்யா கிளையின் அடிமை

புனைப்பெயர்: அபூ வலீத், அபூ காலித்

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: ரோம், மக்கா

பிறப்பு: ஹிஜ்ரி 80, ரோம்

இறப்பு: ஹிஜ்ரி 150 அல்லது அதற்குப் பிறகு

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

இப்னு ஜுரைஜ் ரஹ் அவர்கள் அப்துல் மலிக் பின் அப்துல் அஸீஸ் பின் ஜுரைஜ் என்ற இயற்பெயர் கொண்ட ஒரு மிகப் பலமான தாபிஈ ஆவார். இவர் ஹிஜ்ரி 80ல் ரோம் நகரில் பிறந்தார். மக்காவில் வசித்த இவர், ஹிஜ்ரி 150 அல்லது அதற்குப் பிறகு மரணமடைந்தார்.

இவர் ஹதீஸ் நூல்களைத் தொகுத்த முதல் அறிஞர்களில் ஒருவர்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): அதா பின் அபூரபாஹ், அஸ்ஸுஹ்ரீ, அம்ர் பின் தீனார், நாஃபிஉ, ஹிஷாம் பின் உர்வா, மூஸா பின் உக்பா, ஸைத் பின் அஸ்லம், ஸுலைமான் பின் அபூமுஸ்லிம் அல்அஹ்வல், ஸஃப்வான் பின் ஸுலைம் அல்மதனீ, தாவூஸ் பின் கைஸான், அப்துல்லாஹ் பின் உபைதுல்லாஹ் பின் அபூமுலைக்கா, ஸுஹைல் பின் அபூஸாலிஹ்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அப்துல் அஸீஸ் (இப்னு ஜுரைஜின் மகன்), முஹம்மத் பின் அப்துல் மலிக் பின் ஜுரைஜ், அப்துர்ரஹ்மான் பின் அம்ர் அல்அவ்ஸாஈ, அல்லைஸ் பின் ஸஃத், யஹ்யா பின் சயீத் அல்அன்ஸாரீ, ஹம்மாத் பின் ஸைத், அப்துல் வஹ்ஹாப் பின் அப்துல் மஜீத் அஸ்ஸகஃபீ, ஈஸா பின் யூனுஸ், வுஹைப் பின் காலித், மூஸா பின் தாரிக், அபூ குர்ரா, ஹஃப்ஸ் பின் கியாஸ்

வேறு பெயர்கள்: அப்துல் மலிக் பின் அப்துல் அஸீஸ் பின் ஜுரைஜ், அபூ வலீத், அபூ காலித்


ஆதாரம்: muslimscholars.info (11070) · Should verify

அப்துல்லாஹ் பின் அபூலபீத்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஸுஹ்ரீ இமாம்

محمد بن مسلم بن عبيد الله بن عبد الله بن شهاب بن عبد الله بن الحارث بن زهرة

இறப்பு: ஹிஜ்ரி 124, மதீனா

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: முஹம்மத் பின் முஸ்லிம் பின் உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் ஷிஹாப் பின் அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் பின் ஸுஹ்ரா

தந்தை பெயர்: முஸ்லிம் பின் உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ்

வம்சம்: குரைஷீ, பனூ ஸுஹ்ரா

புனைப்பெயர்: அபூ பக்ர்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, ஷாம்

பிறப்பு: ஹிஜ்ரி 51, மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 124, மதீனா

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

ஸுஹ்ரீ இமாம் ஹிஜ்ரி 51 ஆம் ஆண்டு மதீனாவில் பிறந்தார். இவர் ஹிஜ்ரி 124 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார். இவர் தாபிஈ தலைமுறையைச் சேர்ந்தவர்.

மதீனா மற்றும் ஷாம் ஆகிய இடங்களில் வாழ்ந்தார். இவர் ஹதீஸ் கலையில் மிகப் பலமானவர் ஆவார். இவர் ஏராளமான ஹதீஸ்களைத் தொகுத்தவர்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): இப்னு உமர், அனஸ் பின் மாலிக், ஜாபிர் பின் அப்துல்லாஹ், ஸயீத் பின் அல்முஸய்யிப், ஸுலைமான் பின் யஸார், உர்வா பின் அஸ்ஸுபைர், அல்கமா பின் வக்காஸ், அலீ பின் அல்ஹுஸைன் பின் அலீ, அல்காஸிம் பின் முஹம்மத், அபூ ஸலமா பின் அப்துர்ரஹ்மான், உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உத்பா, அதா பின் அபீ ரபாஹ்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அதா பின் அபீ ரபாஹ், உமர் பின் அப்துல்அஸீஸ், அம்ர் பின் தீனார், யஹ்யா பின் சயீத் அல்அன்ஸாரீ, அய்யூப் அஸ்ஸக்திஃயானீ, அப்துர்ரஹ்மான் பின் அம்ர் அல்அவ்ஸாயீ, இப்னு ஜுரைஜ், அம்ர் பின் ஷுஐப் பின் முஹம்மத், மாலிக் இமாம், மஃமர் பின் ராஷித், ஸுஃப்யான் பின் உயைனா, அல்லைஸ் பின் ஸஃத்

வேறு பெயர்கள்: இப்னு ஷிஹாப், அஸ்ஸுஹ்ரீ, முஹம்மத் பின் முஸ்லிம்


ஆதாரம்: muslimscholars.info (11013) · Should verify

உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ்

உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ்-அல்ஹுதலீ-அல்ஹுதலீ (ரஹ்) – Ubaydullah bin 'Abdullah bin 'Utba

இறப்பு: ஹிஜ்ரி 94, மதீனா

தரம்: மிகப் பலமானவர், ஃபகீஹ்


விபரங்கள்

இயற்பெயர்: உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உத்ஃபா பின் மஸ்ஊத் பின் ஃகாஃபில் பின் ஹபீப்

தந்தை பெயர்: அப்துல்லாஹ் பின் உத்ஃபா

வம்சம்: ஹுதலீ கோத்திரத்தைச் சேர்ந்தவர்

புனைப்பெயர்: அபூ அப்துல்லாஹ்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா

பிறப்பு: ஹிஜ்ரி 16, மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 94, மதீனா

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

இவர் தாபிஈ தலைமுறையைச் சேர்ந்தவர். மதீனாவின் ஏழு ஃபுக்கஹாக்களில் (மார்க்க அறிஞர்களில்) ஒருவராகவும், இமாமாகவும் திகழ்ந்தவர். ஹதீஸ், ஃபிக்ஹ், சீரா, தஃப்ஸீர் ஆகிய துறைகளில் ஆழ்ந்த அறிவு பெற்றிருந்தார்.

கவிதை இயற்றும் ஆற்றலும் இவருக்கு இருந்தது. உமர் பின் அப்துல் அஸீஸ் ரஹ் அவர்களின் ஆசிரியராகவும் இருந்தார். இவர் தனது வாழ்நாளின் பிற்பகுதியில் பார்வையை இழந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): அப்துல்லாஹ் பின் உத்ஃபா, அம்மார் பின் யாஸிர் ரலி, ஆயிஷா பின்த் அபூபக்ர் ரலி, இப்னு அப்பாஸ் ரலி, இப்னு உமர் ரலி, உஸ்மான் பின் ஹுனைஃப் ரலி, ஸஹ்ல் பின் ஹுனைஃப் ரலி, நுஃமான் பின் பஷீர் ரலி, அபூ ஸயீத் அல்குத்ரீ ரலி, அபூ தல்ஹா அல்அன்ஸாரீ ரலி, ஃபாத்திமா பின்த் கைஸ் ரலி, ஸைத் பின் காலித் அல்ஜுஹ்னீ ரலி

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அஸ்ஸுஹ்ரீ, ஸஃத் பின் இப்ராஹீம், அபூ அஸ்ஸினாத், ஸாலிஹ் பின் கைஸான், அராக் பின் மாலிக், மூஸா பின் அபூ ஆயிஷா, அவ்ன் பின் அப்துல்லாஹ் பின் உத்ஃபா, கஸீஃப் பின் அப்துர்ரஹ்மான் அல்ஜஸ்ரீ, ளம்ரா பின் ஸயீத், தல்ஹா பின் யஹ்யா பின் தல்ஹா, அப்துல்லாஹ் பின் உபைதா, அப்துல் மஜீத் பின் ஸஹ்ல் பின் அப்துர்ரஹ்மான்

வேறு பெயர்கள்: உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உத்ஃபா, உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ்


ஆதாரம்: muslimscholars.info (11004) · Should verify

இப்னு அப்பாஸ் (ரலி)

عبد الله بن عباس

இறப்பு: ஹிஜ்ரி 68, தாயிஃப்

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ்

தந்தை பெயர்: அல்அப்பாஸ் பின் அப்துல்முத்தலிப்

வம்சம்: குரைஷீ, ஹாஷிமீ

புனைப்பெயர்: அபூ அப்பாஸ், அல்ஹிப்ர், அல்பஹ்ர்

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா, தாயிஃப்

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 3, மக்கா

இறப்பு: ஹிஜ்ரி 68, தாயிஃப்

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தை அல்அப்பாஸ் பின் அப்துல்முத்தலிப் ரலி அவர்களின் மகனாவார். ஹிஜ்ரிக்கு முன் 3 ஆம் ஆண்டு மக்காவில் பிறந்த இவர், ஹிஜ்ரி 68 ஆம் ஆண்டு தாயிஃபில் மரணமடைந்தார். நபி (ஸல்) அவர்கள் இவருக்கு மார்க்க அறிவையும் குர்ஆன் விளக்கத்தையும் அருளுமாறு இருமுறை துஆ செய்தார்கள்.

இவர் தனது பரந்த அறிவின் காரணமாக 'அல்ஹிப்ர்' (அறிஞர்), 'அல்பஹ்ர்' (கடல்) என்று அழைக்கப்பட்டார். இவர் நபித்தோழர்களில் மிகப் பெரும் அறிஞர்களில் ஒருவராவார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): நபி (ஸல்), அல்அப்பாஸ் பின் அப்துல்முத்தலிப், உம்முல் ஃபழ்ல் லுபாபா பின்த் அல்ஹாரிஸ், மைமூனா பின்த் அல்ஹாரிஸ், அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), உஸ்மான் பின் அஃப்பான், அலீ பின் அபீதாலிப், அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப், முஆத் பின் ஜபல், அபூதர் அல்ஃகிஃபாரீ, உபை பின் கஅப்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): முஜாஹித் பின் ஜப்ர், காஸிம் பின் முஹம்மத் பின் அபூபக்ர், அதா பின் அபீரபாஹ், தாவூஸ் பின் கைஸான், வஹ்ப் பின் முனப்பிஹ், ஸயீத் பின் ஜுபைர், அலீ பின் அப்துல்லாஹ் பின் அப்பாஸ், அப்துல்லாஹ் பின் உமர், அபூத்துஃபைல் ஆமிர் பின் வாத்திலா, இக்ரிமா, அம்ர் பின் தீனார், நாஃபிஉ

வேறு பெயர்கள்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ், அபூ அப்பாஸ்


ஆதாரம்: muslimscholars.info (17) · Should verify

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.