أَمَرَهُ أَنْ يَخْرُجَ فَيُنَادِيَ أَنْ: «لَا صَلَاةَ إِلَّا بِقِرَاءَةِ فَاتِحَةِ الْكِتَابِ، فَمَا زَادَ»
9529. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஃபாதிஹதுல் கிதாப்) திருக்குர்ஆனின் தோற்றுவாயான அல்ஹம்து ஸூராவையும், அதனுடன் கூடுதலாக (மற்ற) வசனத்தையும் ஓதாமல் தொழுகை இல்லை என்று (மக்களிடம்) சென்று அறிவிக்கும்படி எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.