தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-9529

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

9529. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஃபாதிஹதுல் கிதாப்) திருக்குர்ஆனின் தோற்றுவாயான அல்ஹம்து ஸூராவையும், அதனுடன் கூடுதலாக (மற்ற) வசனத்தையும் ஓதாமல் தொழுகை இல்லை என்று (மக்களிடம்) சென்று அறிவிக்கும்படி எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

 


حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ جَعْفَرِ بْنِ مَيْمُونٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عُثْمَانَ النَّهْدِيُّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

أَمَرَهُ أَنْ يَخْرُجَ فَيُنَادِيَ أَنْ: «لَا صَلَاةَ إِلَّا بِقِرَاءَةِ فَاتِحَةِ الْكِتَابِ، فَمَا زَادَ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-9529.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-9324.



  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-10632-ஜஃபர் பின் மைமூன் என்பவர் பற்றி இவர் ஒரு பொருட்டே அல்ல என்று புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்களும், அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    போன்றோர் இவர் அந்தளவிற்கு பலமானவர் அல்ல என்றும் கூறியுள்ளனர்.
  • உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    அவர்கள், இவர் அறிவிக்கும் மேற்கண்ட செய்தியைப் போல் யாரும் அறிவிக்கவில்லை. இவர் மட்டுமே தனித்து அறிவிக்கிறார் என்று கூறியுள்ளார்.
  • அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் இவர் சுமாரானவர் என்று கூறியுள்ளார். தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள் இவரின் செய்தியை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்த்தே ஏற்கவேண்டும் என்று கூறியுள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவர் நம்பகமானவர் என்றாலும் தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/313, தக்ரீபுத் தஹ்தீப்-1/201)

மேற்கண்ட செய்தியின் வார்த்தை அமைப்பு மிக பலமான செய்திக்கு மாற்றமாக உள்ளது என்பதால் இது மேலும் பலவீனமடைகிறது…

மேலும் பார்க்க: புகாரி-772 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.