அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எல்லாத் தொழுகைகளிலும் (குர்ஆன்) ஓதப் பட வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கேட்கும் விதமாக ஓதியவற்றை உங்களுக்குக் கேட்கும் விதமாக ஓதுகிறோம். நபி (ஸல்) அவர்கள் சப்தமின்றி ஓதியதை நாங்களும் சப்தமின்றி ஓதுகிறோம்.
(தொழுகையில்) குர்ஆனின் அன்னை (யான அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) விடக் கூடுதலாக வேறு எதையும் நீ ஓதாவிட்டாலும் (உமது தொழுகை) நிறைவேறிவிடும். ஆயினும், அதைவிட அதிகமாக நீ ஓதினால், அதுவே சிறந்ததாகும்.
அத்தியாயம்: 10
(புகாரி: 772)حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي عَطَاءٌ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ
«فِي كُلِّ صَلاَةٍ يُقْرَأُ، فَمَا أَسْمَعَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْمَعْنَاكُمْ، وَمَا أَخْفَى عَنَّا أَخْفَيْنَا عَنْكُمْ، وَإِنْ لَمْ تَزِدْ عَلَى أُمِّ القُرْآنِ أَجْزَأَتْ وَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ»
Bukhari-Tamil-772.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-772.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
- இந்த செய்தியின் முதல் பகுதியும், மூன்றாவது பகுதியும் நபித்தோழரின் கூற்றாகும்.
இதன் முதல் பகுதி நபியின் கூற்றாக முஸ்லிம்-659 இல் வந்துள்ளது. இது தவறு என தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அபூமஸ்வூத் போன்றோர் கூறியுள்ளதாக இப்னு ரஜப் அவர்கள் கூறியுள்ளார்.
(நூல்: ஃபத்ஹுல் பாரீ-7/58)
- மேற்கண்ட செய்தியில் இமாம் ஓதும் முறை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி கூறப்பட்டுள்ளது.
பின்பற்றித் தொழக்கூடியவருக்கு உள்ள சட்டம் என்ன?
- இமாமைப் பின்பற்றித் தொழக்கூடியவர்கள், இமாம் சத்தமாக ஓதும் தொழுகைகளில் ஓதாமல் இமாம் ஓதுவதைக் கேட்கவேண்டும்; இமாம் சத்தமில்லாமல் ஓதும் தொழுகைகளில் குறைந்த பட்சம் அல்ஹம்து ஸூராவை அவசியம் ஓதவேண்டும் என்ற கருத்துடையவர்கள் கூறும் ஆதாரங்களே மிக பலமாக உள்ளன.
- இந்தக் கருத்தில் வரும் அனைத்து ஹதீஸ்களையும் பார்க்கும் போது இமாம் சப்தமிட்டு ஓதும் ரக்அத்களில் பின்பற்றித் தொழக் கூடியவர்கள் சப்தமிட்டு அல்ஹம்து அத்தியாயம் ஓதலாம் என்ற நிலையும்; சப்தமில்லாமல் அல்ஹம்து அத்தியாயத்தை ஓத வேண்டும் என்ற நிலையும் நபி (ஸல்) அவர்களின் இருவேறு காலக் கட்டத்தில் நடைமுறையில் இருந்துள்ளன. ஆனால் இந்த இரண்டுமே பிறகு மாற்றப்பட்டு விட்டன. மாற்றப்பட்டு விட்டன என்பதால் இவ்விரண்டையும் கடைப்பிடிக்க அவசியம் இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர்.
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அதாஉ பின் அபூரபாஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-, புகாரி-772 , முஸ்லிம்-659 , 660 , 661 , அபூதாவூத்-797 , நஸாயீ-969 , 970 , …
- அபுஸ்ஸாயிப் (அப்துல்லாஹ் பின் ஸாயிப்) —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: மாலிக்-224 , அஹ்மத்-, முஸ்லிம்-656 , 657 , 658 , இப்னு மாஜா-838 , அபூதாவூத்-821 , திர்மிதீ-2953 , நஸாயீ-909 , …
- அபூஉஸ்மான் அன்னஹ்தீ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-9529 , அபூதாவூத்-819 , 820 , குப்ரா பைஹகீ-2456 ,
2 . உபாதா பின் ஸாமித் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-311 .
3 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-841 .
4 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-2805 .
5 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-840 .
6 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
ஜாபிர், ஹாரிஸ், …
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-4704 , முஸ்லிம்-1472 ,
இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் மற்ற கூடுதல் ஹதீஸ்கள், தரம் பற்றி விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.
ஆய்வுக்காக: حكم قراءة الفاتحة …
கூடுதல் தகவல்: இமாம் சப்தமிட்டு ஓதும் தொழுகையில் ஃபாதிஹா அத்தியாயம் ஓத வேண்டுமா? .
சமீப விமர்சனங்கள்