பாடம்:
இமாமுக்கு பின்னால் (பின்பற்றித்தொழுபவர்) ஓதுதல்.
உபாதா பின் ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுபுஹ் தொழுகையை நடத்தினார்கள். கிராஅத் ஓதுவது அவர்களுக்கு சிரமமாகி விட்டது. அவர்கள் தொழுகையை முடித்ததும் “நீங்கள் உங்களுடைய இமாமிற்கு பின்னால் ஓதுகிறவர்களாக நான் காண்கிறேனே!” என்று கேட்டார்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஆம் (நாங்கள் ஓதுகிறோம்)“ என்று நாங்கள் கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவ்வாறு செய்யாதீர்கள். என்றாலும் உம்முல் குர்ஆன் (அல்ஹம்து சூராவை மட்டும் ஓதிக் கொள்ளுங்கள்). ஏனென்றால் யார் அதை ஓதவில்லையோ அவருக்குத் தொழுகை இல்லை“ என்று கூறினார்கள்.
(திர்மிதி: 311)بَابُ مَا جَاءَ فِي القِرَاءَةِ خَلْفَ الإِمَامِ
حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مَكْحُولٍ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ:
صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصُّبْحَ، فَثَقُلَتْ عَلَيْهِ القِرَاءَةُ، فَلَمَّا انْصَرَفَ قَالَ: «إِنِّي أَرَاكُمْ تَقْرَءُونَ وَرَاءَ إِمَامِكُمْ»، قَالَ: قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، إِي وَاللَّهِ، قَالَ: «لَا تَفْعَلُوا إِلَّا بِأُمِّ القُرْآنِ، فَإِنَّهُ لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِهَا»،
وَفِي البَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ، وَعَائِشَةَ، وَأَنَسٍ، وَأَبِي قَتَادَةَ، وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو،: «حَدِيثُ عُبَادَةَ حَدِيثٌ حَسَنٌ»،
وَرَوَى هَذَا الحَدِيثَ الزُّهْرِيُّ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الكِتَابِ»، «وَهَذَا أَصَحُّ»، ”
وَالعَمَلُ عَلَى هَذَا الحَدِيثِ فِي القِرَاءَةِ خَلْفَ الإِمَامِ عِنْدَ أَكْثَرِ أَهْلِ العِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالتَّابِعِينَ، وَهُوَ قَوْلُ مَالِكِ بْنِ أَنَسٍ، وَابْنِ المُبَارَكِ، وَالشَّافِعِيِّ، وَأَحْمَدَ، وَإِسْحَاقَ: يَرَوْنَ القِرَاءَةَ خَلْفَ الإِمَامِ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-286.
Tirmidhi-Shamila-311.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-286.
- மேற்கண்ட கருத்தில் மக்ஹூல் அவர்கள் வழியாக விரிவாக சம்பவத்துடன் வரும் செய்திகள் அனைத்தும் பலவீனமானவை என சில ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறுகின்றனர்.
காரணங்கள்:
1 . இந்தக்கருத்தில் வரும் செய்திகளின் அறிவிப்பாளர்தொடர்கள் குளறுபடியாக உள்ளன. (குளறுபடி இல்லையென சிலர் வாதிக்கின்றனர்)
2 . முஹம்மது பின் இஸ்ஹாக் தத்லீஸ் செய்துள்ளார். (என்றாலும் சில அறிவிப்பாளர்தொடர்களில் நேரடியாக கேட்டதாக வந்துள்ளது)
3 . மக்ஹூல், தத்லீஸ் செய்பவர்; இதில் மஹ்மூது பின் ரபீஉ (ரலி) அவர்களிடம் நேரடியாக கேட்டதாக அறிவிக்கவில்லை. (இதையும் எதிர்க்கருத்தினர் மறுக்கின்றனர்)
4 . மஹ்மூது பின் ரபீஉ (ரலி) அவர்களிடமிருந்து, ஸுஹ்ரீ அறிவிக்கும் போது சுருக்கமாக அறிவித்துள்ளார். பலமான இந்த அறிவிப்பிற்கு இது மாற்றமாக உள்ளது. மேலும் மஹ்மூது பின் ரபீஉ (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ரஜா பின் ஹைவா அவர்கள், இந்த சம்பவத்தை உபாதா பின் ஸாமித் (ரலி) அவர்களுடன் சம்பந்தப்படுத்தி மவ்கூஃபாக அறிவித்துள்ளார். (பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-3770 ) இதற்கு மாற்றமாக மக்ஹூல் அவர்களின் அறிவிப்பு உள்ளது.
5 . மேலும், குர்ஆன் ஓதப்படும்போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்! ( அல்குர்ஆன் 7:204) என்ற வசனத்தின்படியும், வேறு சில ஹதீஸ்களின் அடிப்படையிலும் இமாம் ஓதும் போது அதை மவுனமாக கேட்பது அவசியமாகும்.
- இந்த செய்தியை சரியானது எனக்கூறும் அறிஞர்களின் வாதங்களை விட பலவீனமானது என கூறும் அறிஞர்களின் வாதங்களே பலமாக உள்ளது. எனவே விரிவாக வரும் செய்திகள் பலவீனமானவைகளாகும். சுருக்கமாக வரும் செய்திகளே சரியானவையாகும்.
2 . இந்தக் கருத்தில் உபாதா பின் ஸாமித் (ரலி) வழியாக சுருக்கமாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-22677 , 22743 , 22749 , தாரிமீ-1278 , புகாரி-756 , முஸ்லிம்-651 , 652 , 653 , 654 , இப்னு மாஜா-837 , அபூதாவூத்-822 , திர்மிதீ-247 , குப்ரா நஸாயீ-984 , 985 , 7955 , நஸாயீ-910 , 911 , இப்னு குஸைமா-488 , இப்னு ஹிப்பான்-1782 , 1786 , 1793 , தாரகுத்னீ-1225 , 1226 ,
- விரிவாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-22671 , 22694 , 22745 , 22746 , 22750 , அபூதாவூத்-823 , 824 , திர்மிதீ-311 , குப்ரா நஸாயீ-994 , நஸாயீ-920 , இப்னு குஸைமா-1581 , இப்னு ஹிப்பான்-1785 , 1792 , 1848 , தாரகுத்னீ-1213 , 1214 , 1215 , 1216 , 1217 , 1218 , 1219 , 1220 , 1221 , 1222 , ஹாகிம்-869 , 870 , 871 , …
மேலும் பார்க்க: புகாரி-772 .
சமீப விமர்சனங்கள்