தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-224

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 49

சப்தமிட்டு ஓதாத தொழுகையில் இமாமுக்குப் பின்னால் ஓதுவது

உம்முல் குர்ஆனை (பாத்திஹா சூராவை) ஓதாமல் தொழுதால் அது குறைபாடு உடையதாகும். அது குறைபாடு உடையதாகும். பூர்த்தியாகாத குறைபாடு உடையதாகும் என நபி (ஸல்) அவாகள் கூற நான் கேட்டதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்களே, இமாமுக்குப் பின்னே பல் சமயங்களில் தொழுகிறேனே (என்ன செய்வது) என்று கேட்டேன். உடனே அவர்கள் என் கையில் விரலைக் குத்தி விட்டு, நீ உன் மனதிற்குள் ஓதிக் கொள். (காரணம்) எனக்கும் என் அடியானுக்கும் மத்தியில் சரி பாதியாக தொழுகையைப் பங்கிட்டுள்ளேன். ஒரு பாதி எனக்கும், மற்றொரு பாதி என் அடியானுக்குமாயிருக்கும். அதில் அவன் கேட்பது, என் அடியானுக்கு உண்டு என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேலும்ஒரு அடியான், அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.. என்று கூறினால் அப்போது அல்லாஹ் என் அடியான் புகழ்கிறான் என்று கூறுவான். அடியான் அர்ரஹ்மானிர் ரஹீம் என்று கூறுவான். அப்போது அல்லாஹ், என் அடியான என்னை போற்றுகிறான் என்று கூறுவான். மாலிகி யவ்மித்தீன் என அடியான் கூறுவான். அப்போது அல்லாஹ் என் அடியான் என்னை மகத்துவப்படுத்தி விட்டான் என்று கூறுவான். இய்யாக்க நஃபுது வ இய்யாக நஸ்தஈன் என அடியான் கூறுவான். இந்த வசனம் எனக்கும் என் அடியானுக்கும் இடையே உள்ளதாகும். என் அடியானுக்கு அவன் கேட்டது உண்டு என்று அல்லாஹ் கூறுவான். இஹ்தினஸ் ஸிராதல் முஸ்தகீம், ஸீராதல்லதீன அன் அம்த அலய்ஹிம் ஃகைரில் மஃக்ழூபி அலைஹிம் வலழ்ழால்லீன் என்று அடியான் கூறுவான். இவைகள் என் அடியானுக்குரியவைகளாகும். என் அடியானுக்கு அவன் கேட்பது உண்டு என்று அல்லாஹ் கூறுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

இதை ஹிஷாம் இப்னு ஸுஹ்ரா அவர்களின் அடிமை அபூஸாஇப் என்பவர் அறிவிக்கிறார்.

(இது புகாரி, முஸ்லிமிலும் இடம் பெற்றுள்ளது).

(முஅத்தா மாலிக்: 224)

49- بَابُ الْقِرَاءَةِ خَلْفَ الْإِمَامِ فِيمَا لَا يُجْهَرُ فِيهِ بِالْقِرَاءَةِ

حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنْ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْقُوبَ، أَنَّهُ سَمِعَ أَبَا السَّائِبِ، مَوْلَى هِشَامِ بْنِ زُهْرَةَ، يَقُولُ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ

«مَنْ صَلَّى صَلَاةً لَمْ يَقْرَأْ فِيهَا بِأُمِّ الْقُرْآنِ فَهِيَ خِدَاجٌ هِيَ خِدَاجٌ هِيَ خِدَاجٌ غَيْرُ تَمَامٍ»،

قَالَ، فَقُلْتُ: يَا أَبَا هُرَيْرَةَ إِنِّي أَحْيَانًا أَكُونُ وَرَاءَ الْإِمَامِ. قَالَ: فَغَمَزَ ذِرَاعِي، ثُمَّ قَالَ: اقْرَأْ بِهَا فِي نَفْسِكَ يَا فَارِسِيُّ
فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: “قَسَمْتُ الصَّلَاةَ بَيْنِي وَبَيْنَ عَبْدِي نِصْفَيْنِ، فَنِصْفُهَا لِي وَنِصْفُهَا لِعَبْدِي، وَلِعَبْدِي مَا سَأَلَ،

قَالَ رَسُولُ  اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اقْرَءُوا يَقُولُ الْعَبْدُ: {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} [الفاتحة: 2]، يَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: حَمِدَنِي عَبْدِي. وَيَقُولُ الْعَبْدُ: {الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1]. يَقُولُ اللَّهُ: أَثْنَى عَلَيَّ عَبْدِي، وَيَقُولُ الْعَبْدُ: {مالِكٍ يَوْمِ الدِّينِ} يَقُولُ اللَّهُ: مَجَّدَنِي عَبْدِي، يَقُولُ الْعَبْدُ: {إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ} [الفاتحة: 5]، فَهَذِهِ الْآيَةُ بَيْنِي وَبَيْنَ عَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ، يَقُولُ الْعَبْدُ: {اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ} [الفاتحة: 7]، فَهَؤُلَاءِ لِعَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-224.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




மேலும் பார்க்க: புகாரி-772 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.