தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-841

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ஃபாதிஹதுல் கிதாப்) திருக்குர்ஆனின் தோற்றுவாயான அல்ஹம்து ஸூராவை ஓதாமல் தொழப்படும் எந்தத் தொழுகையும் குறை உடையதாகும்; குறை உடையதாகும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

(இப்னுமாஜா: 841)

حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ عَمْرِو بْنِ السُّكَيْنِ قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ يَعْقُوبَ السَّلْعِيُّ قَالَ: حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«كُلُّ صَلَاةٍ لَا يُقْرَأُ فِيهَا بِفَاتِحَةِ الْكِتَابِ فَهِيَ خِدَاجٌ، فَهِيَ خِدَاجٌ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-841.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-832.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-47806-வலீத் பின் அம்ர் என்பவர் பற்றி இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள், இவர் சில நேரம் தவறிழைப்பவர் என்று கூறியிருந்தாலும், இவர் சுமாரானவர் என்று நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    இமாம் கூறியுள்ளார். தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள் இவரை பலமானவர் என்றும், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவரை ஸதூக் என்ற தரத்திலும் கூறியுள்ளனர்.

(நூல்: அஸ்ஸிகாத்-9/228, தஹ்தீபுத் தஹ்தீப்-4/321, அல்காஷிஃப்-4/458, தக்ரீபுத் தஹ்தீப்-1/1040)

இந்த செய்தியை அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள், ஹஸன் ஸஹீஹ் என்று கூறியுள்ளார். (இதன் பொருள் இந்த அறிவிப்பாளர்தொடர் ஹஸன்தரம். இந்தக் கருத்து வேறு சில நபித்தோழர்கள் வழியாக வந்திருப்பதால் (ஷாஹித் என்ற அடிப்படையில்) ஸஹீஹ் என்பதாகும்.

3 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-6903 , 7016 , இப்னு மாஜா-841 , அல்முஃஜமுல் அவ்ஸத்-3704 ,

…தாரகுத்னீ-1223 ,

மேலும் பார்க்க: புகாரி-772 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.