பாடம்:
பகலில் (தொழும்) தொழுகைகளில் குர்ஆன் ஓதுதல்.
அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் குர்ஆன் வசனங்களை ஓத வேண்டும். நபி (ஸல்) அவர்கள் எந்த ரக்அத்தில் எங்களுக்குக் கேட்கும்படி சப்தமாக ஓதினார்களோ அந்த ரக்அத்தில் நாங்களும் உங்களுக்குக் கேட்கும்படி சப்தமாக ஓதுகிறோம். அவர்கள் எந்த ரக்அத்தில் எங்களுக்குக் கேட்காத வகையில் சப்தமின்றி அமைதியாக ஓதினார்களோ நாங்களும் அந்த ரக்அத்தில் உங்களுக்குக் கேட்காத வகையில் அமைதியாக ஓதுகிறோம் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்.
(நஸாயி: 969)بَابُ قِرَاءَةِ النَّهَارِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ رَقَبَةَ، عَنْ عَطَاءٍ قَالَ: قَالَ أَبُو هُرَيْرَةَ:
«كُلُّ صَلَاةٍ يُقْرَأُ فِيهَا، فَمَا أَسْمَعَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْمَعْنَاكُمْ، وَمَا أَخْفَاهَا أَخْفَيْنَا مِنْكُمْ»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-969.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-958.
சமீப விமர்சனங்கள்