🔗

நஸாயி: 1876

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

«مَا مِنْ مُسْلِمَيْنِ يَمُوتُ بَيْنَهُمَا ثَلَاثَةُ أَوْلَادٍ لَمْ يَبْلُغُوا الْحِنْثَ إِلَّا أَدْخَلَهُمَا اللَّهُ بِفَضْلِ رَحْمَتِهِ إِيَّاهُمُ الْجَنَّةَ»، قَالَ: ” يُقَالُ لَهُمْ: ادْخُلُوا الْجَنَّةَ، فَيَقُولُونَ: حَتَّى يَدْخُلَ آبَاؤُنَا، فَيُقَالُ: ادْخُلُوا الْجَنَّةَ أَنْتُمْ وَآبَاؤُكُمْ “


1876. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பருவ வயதை அடையாத மூன்று குழந்தைகள் மரணித்துவிட்ட எந்தவொரு முஸ்லிம் பெற்றோரையும், அல்லாஹ் தனது அளப்பரிய அருளால் சொர்க்கத்தில் நுழையச் செய்வான்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மரணித்த குழந்தைகளிடம்), ‘நீங்கள் சொர்க்கத்தில் நுழையுங்கள்’ என்று கூறப்படும். அதற்கு அவர்கள், ‘எங்கள் பெற்றோர்கள் வரும் வரை (நாங்கள் நுழைய மாட்டோம்)’ என்று கூறுவார்கள். மீண்டும் அவர்களிடம், ‘நீங்களும் உங்கள் பெற்றோர்களும் சொர்க்கத்தில் நுழையுங்கள்’ என்று கூறப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)