«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمُجَثَّمَةِ، وَلَبَنِ الْجَلَّالَةِ، وَالشُّرْبِ مِنْ فِي السِّقَاءِ»
பாடம்:
அசுத்தங்களை உண்டு வாழும் பிராணிகளின் பாலை குடிப்பதற்கு வந்துள்ள தடை.
4448. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (வேட்டையாடும் பயிற்சிக்கு) இலக்காக கட்டிவைக்கப்பட்டு (கொல்லப்பட்ட) பிராணிகளை (உண்பதை)யும், அசுத்தங்களை உண்டு வாழும் பிராணிகளின் பாலையும், தண்ணீர் பைகளின் முனையிலிருந்து நேரடியாக (உதடு வைத்து) நீர் அருந்துவதையும் தடைசெய்தார்கள்.