أَتَيتُ رَسولَ الله صَلى الله عَلَيه وسَلم لأُبايِعَهُ فَقالَ: انطَلِقي فاختَضِبي ثُمَّ تَعالَي أُبايِعكِ.
11952. உம்மு ஸுஃபர்-ஸவ்தா பின்த் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பைஅத் எனும்) உறுதி மொழி எடுப்பதற்காக வந்தேன். அப்போது அவர்கள் என்னிடம், “திரும்பிச் சென்று (கைகளுக்கு) மருதாணியிடுவீராக! பிறகு என்னிடம் வருவீராக! நான் உம்மிடம் (பைஅத் எனும்) உறுதிமொழியை ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஆஸிம்