🔗

திர்மிதி: 1080

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

أَرْبَعٌ مِنْ سُنَنِ المُرْسَلِينَ: الحَيَاءُ، وَالتَّعَطُّرُ، وَالسِّوَاكُ، وَالنِّكَاحُ

وَفِي البَاب عَنْ عُثْمَانَ، وَثَوْبَانَ، وَابْنِ مَسْعُودٍ، وَعَائِشَةَ، وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، وَأَبِي نَجِيحٍ، وَجَابِرٍ، وَعَكَّافٍ.: «حَدِيثُ أَبِي أَيُّوبَ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ».

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خِدَاشٍ البَغْدَادِيُّ قَالَ: حَدَّثَنَا عَبَّادُ بْنُ العَوَّامِ، عَنِ الحَجَّاجِ، عَنْ مَكْحُولٍ، عَنْ أَبِي الشِّمَالِ، عَنْ أَبِي أَيُّوبَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَ حَدِيثِ حَفْصٍ.

وَرَوَى هَذَا الحَدِيثَ هُشَيْمٌ، وَمُحَمَّدُ بْنُ يَزِيدَ الوَاسِطِيُّ، وَأَبُو مُعَاوِيَةَ، وَغَيْرُ وَاحِدٍ، عَنِ الحَجَّاجِ، عَنْ مَكْحُولٍ، عَنْ أَبِي أَيُّوبَ،

«وَلَمْ يَذْكُرُوا فِيهِ، عَنْ أَبِي الشِّمَالِ، وَحَدِيثُ حَفْصِ بْنِ غِيَاثٍ وَعَبَّادِ بْنِ العَوَّامِ أَصَحُّ»


அத்தியாயம்: 9

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ள திருமணம் பற்றிய செய்திகள்.

பாடம்:

திருமணம் செய்வதின் சிறப்பு பற்றியும், அதை வலியுறுத்தியும் வந்துள்ள செய்திகள்.

1080. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான்கு காரியங்கள் நபிமார்களின் வழிமுறையைச் சார்ந்தது. அவை

1 . வெட்கம்.

2 . வாசனை திரவியம் பூசுவது.

3 . மிஸ்வாக் செய்வது (பல் துலக்குவது)

4 . திருமணம் செய்வது.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தப் பாடப் பொருளில் உஸ்மான் (ரலி), ஸவ்பான் (ரலி), இப்னு மஸ்வூத் (ரலி), ஆயிஷா (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), அபூநஜீஹ் (ரலி), ஜாபிர் (ரலி), அக்காஃப் (ரலி) ஆகியோர் வழியாகவும் ஹதீஸ்கள் வந்துள்ளன.

அபூஅய்யூப் (ரலி) வழியாக வரும் (மேற்கண்ட) செய்தி ஹஸன் ஃகரீப் என்ற தரத்தில் அமைந்த செய்தியாகும்.

இந்த செய்தி வேறு சில அறிவிப்பாளர்தொடர்களிலும் வந்துள்ளது. அவற்றில் மக்ஹூல் அவர்களுக்கும், அபூஅய்யூப் (ரலி) அவர்களுக்குமிடையில் அபுஷ்ஷிமால் என்பவர் இடம்பெறவில்லை.

அபுஷ்ஷிமாலை கூறி அறிவிக்கும் ஹஃப்ஸ், அப்பாத் பின் அவ்வாம் ஆகியோர் அறிவிக்கும் செய்தியே மிகச் சரியானதாகும்.