தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1080

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அத்தியாயம்: 9

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ள திருமணம் பற்றிய செய்திகள்.

பாடம்:

திருமணம் செய்வதின் சிறப்பு பற்றியும், அதை வலியுறுத்தியும் வந்துள்ள செய்திகள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான்கு காரியங்கள் நபிமார்களின் வழிமுறையைச் சார்ந்தது. அவை

1 . வெட்கம்.

2 . வாசனை திரவியம் பூசுவது.

3 . மிஸ்வாக் செய்வது (பல் துலக்குவது)

4 . திருமணம் செய்வது.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தப் பாடப் பொருளில் உஸ்மான் (ரலி), ஸவ்பான் (ரலி), இப்னு மஸ்வூத் (ரலி), ஆயிஷா (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), அபூநஜீஹ் (ரலி), ஜாபிர் (ரலி), அக்காஃப் (ரலி) ஆகியோர் வழியாகவும் ஹதீஸ்கள் வந்துள்ளன.

அபூஅய்யூப் (ரலி) வழியாக வரும் (மேற்கண்ட) செய்தி ஹஸன் ஃகரீப் என்ற தரத்தில் அமைந்த செய்தியாகும்.

இந்த செய்தி வேறு சில அறிவிப்பாளர்தொடர்களிலும் வந்துள்ளது. அவற்றில் மக்ஹூல் அவர்களுக்கும், அபூஅய்யூப் (ரலி) அவர்களுக்குமிடையில் அபுஷ்ஷிமால் என்பவர் இடம்பெறவில்லை.

அபுஷ்ஷிமாலை கூறி அறிவிக்கும் ஹஃப்ஸ், அப்பாத் பின் அவ்வாம் ஆகியோர் அறிவிக்கும் செய்தியே மிகச் சரியானதாகும்.

(திர்மதி: 1080)

9 – أَبْوَابُ النِّكَاحِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
بَابُ مَا جَاءَ فِي فَضْلِ التَّزْوِيجِ، وَالحَثِّ عَلَيْهِ

حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ الحَجَّاجِ، عَنْ مَكْحُولٍ، عَنْ أَبِي الشِّمَالِ، عَنْ أَبِي أَيُّوبَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

أَرْبَعٌ مِنْ سُنَنِ المُرْسَلِينَ: الحَيَاءُ، وَالتَّعَطُّرُ، وَالسِّوَاكُ، وَالنِّكَاحُ

وَفِي البَاب عَنْ عُثْمَانَ، وَثَوْبَانَ، وَابْنِ مَسْعُودٍ، وَعَائِشَةَ، وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، وَأَبِي نَجِيحٍ، وَجَابِرٍ، وَعَكَّافٍ.: «حَدِيثُ أَبِي أَيُّوبَ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ».

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خِدَاشٍ البَغْدَادِيُّ قَالَ: حَدَّثَنَا عَبَّادُ بْنُ العَوَّامِ، عَنِ الحَجَّاجِ، عَنْ مَكْحُولٍ، عَنْ أَبِي الشِّمَالِ، عَنْ أَبِي أَيُّوبَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَ حَدِيثِ حَفْصٍ.

وَرَوَى هَذَا الحَدِيثَ هُشَيْمٌ، وَمُحَمَّدُ بْنُ يَزِيدَ الوَاسِطِيُّ، وَأَبُو مُعَاوِيَةَ، وَغَيْرُ وَاحِدٍ، عَنِ الحَجَّاجِ، عَنْ مَكْحُولٍ، عَنْ أَبِي أَيُّوبَ،

«وَلَمْ يَذْكُرُوا فِيهِ، عَنْ أَبِي الشِّمَالِ، وَحَدِيثُ حَفْصِ بْنِ غِيَاثٍ وَعَبَّادِ بْنِ العَوَّامِ أَصَحُّ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-1080.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-996.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-1535-அபுஷ்ஷிமால் பின் ளிபாப் என்பவர் பற்றி எனக்கு தெரியாது என்றும், இந்த ஒரு செய்தியில் மட்டுமே இவர் இடம்பெறுகிறார் என்றும் அபூஸுர்ஆ அவர்கள் கூறியுள்ளார். இமாம் தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஆகியோர் இவர் அறியப்படாதவர் என்று கூறியுள்ளனர்.
  • இவரிடமிருந்து மக்ஹூல் அவர்கள் மட்டுமே அறிவித்துள்ளார் என்பதாலும், இவரைப்பற்றி ஏற்கத்தக்க நற்சான்று இல்லை என்பதாலும் இவர் அறியப்படாதவர் ஆவார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-9/390, அல்காஷிஃப்-5/60, தக்ரீபுத் தஹ்தீப்-1/1159)

  • மேலும் இந்த செய்தியை ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹுஷைம், முஹம்மது பின் யஸீத், அபூமுஆவியா போன்றோர் மக்ஹூல் அவர்களுக்கும், அபூஅய்யூப் (ரலி) அவர்களுக்குமிடையில் அபுஷ்ஷிமால் என்பவரை கூறாமல் அறிவித்துள்ளனர். ஆனால் ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹஃப்ஸ், அப்பாத் பின் அவ்வாம் ஆகியோர் மக்ஹூல் அவர்களுக்கும், அபூஅய்யூப் (ரலி) அவர்களுக்குமிடையில் அபுஷ்ஷிமால் என்பவரை கூறி அறிவித்துள்ளனர்.
  • பலமானவரின் கூடுதல் தகவல் ஏற்கப்படும் என்பதால் திர்மிதீ இமாம் அவர்கள், மக்ஹூல் அவர்களுக்கும், அபூஅய்யூப் (ரலி) அவர்களுக்குமிடையில் அபுஷ்ஷிமாலை கூறி அறிவிக்கும் ஹஃப்ஸ், அப்பாத் பின் அவ்வாம் ஆகியோர் அறிவிக்கும் செய்திக்கே முன்னுரிமை தந்துள்ளார். அபுஷ்ஷிமால் பலவீனமானவர் என்பதால் இந்த செய்தி பலவீனமடைகிறது.
  • இந்தக் கருத்து வேறுபாடு ஏற்பட்டதற்கு ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் தான் காரணம் என்றும், இவர் அதிகம் தவறிழைப்பவர் என்றும் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    இமாம் அவர்கள் விவரித்துள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-6/123)

  • ஹுஷைம் போன்றோரின் அறிவிப்பை ஏற்றாலும் ராவீ-45233-மக்ஹூல் அவர்கள், அபூஅய்யூப் (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என்றும் விமர்சனம் உள்ளதால் இது பலவீனமாகிறது)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

(குறிப்பு: மேற்கண்ட செய்தியில் الحياء அல்ஹயா (வெட்கம்) என்ற வார்த்தை வந்திருப்பது தவறு என்றும் الختان அல்கிதான் (சுன்னத் என்னும் விருத்தசேதனம்) செய்தல் என்று இருப்பதே சரியானது என்றும் ஹதீஸ்கலை அறிஞர்களில் சிலர் கூறியுள்ளனர்)

1 . இந்தக் கருத்தில் அபூஅய்யூப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • மக்ஹூல் —> அபூஅய்யூப் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-10390 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-1802 , அஹ்மத்-23581 ,

  • மக்ஹூல் —> அபுஷ் ஷிமால் —> அபூஅய்யூப் (ரலி)

பார்க்க: திர்மிதீ-1080 , அல்முஃஜமுல் கபீர்-4085 ,

2 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

3 . ..

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-5889 , முஸ்லிம்-436 ,

…இன்ஷா அல்லாஹ் மற்ற தகவல்கள் பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.